சங்கமம்

This entry is part 27 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நதியாய்ப் பெருகி
கரைகளைப் புணர்ந்து
புற்களையும் விருட்சங்களையும்
பிரசவித்திருந்தாள்.

வரத்து வற்றிய கோடையிலும்
நீர்க்காம்பைச் சப்பியபடி
பருத்துக் கிடந்தன
வெள்ளரிகள் கம்மாய்க்குள்.

காட்டுக் கொடிகளும்
தூக்கணாங்குருவிகளும்
குடக்கூலி கொடுக்காமல்
வேடிக்கை பார்த்தபடி
விலகிச் சென்றன
அவளை விட்டு.

வறண்ட கணவாயாக
தூர்ந்திருந்த போது
எங்கிருந்தோ ஒரு மேகம்
மழையாய்ப் புணர்ந்து
சென்றது அவளை.

எதிர்க்கமுடியாமல்
ஏற்றுக் கொண்டு
காட்டாறாகி வேகமெடுத்தவள்
வீழ்ச்சியில் விழுங்கத்
தொடங்கி இருந்தாள்
மனிதர்களை

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)நிலா விசாரணை

3 Comments

  1. அழகிய பார்வை. கவிதையில் பாடப்பட்ட காட்டாற்றுடன் சேர்ந்து நகர்கின்றது கவி ரசிக்கும் என் மனது… வாழ்த்துக்கள் தோழி.

  2. Avatar தேனம்மைலெக்ஷ்மணன்

    நன்றி சாமி & வருணன்.:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *