வேடிக்கை

வீதியின் வழியே சென்ற
பிச்சைக்காரனின் தேவை
உணவாய் இருந்தது
வழிப்போக்கனின் தேவை
முகவரியாய் இருந்தது
கடந்து சென்ற
மாணவர்களின் கண்கள்
மிரட்சியுடன் இருந்தது
குறிசொல்பவள் தேடினாள்
தனது பேச்சுக்குத் தலையாட்டும்
ஒருத்தியை
சோப்பு விற்பவள்
யோசித்துக் கொண்டே
வந்தாள்
இன்று யார் தலையில்
கட்டலாமென்று
தபால்காரரின்
கையிலிருக்கும் கடிதங்களின் கனம்
சற்றே குறைந்தது
நடைப்பயிற்சி செய்பவர்கள்
எய்யப்பட்ட அம்புபோல
விரைந்து சென்றார்கள்
ஐஸ்கிரீம் வணடியில்
எண்பதுகளில் வெளிவந்த
பாடல்கள் ஒலித்தது
காய்கறிகாரனின் கவனமெல்லாம்
வியாபாரத்திலேயே இருந்தது
குழந்தைகளின் விளையாட்டை
தெய்வம் கண்டுகளித்தது.

Series Navigationபயணம்“கானுறை வேங்கை” விமர்சனம்