மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நினைவில் மட்டும் இருக்கிறான் அவன் இப்போது. காரணம் இந்தப் புவியின் மீதுள்ள உன்னத பாதைகளில் அவன் இனிமேல் நடக்கப் போவதில்லை. ஆயினும் அவனது பொன்மொழிகள் நம்மிடையே இன்னும் உலவி வருகின்றன. அவை வேறு யுகத்துக்கோ அல்லது வேறு தளத்துக்கோ நம்மை மீண்டும் வழிநடத்திச் செல்லும்.”
கலில் கிப்ரான் (மீட்சி – The Return)
மனிதச் சொற்கள் மூலமே
உனது கனவுகள்,
விருப்பு, வெறுப்புகள்
உயர்ந்த அறிவுரைகள் எல்லாம்
உரைக்க முடியும் என்னால் !
ஆயினும்
அளித்துளான் இறைவன் நமக்கு
ஆன்மீக இறக்கைகள் !
விடுதலை, அன்பெனும்
விண்வெளி அரங்கிலே
நீ பறந்திட !
++++++++++++
நேசிப்பேன் உம்மை எல்லாம்
சகோதரரே
நீவீர் யாராய் இருப்பினும் !
உமது கொள்கையும்
எமது கோட்பாடும் ஒன்றே !
ஏனெனில்
மதங்களின் பல்வேறு
மாறு பட்ட பாதைகள் யாவும்
உன்னதத் தலைவனுக்கு
உதவி செய்யும் !
ஆன்மீக முழுமையைப்
பூர்த்தி யாக்கும் !
அனைவ ரையும் வரவேற்க நீளும்
அன்புக் கரங்கள் அவை !
++++++++++++++
உரித்தான எனது ஆத்மா
இரவுப் பாடகன் போன்றது !
பறப்பியல் பண்புக்கு ஓர்
பருந்து போன்றது !
பொழுது விடிவை நோக்கி
புலரப் போவது !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19, 2011)
- பயணத்தின் மஞ்சள் நிறம்..
- விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை
- இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி
- ஏமாற்றம்
- ஆர்வமழை
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.
- குற்றங்கள்
- வாய்ப்பு:-
- அவரைக்கொடிகள் இலவமாய்
- விசித்திர சேர்க்கை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10
- தியாகங்கள் புரிவதில்லை
- ஒன்றின்மேல் பற்று
- முடிவை நோக்கி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
- காதல் பரிசு
- எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
- செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
- பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
- தையல் கனவு
- மீளா நிழல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
- அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
- குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3
- உபாதை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42
- பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை
- புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
- திமுக அவலத்தின் உச்சம்