அன்பின் வலி இறுகப்பிடித்திருந்த அம்மாவின் சுட்டுவிரல் வழி வழியும் அன்பின் அதீதம் தாங்காது போயிருக்கிறது பல நேரங்களில்... பள்ளிக்கூட வாசலில் அழுதுவிடுவேனோ எனத் தயங்கி நின்றவளைக் கையசைத்துப் போகச் சொன்னதும் உண்டு. மொழி தொ¢யாத ஊ¡¢ல் வேலை கிடைத்துப் போகும் நாளின் முன் இரவில் மடி சாய்த்துத் தலை கோதி வார்த்தையற்று இருந்தவளை விலக்கி நகர்ந்த போதும் மண நாளில் யாருக்கோ என்னைத் தாரை வார்த்ததாய்த் தனியளாய் நின்று யாருமறியாமல் மருகிய போதும் அன்பின் இரு எல்லைகளை உனர்ந்ததும் உண்டு. ஒவ்வொரு முறையும் ரயிலடியில் அவள் கண்ணீர் முகம் காணச் சகிக்காது பச்சை விளக்கசைவிற்கு விழைவது போலவே இன்று தென் வடலாய்க் கிடத்தித் தலைமாட்டில் விளக்கேற்றி குளிர் உணராது பெட்டியில் கிடப்பவளை வெகு நேரம் பார்க்கவியலாது சீக்கிரம் நெருப்பிற்குக் கொடுத்துவிட்டு வந்தால்போதும் என்பதை எப்படிச் சொல்வது?
வேறு வேறு நிஜங்கள்
ஊமை நிலவே!
இரவின் தனிமையில்
நீ மீட்டும்
உன் அந்தரங்கத்தின்
அலாதி ராகங்களை
மலை உள்வாங்கிக் கொள்கிறது
என்றா நினைக்கிறாய்?
இல்லை இல்லை!
உன் ஸ்வரங்களுடன்
நீயே சல்லாபித்துக்கொண்டு
களித்துத் திளைத்ததில்
மலையின் மனம் என்ன
குளிர்ந்தா போய்விடும்?
ஒற்றைப் பறவை
திசையற்றுப் பறந்துகொண்டிருந்த
சாயங்கால அடையாளங்கள்
நினைவுகளில் நீந்த
நீ அகற்ற முயன்றும்
உன் ஒளியால் விலகாத
இருட்டுப் போர்வைக்குள்
மலையும் என்னவோ
பதுங்கிக் கிடக்குது
ஊமை வலியோடு!
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?
arumaiyaana kavidhai.ammavin kavidhai padiththu kannil thannj vandhu vittadhu
“Anpin vali” very nice poem., I like it.