This entry is part 45 of 51 in the series 3 ஜூலை 2011

*
கை நீளுதலை யாசகம் என்கிறாய்
யாசித்து பெறுவதாக இருப்பதில்லை
எனக்கு தேவையான பார்வை

பேசாதிருத்தல் அமைதி என்கிறாய்
பேசி அடைவதாக இருந்ததில்லை
நான் பெற்ற மௌனம்

மரணித்தல் வரம் என்பாய்
எதன் பொருட்டு தவம் இருந்தேனோ
அதிலில்லை
யாசகமோ
ஒரு மௌனமோ
குறைந்தபட்சம் ஒரு பார்வையோ

*****
–இளங்கோ

Series Navigationஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்புஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்