வெப்ப யுகக் கீதை

 

இப்போது

உன்னை மூழ்க்கி அமுக்குவது
வெப்ப யுக சூரியன் !
விழித்துப் பார் !
பூகோள முன் சீர்நிலை
மீளாத வாறு
கோளாறாகப் போச்சு !
நீரில்லை 
என்று அழுதாய் 
நேற்று !
இடிமின்னல்
ஓட்டை உடைத்து உனது
வீட்டை மூழ்க்குது
வருண பகவான் தான்!
கருணை யற்று !
காற்றில்லை
என்று என்மேல் மண்வாரி
தூற்றினாய் !
சூறாவளி அடித்து
மூச்சை நிறுத்தியது !
தெரிந்து கொள்
மூன்றாம்
லியுக யுத்தம் இது !
 
 
போப்பாண்டவர் படித்த
பைபிள் கூறும்
பிரளயப் பேரழிவு அல்ல !
இயற்கை
எச்சரிக்கை செய்யும் 
இச்சிறு காட்சிகள் யாவும்
அச்ச மூட்டும் 
ஒத்திகை !
 
வெப்ப யுகச் சீர்கேடு !
தப்ப முடியாது 
யுகே யுகே !
கரிவாயு
வெளி வீச்சுக்கு
வரம்பு,
வரிகள் போடு !
வடிகட்டு !
உருமாற்று !
கரி வாயுவை
இரசாயனத் தொழில்மூலம்
எரிவாயு வாக
மாற்றம் செய்வாய் !
கட்டணம் விதிப்பாய் 
கரிவாயுக்கு !
வருமானம்
பேரிடர் கையாள.
பேரழிவு
ஈடு செய்வதற்கு.
யுகே ! யுகே !
 
 
===========
Series Navigationசூடேறிய பூமியில் நாமென்ன செய்யலாம் ?பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை