இங்கே..

. பொய்கள் எல்லாம் மெய்யென்று மேடையேறி நடிப்பதாய்.. புரியாத வாக்குறுதிகள் புதிதுபுதிதாய் அரசமைத்திட ஆதாரமாய்.. ஏமாற்றுதல் என்பது ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட கொள்கையாய்.. ஏணிகளை எட்டி உதைப்பது என்றும் காணும் காட்சியாய்.. சுரண்டல் என்பது சுதந்திரத்தின் ஒரு பாகமாய்.. சூழ்ச்சியுடன் காலை வாருதல்…

அதில்.

ஓர் எண்ணம் மன தொலைவுகளை கடந்து கொண்டிருக்கிறது இக்கணம் . அதில் நம் கனவுகள் மீதம் கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த இரவு. அதில் சிதறல் கொண்டிருந்த ஒரு மவுனம் மன ஒலிகளில் விழுங்கப்படுகிறது . அதில் ஒன்றும் நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக…

வீடு

விடுமுறை நாளொன்றில் வீடு சுத்தம் செய்யுகையில் விடுபட்ட இடங்களில் விரல்கள் துலாவியதில் தொலைந்துபோன பொம்மைக்காரின் ரிமோட் தீர்ந்துபோன பேட்டரிகள் மூடிகள் மூடிகளற்றப் பேனாக்கள் பொத்தான்கள் பொத்தான் குறைந்த சொக்காய்கள் ஓரிரண்டு உலர்ந்த உணவுத் துணுக்குகள் என எல்லாவற்றையும் அகற்றியும் கைப்பற்றியும் தொடர்ந்து…

அலைகளாய் உடையும் கனவுகள்

சங்கர பாலசுப்பிரமணியன் தன் சுய பிம்பத்தை நீரில் பார்த்து கொத்துகிறது பறவை ஒன்று அலைகளாய் சிதறிச் செல்லும் பிம்பங்கள் மறுபடியும் கூடுகின்றன இரவு வரை கொத்திக் கொண்டேயிருக்கும் பறவை பிம்பத்தை அழித்து விட்ட மகிழ்வில் பறந்து செல்கிறது களிப்பில் அதற்குப் புரியவில்லை…

இதுவும் அதுவும் உதுவும்

சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர்…

புரட்டாசிக் காட்சிகள்

புலால் தவிர்த்துச் "சைவ"மாகிப் போன வைஷ்ணவர்களின் உதட்டிலும் நெற்றியிலும் விதவிதமான நாமங்கள். வெங்கட் ராமா கோவிந்தா எனக் கூவிவரும் பக்தர்களுக்குப் பிடியரிசிபோட வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா ரேஷன் கடையிலிருந்து. பக்தர்கள் வரிசைக்காக மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள் பெருமாள் கோவிலில் தூணையும் அதில் நிற்கும்…

எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு

(கே.எஸ்.செண்பகவள்ளி) கடந்த ஆகஸ்ட் மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகர் குவாலா லும்பூர் ‘கிராண்ட் பசிபிக்’ தங்கும் விடுதியில் மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தியது. இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றிய முனைவர் முல்லை இராமையா…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 21அன்று நடந்தது. 2010ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தினசரி, மாத, வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து கதைகளுக்கு ரொக்கப் பரிசளிக்கும் திட்டத்தைச் சங்கம்…

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை வேண்டும் எனக்கேட்கிறது உயிர், அந்த சிலிர்ப்பை.. உடல், அந்த பறத்தலை.. மனம், அந்த புல்லரிப்பை.. நீ கேட்ட அந்த நொடி “என்னோடு வருவாயா வாழ்வு முழவதும்?” பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட வாக்குவாதங்களுக்கிடையே..…

ஒருகோப்பைத்தேநீர்

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும். அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர் அருந்த ஒருகோப்பைத்தேநீர். RAVIUTHAYAN raviuthayan@gmail.com