இரவை வென்ற விழிகள்

This entry is part 9 of 41 in the series 25 செப்டம்பர் 2011

துஞ்சாத கண்களும்
துயிலாத இரவும்
உருட்டிய பகடையில்
விழுந்தது முதல் தாயம்

ஆட்டத்தை துவங்கியது இரவு.

உறங்காத இரவிற்குள்
சலனமின்றி உறங்கிய
கனவு ஏணிகள் வழியாய்
அசுரப் பாய்ச்சலில் நகர்வு.

எதிவந்த அரவங்களின்
வாய்தனில் அகப்படாமல்
தாண்டித் தாண்டி
தொடர்ந்தன கண்கள்

மூன்றாம் யாமத்தைத் தாண்டியும்
வெற்றி தோல்வியின்றி
தொடர்ந்த உருட்டல்களில்
எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு
இறுதியாய்
வைகறையின் வாயில் சிக்குண்டது.

– வருணன்

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)இந்திரனும் அருந்ததிராயும்
author

வருணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வருணன் says:

    தோழி சித்ரா தங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. இத்தகைய கருத்து பரிமாற்றதிற்கு வழிவகை செய்த திண்ணைக்கும் நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *