ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1   

This entry is part 8 of 12 in the series 1 ஜனவரி 2023

வெனிஸ்  கருமூர்க்கன் 

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] 
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா 

++++++++++++++++++++++++ 

[ வெனிஸ் கருமூர்க்கன் ] 

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 1 

++++++++++++++++ 

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] 

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] 

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] 

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது] 

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] 

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் 

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது] 

எமிலியோ : புருனோவின் மனைவி. 

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். 

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. 

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.  

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு 

++++++++++++++++++ 

image.jpeg

புரூனோ & ஷைலக் 

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் 

[ வெனிஸ் கருமூர்க்கன் ] 

அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1 

++++++++++++++++ 

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] 

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] 

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] 

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது] 

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] 

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் 

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது] 

எமிலியோ : புருனோவின் மனைவி. 

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். 

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. 

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.  

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு 

++++++++++++++++++ 

அங்கம் : 1 காட்சி : 2  பாகம் : 1  

இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு. 

நேரம் :  மங்கிய மாலைப் பொழுது. 

பங்கு கொள்வோர் ; ஒத்தல்லோ, புருனோ, மற்றும் பணியாட்கள்  

கையில் தீப்பந்தமுடன் ஆரவாரமோடு நுழைகிறார்.  

புருனோ: [ஒத்தல்லோவைப் பார்த்து]  ஒத்தல்லோ நான் போரில் பலரைக் கொன்றிருக்கேன்.  ஆயினும்  முன்திட்ட மிட்டுக் கொல்வதை மனம் ஒப்பவில்லை.  அப்படிச் செய்ய என் மனசாட்சி  இடம் தராது  கேடுகள் நிகழ்ந்திருக்கும்.   சில சமயம் என் குறிக்கோள் தவறி , எனக்கு தோல்விகள் கிடைத்தன.  பத்தில் ஒன்பது தடவை, எதிரியை அடிவயிற்றில்,  கத்தியால் குத்திக் கொல்லவே நான் திட்ட மிட்டேன்.         

ஒத்தல்லோ;  இல்லை.  இந்த வழி முறைு அப்படியே இருக்கட்டும். 

புருனோ:  இல்லை.  அவன் கவனமின்றி, ஆனால்  மிக  அழுத்தமாய்ச் சொன்னான் உங்களுக்கு எதிராக.  உங்கள் மதிப்புக்காக என் கைகள் அவன் மீது படவில்லை.   ஆனால்  சொல்லுங்கள் எனக்கு,   உங்களுக்கு மெய்யாகவே திருமணம்  ஆகி விட்டதா ?  கோமான் சிசாரோ பெரிதும் மதிக்கப் படுபவர்.  அவர் சமூகத்தில் முன்னணி ஆதிக்கம் உள்ளவர்.  பேராற்றல் உடைய வெனிஸ் நகர டியூக்கு சமமானவர்.   சிசாரோ கட்டாயப் படுத்தி மணவிலக்கு செய்ய வைப்பார்.   தன்னால் இயன்ற மட்டும் முயன்று சட்டப்படி உங்களை தடுப்பார்.  ஒரு புகார்  விண்ணப்பத்தை  மன்றத்துக்கு அனுப்புவார். 

ஒத்தல்லோ:   அவர்  எந்த கீழான வினைக்கும் போகட்டும்.  நானிந்த வெனிஸ் நகரத்துக்கு செய்த பணிகள் அவர் புகாருக்கு எதிராக மிஞ்சிப் பேசும்.   அவை இன்னும் பொதுநபர்  காதுக்கு எட்டவில்லை.  நான் என்னைப் பற்றி பீற்றிக் கொள்கிறேன்.  நானும் அரச வம்சாவளியில் வந்தவன் தான்.  எனக்கு கிடைத்த வெகுமதிகளே அதை வெளிப்படுத்தும் .   இவற்றை நான் பணிவாகச் சொல்கிறேன்.    எடுப்பாகத் தெரியும் பதவி உயர்வை நான் பெற்றுள்ளேன்.  தெரிந்து கொள் புருனோ.  நான் மோனிகாவை காதலிக்கிறேன்.  இல்லா விட்டால், தடையில்லா எனது சுய உரிமையை இழப்பேன்.  எல்லா கடல் சொத்துகளை நான் பிறர் காலடியில் வைப்பேன்.  … ஆனால்  அங்கே பார் தீப் பந்தங்களோடு யார் வருகிறார் என்பதை ? 

[காஸ்ஸியோ தீப் பந்தங்கள் ஏந்திய அதிகாரிகள் தொடர வருகிறான்.] 

புருனோ:  [யார் வருவதென்று  தெரியாது]   தந்தையும் அவரது  சகாக்களும் தூண்டப்பட்டு வருகிறாரா !   நீவீர் உள்ளே போய் ஒளிந்து கொள்வீர். 

ஒத்தல்லோ:   நானில்லை அது.  என்னை அவர்கள் பார்க்க வேண்டும்.  எனது தனிப்பட்ட பண்புகள், என் பட்டம், பதவி, எனது நல்வினை எனக்குத் துணை புரியும்.  வருவது அவர்கள் தானா ? 

புருனோ:  இல்லை, கடவுள் சாட்சியாய்,  அவராய் இருக்க முடியாது..   

ஒத்தல்லோ:  டியூக்கின் வேலை ஆட்களா ?   வருவது என் லெஃப்டினென்ட்டா ? 

