This entry is part 26 of 46 in the series 5 ஜூன் 2011



வருபவர்
தூரத்துச் சொந்தம் என அறிந்தும்

தடம் மாறிப்போன
நண்பன் எனத் தெரிந்தும்

முகம் தெரிந்தும்

பெயர் தெரியாதவன் என புரிந்தும்

பேசச் செய்திகளின்றி
விருப்பமுமற்று
தவிர்த்தோ
அல்லது வெற்றுப் புன்னகையுடனோ
முடிகின்றன
நிறைய சந்திப்புகள்

பொன்.குமார்

Series Navigationமனிதநேயர் தி. ஜானகிராமன்ரகசிய சுனாமி