ஏன் மட்டம்

This entry is part 14 of 46 in the series 5 ஜூன் 2011

பூமிக்குப் போர்வையாய்

பச்சைக் கம்பளம் –

அந்தப் புல்வெளியில் தெரிகிறது

அகிலத்தின் அழகு,

அழித்து அதைமேயும்

ஆட்டு மந்தை,

ஆடுகளை வேட்டையாடும்

ஓநாய்க் கூட்டம்,

ஓட ஓட விரட்டி

ஓநாயை; கொல்லும்

கொம்பன் காளை,

அதன்

ஜம்பம் பலிப்பதில்லை

சிங்கத்திடம் –

அடிபட்டு ஆவி துறக்கிறது..

இப்படித்தான் செல்கிறது..

இதையே சொல்கிறது

இயற்கைச் சட்டம் !

 

இந்த மனிதன் மட்டும்

ஏன் இத்தனை மட்டம் –

தனியே ஒரு சட்டம்

தன் இனத்தையே

அழித்திட மட்டும் !

 

செண்பக ஜெகதீசன்

Series Navigationசபிக்கப்பட்ட உலகு -2மெய்ப்பொருள் காண்ப தறிவு
author

செண்பக ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *