கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

This entry is part 20 of 43 in the series 29 மே 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎழுதும் இந்த எழுத்தாணியை 

 

எடுக்காது செம்மறி ஆடு !

பிரிக்கும் இடைவெளிப்

பேதங்கள் இல்லை நமக்குள்ளே !

காதலின் புனித பீடம் இது !

கண்களைக் கசக்கி

காதலைக் காதலோடு நோக்கு

மீண்டும் !

 

++++++++++++

 

“வாசலில் யாரெனக் கேட்டாய்”

“உனது அன்புத்

தாசன்” என்றேன் நான் !

“எதற்கு வந்தாய் ?”

என்று நீ கேட்டாய்.

“வழிபட்டு உன் பாதத்தை

வணங்கிட வந்தேன்.”

“எத்தனை காலம் காத்தி ருப்பாய்

எனக்கு நீ” என்றாய் !

“மறு பிறவி நான்

எடுக்கும் வரை” என்று பதில்

விடுத்தேன் !

 

++++++++++++

 

வாசலில் பேசிக் களித்தோம்.

நேசம் உன்னத மெனப்

பெருமிதம் எனக்கு ! ஆயினும்

இழந்து நிற்பேன்

இவ்வுலகம் எனக் களித்த

இன்பக் கொடையை !

“இதற்கெலாம் சான்றுகள்

வேண்டும்” என்று

தூண்டுவாய் !

“ஏங்கி நான்

இப்படிக் கண்ணீர் பொழிவதை

எடை போடுவதா ?”

 

+++++++++++

 

“என்ன அடிப்படையில் வந்தாய் ?”

என்று விளித்தாய் !

“நீ அளித்த கற்பனை அதற்கு

நியாயம் சொன்னது.”

“உனது குறிக்கோள் என்ன ?”

என்றெனைக் கேட்டாய்.

“இருவருக்குள் ஏற்படும் நட்புறவு ”

என்று பதில் அளித்தேன் !

“எதை எதிர்பார்க் கிறாய்

என்னிடம் ?” என்றாய்

“காத லெனும் பாசத்தை” என்று

ஓதினேன்.

 

 

***************

தகவல் :

 

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

 

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

 

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

 

3. Life of Rumi in Wikipedia

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

 

Series Navigationபிறப்பிடம்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *