கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)

This entry is part 40 of 44 in the series 16 அக்டோபர் 2011


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“அறிவுரை தேடிக் கேட்டுக் கொள்ளாதவன் மூடன் ! அவனது மூடத்தனம் உண்மை அறிவதில் அவனைக் குருடாக்குகிறது. மேலும் தீங்குகள் இழைக்க முரடனாய் ஆவான் ! அது சக மக்களுக்கு அபாயம் விளைவிக்கும்.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

காதல் என்பது என்ன ?

காதலற்ற வாழ்வு
மலரும் கனியும் இல்லா
மரம் போல் !
அழகத்துவம் இல்லாக் காதல்
வாசனை யற்ற
பூக்கள் போல் !
விதைக ளற்ற
பழங்கள் போல் !

காதல் பழைய யுகங்கள்
போன்றது !
மாளிகை இன்றிருக்கும்
நாளை அழியும் !
சிதைவுகளைப்
படைக்கும்
கடவுள் போன்றது
காதல் !
ஊதாப் பூவின் மூச்சு போல்
காதல் மிளிர்வது !
புயலை விடக் கோரமாய்
அடிப்பது காதல் !

பரிசுக் கொடைகள் மட்டும்
காதலுக்கு ஈடல்ல !
பிரிவுத் துயர் காதலைத்
துறப்பதல்ல !
வறுமை துரத்திச் செல்லாது
காதலை !
பொறாமை தன்னுணர்வை
நிரூபிப்ப தில்லை !
பைத்தியம் தன்னிருப்புக்குச்
சான்றளிப்ப தில்லை !

காதலை நாடும் தோழர்காள் !
சத்தியம் தேடும்
காதல் ஓர் இயற்கை
மெய்ப் பாடே !
தேடுவதில் உமது சத்தியம்
வெளிப்படும் !
பெறுவதில் உள்ள உண்மை
நடத்தை தெரிவிக்கும் !
காப்பதில் உமது மெய்நெறி
வழக்கியல் காட்டும் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)ஜுமானா ஜுனைட் கவிதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *