கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)

This entry is part 39 of 44 in the series 16 அக்டோபர் 2011

                                                                                
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் 
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



குருநாதரின் ஞான ஒளி 
பொழியும் போது 
கூட இருந்த குறை அறிவாளி 
பேசி மகிழ்ந்து 
பெருமிதம் அடைவான் ! 
பிறகு விரைவில் தாறுமாறாய்
ஒழுக்க மற்று
உரக்க அலறுவான் !
பிரச்சனை இதுதான் 
தன்மான மற்ற ஒருவனுக்கு   
விரைவில் 
வருவ திப்படி மதுவால் ! 
குடிகாரனுக்குப் பரிவு உள்ளம் 
இருக்குமே ஆயின் 
அதனைக் காட்டுவான் 
குடித்த பிறகு ! 
ஒளிந்துள்ள சினமும் 
அகந்தை, ஆணவம் இருக்கு மாயின் 
அவையும் வாயில் வெளிவரும் ! 
மக்களில் பெரும் பாலோர்  
அப்படித் திரிவதால் 
மது விற்பது விலக்கப் படும் 
எல்லாருக்கும் !  


***************
தகவல் :

1. Holy Fire - Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi's Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi - Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12, 2011)

Series Navigationஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *