பிரபஞ்ச ரகசியம்

This entry is part 16 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மனம் தோன்றா
காலத்தில்
என்னிடம்
பறிக்கப்பட்டுவிட்டது
பிரபஞ்ச ரகசியம் .
அதன் பிறகே
பரிணாமம்
அடைய
விட்டிருக்கிறது
காலம் .

காண்கின்ற யாவற்றிலும்
ரகசியங்களாக
மாறுகிறது
சுய தேடல்கள் .

இந்த உயிரின்
இறுதியும்
இவ்வாறே இருக்க
உலவ விட்டிருக்கிறது
அந்த ரகசியம் .
இதன் முறையே
பிறப்பிக்கப்பட்ட
ஒரு கட்டளை
உணர்வதற்குள்
ஒவ்வொரு செயலின்
அறியாமை
கடந்து விடுகிறது .

பிரபஞ்ச எண்ணங்கள்
அனைத்துமே
உனதாக்கினேன்
அதுவே அகமகிழ்வு
என்றே வளர்ந்தேன்
உணர்ந்த பின்
உன்னில் நான் இருப்பதை
என்னில்
கொண்டு வர
முடிவிலி கொண்டே
அனைத்தையும்
நோக்குகிறேன்
இதில் தவற விடப்படும்
பிரபஞ்ச ரகசியம்
அனைத்தும்
நானாகிறேன் .
-வளத்தூர் தி.ராஜேஷ்

Series Navigationதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.இதுவும் ஒரு சாபம்
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *