This entry is part 34 of 44 in the series 30 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன்

தீபாவளிக் கோலாகலத்தில்
புகை மூட்டமாய் வானம்…
ஏவியவர்களின்
உற்சாகங்கள் வானத்தில்
ஒளிப் பொதிகளாய்
வானத்தில் சிதறின…

நிலத்திலிருந்து உருவான
மின்னலும் இடியும்
மேகத்தில் போய்
விழுந்தன…

நகரத்தின் ஒற்றை
மரங்களில் கூடு
கட்டியப் பறவைகள்
பூகம்பமென்று
கூட்டினை விட்டு
பறந்த போது
புகை மூட்டத்தில்
சிக்கிய விமானமாய்
நிற்பதற்கு வீடுகள்
இடங்கள் தேடி
நில்லாமல் மிதந்தன
மேகத்தில்….

இரைகளின்றி
அமாவாசை
விரதமிருந்தன
பறவைகள்.

தீபாவளியை
பறவைகள் எப்படிக்
கொண்டாடுகின்றன என்று
ஒரு பறவையிடம்
கேட்டுச் சொல்லுங்கள்.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationஇதுவும் அதுவும் உதுவும் – 2கைப்பேசி பேசினால்