ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !

This entry is part 29 of 31 in the series 4 நவம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப் பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்று மாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தர மாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -43)

நிழலும், நிஜமும் !

 

நான் சிமிட்டும் போது எனது கண்கள் சீராய்க் காணும்
நாள் முழுதும் அவர் காண்பவை புறக்கணிப் பாகும்
தூங்கும் போது கனவில் என் கண்கள் காண்ப துன்னை
கருமை ஒளிரும், ஒளிக் கற்றை இருள் நோக்கிப் பாயும்.
பிறகுன் நிழல் மட்டும், வெளிச்ச மாகத் தகுதி பெற்றிடும்.
எப்படி உன்னிழல் வடிவம் மகிழ வைக்கும் காட்சி தரும் ?
பளிச்செனத் தெரியும் பகலுக்குன் மிகத் தெளிவு வெளிச்சம்.
மறைந்தி ருக்கும் மனக் கண்முன் உன்னிழல் மின்னிடும்
எப்படிச் சொல்வேன்  என் கண்கள் ஆசிகள் பெற்றதை
இன்றைய வாழ்நாளில் நான் உற்று நோக்கி உன்னை
கனவுக் காட்சியில் பூரண மற்ற உனது கவர்ச்சி நிழல்
உறங்கும் கண்கள், ஒளியற்றுப் போய் நிலைத்திடும்
உன்னைக் காணும் வரை எல்லா நாட்களும் இரவுதான் !
எல்லா இரவும் வெளிச்ச நாள் கனவுகள் உனைக் காட்டின்

+++++++++

SONNET 43

When most I wink then do mine eyes best see,
For all the day they view things unrespected,
But when I sleep, in dreams they look on thee,
And darkly bright, are bright in dark directed.
Then thou whose shadow shadows doth make bright
How would thy shadow’s form, form happy show,
To the clear day with thy much clearer light,
When to unseeing eyes thy shade shines so!
How would (I say) mine eyes be blessed made,
By looking on thee in the living day,
When in dead night thy fair imperfect shade,
Through heavy sleep on sightless eyes doth stay!
All days are nights to see till I see thee,
And nights bright days when dreams do show thee me.

++++++++++++++

Sonnet Summary : 43

The next sonnet series on absence begins here with Sonnet 43 and continues through Sonnet 58. Throughout this new sequence, different meanings of the same words are developed in versatile constructions and juxtapositions. Note the curious double use of “shadow” and “form” in “Then thou, whose shadow shadows doth make bright, / How would thy shadow’s form form happy show . . .” Three rhyme links to Sonnet 44 — “so”/ “slow,” “stay”/”stay,” and “thee”/”thee” — reveal a closely unified theme. Also, “darkly bright . . . bright in dark” in Sonnet 43 is echoed in “bright,” “light,” “night,” “sightless,” “nights,” and “night’s bright” in the other sonnets.In Sonnet 43, the poet surmises that his only consolation in being separated from the youth is at night, when he can dream of the youth’s beauty. Images of reversal are prevalent, and all of them address how the young man affects the poet. For example, the poet says that at night he is content because he best sees the youth in his dreams: The youth — a “shade” — casts off light that illuminates his beauty. But during the day, the poet grieves, for then the youth’s absence is most acute. These paradoxical situations between day and night and between the youth’s presence and absence are most fully described in the sonnet’s concluding couplet: “All days are nights to see till I see thee, / And nights bright days when dreams do show thee me.” The poet’s world is upside down.

++++++++++++++++++++++++

Information :
1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 1, 2012

Series Navigationதிருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்ஒரு வைர‌ விழா !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *