நானும் நம்பிராஜனும்

This entry is part 32 of 53 in the series 6 நவம்பர் 2011

நம்பிராஜன் என்கிற விக்கிரமாதித்யன் நம்பியை நான் சந்தித்தது ஒரு சுவையான அனுபவம்.
இருபது வருடங்களாக இடைவெளீவிட்டு விருட்சம் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கும் அழகியசிங்கர் என்கிற சந்திரமௌலியும் ரிஷி என்கி ற பெயரில் கவிதை எழுதிவரும் லதா ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் நடத்திய ‘ பொருனை ‘ என்கிற இலக்கிய அமைப்பின் கூட்டம் ஒன்று ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி ஸ்டேட் வங்கியின் மாடியில் நடந்தது. பல இடங்களிலிருந்து கவிஞர்கள் அங்கே ஒன்று கூடியிருந்தார்கள். கிழக்கு பதிப்பகம் பா.ராகவன் இணைய பதிப்பகம் ஒன்றினை ஆரம்பிக்கும் முயற்சியாக சென்னை மயிலாப்பூர் அட்ரங்கு ஒன்றில் கூட்டம் கூட்டியபோது கவிஞர் வைகைச்செல்விதான் என்ன்னிடம் கேட்டார்: ‘ பொருனை’ கூட்டம் கிண்டியிலே நடக்குதே போகலியா?’
சிறகு சிற்றிதழ் ஐந்தாறு மாதங்கள் ஆனபிறகு நடந்த சந்திப்பு இது. படைப்புகளுக்காக அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கொஞ்சம் சின்ன வயசும் கூட.. போய்தான் பார்ப்போமே என்று போனேன்.
எப்போது அழகியசிங்கர் கூட்டங்களில் நிரந்தர சிறப்புப் பேச்சாளராக இருக்கும் கவிஞர் ஞானக்கூத்தனின் தலைமையில் முதல் பாதி அரங்கு நடந்து முடிந்து விட்டிருந்தது.
மதிய உணவுக்குப் பிறகு வட்டமாக போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள். பல தெரியாத முகங்கள்.. இணைய பத்திரிக்கையில் பிரபலமாகி கலைமகளில் ஒதுங்கி இப்போது எங்கும் காணப்படாத அண்ணா கண்ணனை அங்குதான் சந்தித்தேன்.
‘கள்ளூண்பது தமிழர் பண்பாடு’ என்பது பற்றி ஏகத்துக்கு கூச்சலும் குழப்பமும்..
தாடி வைத்த பெரியவர் ஒருவர் ‘ போட்டு விட்டு ‘ வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.கூடவே கண்ணாடி அணிந்த கறுப்பர் ஒருவர்.. தமிழர்தான்..
ஞானக்கூத்தன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர எண்ணி அனைவரையும் தங்கள் கருத்தைச் சொல்லச் சொன்னார்.
‘என்ன பேசினாலும் அவங்க பேசினதுதான் நிக்கும் .. வெள்ளை செவத்துல கறுப்புப் புள்ளீ மாதிரி..’என்றேன் நான் என் முறை வந்தபோது..
கூட்ட இறுதியில்ல் ஒரே அமளி துமளிதான்.. இதில் கைகலப்புவேறு.
கூட்டத்தில் பேசிய தாடிப் பெரியவர் என்னருகில் வந்தார்..
‘நீங்க யாரு புதுசா இருக்கே?’
‘சிறகு இரவிச்சந்திரன்.. சிற்றிதழ் நடத்தறேன்’\
‘நான் கவிஞர் விக்கிரமாதித்யன்..இத பயன்படுத்திக்குங்க ‘ என்று கற்றை கவிதைகளை என் கையில் திணீத்தார்.
இன்றளவும் ‘ கவிதை இருக்குதா ‘ என்று கேட்டு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு சுவாரஸ்யமான விசயம் . எதற்கும் வளைந்து கொடுக்காத விக்கிரமாதித்யனின் எழுத்துக்களும் வளையாத கோடுகளைக் கொண்டதாகவே இருக்கும்.
பார்கவன், நம்பிராஜன், விக்கிரமாதித்யன் நம்பி என பல பெயர்களீல் எழுதும் மூத்த கவிஞர் அவர்.
என்ன ஒரு சங்கட என்றால் காலை மாலை என்று எப்போது சந்தித்தாலும் மேல் சஞ்சாரத்திலேயே இருப்பார்.
கள்ளூண்ணுவது தமிழர் பண்பாடு.

Series Navigationஉறக்கமற்ற இரவுஅணையும் விளக்கு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *