This entry is part 45 of 53 in the series 6 நவம்பர் 2011

ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி

Series Navigationமூன்று தேங்காய்கள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)