[எதிர்வரும் குழுவைப் பார்த்து]   மாலை வந்தனம் தோழர்களே !  என்ன செய்தி ? 

காஸ்ஸியோ:   தளபதியாரே !  டியூக் உங்களை எதிர்பார்க்கிறார்.   உடனே நீங்கள் அவர் முன் போய் நிற்க வேண்டுமாம்.  சீக்கிரம் செல்வீர் . 

ஒத்தல்லோ:  சைப்பிரஸில் என்ன பிரச்சனை என்று தெரியுமா உனக்கு ? 

காஸ்ஸியோ:  ஏதோ ஓர் பிரச்சனை அங்கே எனக்குத் தெரிந்த வரை. அவசரச் சூழ்நிலை.   டியூக்கின் அதிகாரிகள் படையாட்கள்  பன்னிரெண்டு  பேரை அனுப்பியுள்ளார்.   ஒரு குழு இன்றிரவு போனது;  அடுத்த நாளிரவு ஒன்றும், அதற்குப் பிறகு ஒன்றும் போகும்.  உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார், டியூக். நீங்கள் இல்லத்தில்  இல்லாததால், உங்களைத் தேடி மூன்று குழு போயுள்ளது.   

ஒத்தல்லோ:  நல்லது நீ என்னைக் கண்டு சொன்னது.  இல்லத்தில் சொல்லிவிட்டு போகிறேன் உன்னோடு.   

[ஒத்தல்லோ போகிறான்] 

காஸ்ஸியோ:  [புருனோவைப் பார்த்து]  காப்டன் !  ஒத்தல்லோ இங்கு ஏன் ஒதுங்கி உள்ளார் ? 

புருனோ:   இன்றிரவு ஒத்தல்லோ  வர்த்தகக் கப்பல்   ஒன்றில் பயணம் செய்கிறார்.   அதில் உள்ள பொக்கிசம் சட்டப்படி அவருக்கு கிடைத்தால் அவர் வாழ்நாள் முழுதும் கொண்டாட்டம் தான்.   

காஸ்ஸியோ:  எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

புருனோ:  இன்றுதான் ஒத்தல்லோ திருமணம் முடிந்தது. 

காஸ்ஸியோ:  யாரந்த மாது ? 

புருனோ:  சொல்கிறேன்; போகலாமா ? 

காஸ்ஸியோ:   அதோ அடுத்தோர் படையாள் கூட்டம் உங்களைத் தேடி வருது.   

[சிசாரோ & ஷைலெக் நுழைகிறார், உறவினர் தீப் பந்தங்களுடன் தொடர்கிறார்] 

புருனோ:  சிசாரோ வருகிறார் பெருஞ் சினத்தோடு  உங்கள் மீது, ஜெனரல் ஒத்தல்லோ !  எச்சரிக்கை செய்கிறேன்.  எங்காவது மறைந்து கொள்வீர். 

ஒத்தல்லோ:  [சிசாரோவை நோக்கி]  வருக, வருக. 

ஷைலக்:  [சிசாரோவை நோக்கி]  அவன் ஆப்பிரிக்க  மூரினத்தைச் சேர்ந்த கருப்பன்.  

சிசாரோ:  அவனை அடித்து மிதிப்பீர்.  போங்கள். 

[இரு கூட்டத்தாரும் வாள் உருவி சண்டை இடுகிறார். 

புருனோ:  [ஷைலக்கை நோக்கி]  உன்னை நான் தாக்கப் போகிறேன்.  [புருனோ தாக்குவது போல் பாசாங்கு செய்கிறான். ]     

ஒத்தல்லோ:   [தன் வாளை உருவி]  உங்கள் ஒளிவீசும் வாளை உள்ளே இடுவீர் . அவை பனித்துளி பட்டு துருப்பிடித்து விடும்.  [சிசாரோவைப் பார்த்து]   உங்கள் முதிய வயது ஆயுதங்களை விட வலிமை பெற்றது.    

சிசாரோ:  [கோபத்துடன்]  தீமைத் திருடனே !  எங்கே என் மகளை ஒளித்து வைத்துள்ளாய் ?  சபிக்கப் பட்ட நீ, சூனியம் செய்து அவளை மயக்கி வைத்திருக்கிறாய்.   அவளை மந்திரச் சங்கிலி கட்டிப் போடாது.  அறியாச் சிறுமி, இளம் அழகி,  புன்னகை மங்கை.   செல்வீக வாலிபரை மணம் புரிய மறுத்து வந்தவள்,  பூத உடம்பு, கருங் குரங்கு ,  உன்னோடு எப்படி ஓடிப் போவாள் ? சுற்றுப் புறத்தார் சிரிக்க மாட்டாரா ?  பார்ப்போர் காண வெறுக்கும் பயங்கரத் தோற்றம் உனக்கு.  நாட்டார் தீர்ப்பு அளிக்கட்டும்.  பல நாட்கள் முயன்று, உன்  காம க் கவர்ச்சியால் அறியாப் பெண்ணை தீய வினைகளில் வஞ்சித்து சிக்க வைத்துள்ளாய்.  அதற்குன்னை சிறையில் தள்ளி, சட்ட விரோதச் செயலில் ஈடு பட்டாய் என்று வாட வேண்டும்.  [உற்றார், உறவினரை நோக்கி]  அவனைப் பிடித்துக் கொள்வீர். திமிறினால் அடிக்க தயங்காதீர். 

Series Navigationஎங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *