100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சி

Spread the love

08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ….

த.திலீபன்
அலைப்பேசி : 75022 72075,     94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com
வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in

அன்புடையீர் வணக்கம்

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் நமது பண்பாடும் கலை இலக்கிய அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் அழிந்துவருவதும் நாம் அனைவரும் அறிந்ததே!
இது என்றும் இல்லாத அளவில் இன்று நடந்து வருகிறது. இந்த அழிவைத் தடுப்பதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
அந்த வழியில் சிறுவனான நான் நமது அறிவுக்களஞ்சியமான திருக்குறளைப் பரப்புகின்ற பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.
மேலும் அழிந்துவரும் கலைகளில் ஒன்றாக கவனகக்கலை  உள்ளது. அதைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
அதன் ஒருபகுதியாக 100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட கவனகக் கலை மன்றத்தாரால் 08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது.
நமது கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தின் மீட்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிவகங்கை மாவட்ட கவனகக்கலை மன்றத்திற்கும் எனக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் அன்பன்
த.திலீபன்
அலைப்பேசி : 75022 72075,     94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com
வலைப்பதிவு : www. thirukkuraldhileeban.in
Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்