பகுப்பாய்வின் நிறைவு

This entry is part 38 of 38 in the series 10 ஜூலை 2011

கவனமற்று இருக்கின்ற
அனைத்து
இருப்பு கொள்கைகள்
எழுகின்ற
கேள்வியை
பற்றிக்கொள்கிறது
தன் முனைப்பு .

கேள்விகள் அழகியல்
தன்மை வாய்ந்தவை
கூடுதலான
மனத்திரை உடையவை
முக்காலத்திலும்
தொன்றுத்தொட்டு
வழக்கம் உடையவை .

அதன் விடையில்
நிறைவு பெறாது
அடுத்த நிலைக்கு
ஆயுத்தப்படுத்தும்
மற்றுமொரு கேள்விகள்
தொடர்கின்ற அழகியல்
இயக்கமாகிறது .

தன் பகுப்பாய்வின்
தீவிரத்தன்மை ஒவ்வொன்றும்
அர்த்தமுள்ளதாக
மாற்றுகிறது கற்பனையின்
வரையறைகள் .

கேள்விகளும் பதில்களும்
ஒன்றையே
தேடுதலின் நோக்கமாக
கொண்டுள்ளது
அவை
எப்பொழுதும்
நிறைவு தன்மை
உடையவனோ ?
-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *