கொக்கும் மீனும்..

This entry is part 30 of 45 in the series 9 அக்டோபர் 2011


 

கால்வலி

கண்டதுதான் மிச்சம்-

கொக்குக்கு..

ஓடையில் வரவில்லை

ஒரு மீனும்..

வரும் மீனையெல்லாம்

வலைபோட்டுத் தடுத்துவிட்டான்

குத்தகைதாரன்..

கண்மாய் மீன்களுக்குக்

கரைகாணா சந்தேஷம்-

இரை கிடைக்கிறதாம்

இலவசமாக..

மொத்தமாய்

இரையாகப் போவது

இப்போது தெரியாது..

இதுதான்

இப்போது அரசியலோ..

அப்படியெனில்,

கொக்கும் மீனும்

நாம் தான் !

 

     -செண்பக ஜெகதீசன்..

Series Navigationதுளிப்பாக்கள் (ஹைக்கூ)சாமியாரும் ஆயிரங்களும்
author

செண்பக ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *