ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 14 in the series 29 ஏப்ரல் 2018

என்.எஸ்.வெங்கட்ராமன்
வேதியியல் பொறியாளர்
(nsvenkatchpnnai@gmail.com)

கடந்த சில காலங்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும் அல்லது புதியதாக அமைக்கப்படும் தொழிற் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எதிர்;;க்கப்படும் தொழிற்சாலைகளில், தூத்துக்குடியில் பல வருடங்களாக இயங்கி வரும்; ஸ்டெர்லைட் நிறுவனமும் ஒன்று.

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும்; சுமார் 1000 நபர்களுக்கும், மேலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் சுமார் 1000 நபர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பங்கள் கடுமையான நிலைக்கு தள்ளப்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் எதிர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பு. இதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறித்து இவர்கள் கவலை கொள்வதாக தெரியவில்லை.

ஸ்டெர்லைட் நிர்வாகம், சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டை முழுவதும் மறுப்பது மாத்திரம் அல்;;லாமல், சில வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் தான்;, ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் கூறிவருகிறது.

இந்த நிலையில், தற்போது கடந்த மாதம் வரை வாளாவிருந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மேலும் அனுமதியளிப்பதை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கூடாது என்பதற்கு கீழே தரப்பட்டுள்ள 10 காரணங்கள் முக்கியமானதாக கருதப்படவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ் நாடு அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் எதிர்காலத்தை குறித்து முடிவு எடுப்பதே சரியான அனுகுமுறையாக இருக்கும்.

1. முதல் தாமிரம்,தொழிற்சாலை அல்ல

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் (copper) என்ற உலோகம் தயாரிக்கப்படுகிறது. இதே முறையில் தான் இந்துஸ்தான் காப்பர் என்ற ஆலை ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டிலும், பிர்லா காப்பர் என்ற ஆலை குஜராத்திலும் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றன. பிர்லா காப்பர் ஆலையின் உற்பத்தி திறன் ஸ்டெர்லைட் ஆலையை விட கூடுதலாகும். அங்கெல்லாம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. யாரும் எதிர்க்கவும் இல்லை. தமிழ் நாட்டில் மாத்திரம் எதிர்ப்பது ஏன் ?

2. முதல் கந்தக அமிலத்தொழிற்சாலை அல்ல

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் ((Sulphuric acid) ) தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. தமிழ் நாட்டில் மூன்று ஆலைகள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியிலேயே கீரின் ஸ்டார் பெர்டிலைசர் (Green Star Fertilisers) என்ற ஆலை இயங்கி வருக்pறது. அங்கெல்லாம் எந்தவிதமான எதிர்ப்பும் இ;ல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மாத்;திரம் எதிர்ப்பது ஏன் ?

3. நீதிமன்றத்தின் தீர்ப்பு

2009ம் ஆண்டு, எதிர்ப்பாளர்களின் நிர்பந்தத்தால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை உடனே தடை செய்து ஆலையை இயங்க அனுமதி அளித்தது.

2013ம் ஆண்டு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்ததாக கூறி, ரூபாய் 100 கோடி அபராதம் கட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆலை இயங்க தடை விதிக்கப்படவில்லை.

2013ம் ஆண்டு தமிழ் நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று மீண்டும் ஆணையிட்டது. ஆனால், National Green Tribunal பிரச்சினைகளை ஆராய்ந்த பின,; தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ் நாடு அரசின் முடிவு தவறு என்று கூறி ஆலையை இயங்க அனுமதி அளித்தது. இந்த நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

நீதி மன்றங்களின் உத்தரவு படி, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவு அளித்தாலும், எதிர்ப்பாளர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துக் கொண்டே வருகின்றனர். நீதிமன்;றங்களின் உத்தரவுகளை மதிப்பது தான் நாகரீகமான அனுகுமுறை.

4. புற்று நோய் ஏற்படுத்துகிறதா ?

எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையினால் புற்று நோய், ஆஸ்மா, சரும ரோக பிரச்சினைகள் ஏற்படுவதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. புற்று நோய் ஏற்படுவதின் காரணங்களை கண்டறிய உலகெங்கிலும் பல ஆராய்ச்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. சரியான காரணங்கள் இது வரை துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.

சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு புற்று நோய் உள்ளது. மைசூரில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை . இங்கு ஆஸ்மா பிரச்சினை உள்ளது. கல்கத்தாவில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு சரும ரோக பிரச்சினைகள் உள்ளன.

ஆதாரம் இல்லாமல், புரளிகளை கிளப்பிவிடுவது மிகவும் தவறு.

5. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப்புகை போகிறதா ?

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு சென்னை அலுவலகத்தில், தமிழ் நாட்டில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகையிலிருந்து (emission) நச்சுத்தன்மை உள்ளதா என்று கண்டறிய கருவிகள் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன.

நச்சு வாயு கசிந்தால் உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே தெரிந்து கொள்ளலாம்.

கடந்த சில வருடங்களில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளிவந்ததாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தகவல் தெரிவிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்தவிதமான எச்சரிக்கை விடுவித்ததாகவும் தகவல் இல்லை.

6. நிலத்தடி நீருக்கு மாசு ஏற்பட்டுள்ளதா ?

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதில்லை. அவை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் ஆலையிலேயே உபயோகிக்கப்பட்டு வருகிறது.

7. தொழிற்சாலையை மூடலாமா ?

எந்த தொழிற்சாலைகளிலும், சில தருணங்களில் எதிர்பாராதவிதமாகவோ அல்லது கவனக் குறைவினாலோ, விபத்துகள் ஏற்படக் கூடும். இத்தகைய விபத்துகளுக்கு வளர்ந்த நாடுகளிலுள்ள தொழிற்சாலைகளும் விதிவிலக்கல்ல. உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான தொழிற் நிறுவனங்கள் உள்ளதாக கருதப்படும் டியு பான்ட் ((DuPont) என்ற அமெரிக்கா நிறுவனத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

விபத்துகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படுகின்றன. பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும், தேவையான சலுகைகளும் தரப்படும்.

விபத்துகள் நட்ந்தது என்று கூறி தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடப்படுவது அபூர்வம். சிறிய, மிதமான விபத்துகள் ஏற்பட்டதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டால், தொழிற்சாலைகளே இல்லாத நிலைமை தான் ஏற்படும்.

தினமும் சாலை விபத்துகளும், அடிக்கடி விமான விபத்துகளும், ரயில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பயணங்களை நிறுத்திவிடுவோமா ?

8. வேலை இழப்புகளை தாங்க முடியுமா ?

ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்த்து சுமார் 2000 நபர்கள் வேலை செய்கின்றனர். வேலை செய்யும் நபர்களின் ஊதியத்தை நம்பி 4 அல்லது 5 குடும்ப உறுப்பினர்கள் வரையுள்ள குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தால், பாதிக்கப்படுவோர்கள் நிலை என்னவாகும ?;. அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்குமா ? வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு புறம் கூற, மறு புறம் வேலை இழப்பிற்கு வழி வகுக்கலாமா ?

9. ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்களின் எண்ண ஒட்டங்களை அறிய வேண்டாமா ?

ஸ்டெர்லைட் ஆலையின் அருகிலேயே அங்கு வேலை செய்யும் பல ஊழியர்களின் குடும்பங்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த செய்தியும் இல்லை.

அங்கு வேலை செய்யும் ஊழியர்களும், சமுதாய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தான். பல நாட்களாக அங்கே வேலை செய்து வருகின்றனர். அவர்களது கருத்தை யார் கேட்டார்கள் ?;.

10. தமிழ்நாட்டின் தொழிற் திட்டங்களை தீர்மானிக்க வேண்டியவர்கள் யார் ?

சம்பந்தப்பட்ட துறையில் தகுந்த அனுபவமும், ஆற்றலும் இல்லாத சில அரசியல்வாதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எந்த திட்டத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க தங்களுக்கு தகுதியுள்ளது என்று எண்ணுவது வருந்தத்தக்க நிலை.

நிலைமையை குறித்து, விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், நிபுணர்களும் விளக்கம் அளிக்கும் போது, அவர்களது கருத்துகளை துச்சமாக கருதி நிராகரிப்பது ஆக்கபூர்வமான அனுகுமுறை அல்ல.

ஸ்டெர்லைட் ஆலை போன்ற ஆலைகளை குறித்து சந்தேகம் எழுமானால், விபரங்கள் தெரிந்த அனுபவமுள்ள நபர்களின் கருத்தை கேட்டு முடிவெடுப்பது தான் தமிழ் நாடு அரசிற்குள்ள கடமை.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை குறித்து, சந்தேகம் எழுந்த போது, இத்தகைய அனுகுமுறையை பின் பற்றி விவரமும், அனுபவமும், உள்ளவர்களின் கருத்தை அறிந்து முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முடிவெடுத்ததால் தான் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் இல்லாமல் இயங்கி கொண்டிருப்பதை தற்போது காண்கிறோம்.

நன்றி

என்.எஸ்.வெங்கட்ராமன்

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்தொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *