சில நேரங்களில் சில நியாபகங்கள்.

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 35 of 39 in the series 4 டிசம்பர் 2011

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு
முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள்.
தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று
பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள்
பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய்
இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள்
வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று
அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள்
விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய்
சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள்
எங்கேயும் எப்போதும் சுமந்தோடும் உடல் வழி மலம் போன்றே
விட்டுத் தொட்ட சில வேண்டா நியாபகங்களையும்
தூக்கித் திரிய வேண்டியதிருக்கிறது சமயங்களில்.

Series Navigationக‌ரிகால‌ம்அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  காவ்யா says:

  பாவலர் பெண் போலிருக்கிறது.
  பெண்-ஆண் என்று பார்த்து விமர்சனம் குறைத்தோ கூட்டியோ எழுதுவது நல்லதா ? பாவலர் ஒரு விதமான தமிழ் எழுதுகிறார். ஒருவேளை ஈழத்துக்காரர் போலும்.
  இருக்கட்டும்.

  ஈரிமைகள் – நைஸ் தமிழ்.
  அஃதென்ன கண்ணீர் ஒழுகுகிறது?
  கண்ணீர்த்துளிகள் தெறிக்கலாம்; வழியலாம்; விழலாம். ஒழுகுமா ? ஒழுகுவது ஓட்டைகளில் வழியேதானே?
  நியாபகங்கள் – இதைப்பற்றி.
  தமிழறிஞர்களிடையே ஒரு பரவலான ஆதங்கமுண்டு: சில தமிழ் எழுத்துக்களைத் தமிழர்கள் மறந்தே போனார்கள். ஞ, ங போன்றவை. பாரதியார் ஆத்திச்சூடியில் ங்ப்பைபோல் வளை என்று சொல்கிறார். அவருக்குக்கூட அது கட்டாயம். ஏனெனில் ஆத்திச்சூடியல்லவா. ஒவ்வொரு எழுத்துக்கும் ஏதாகினும் சொல்லவேண்டுமே. இராஜேஸ்குமார், நாய்க்கு ஞிமிலி என்பர். தற்போது எங்கோ ஒரிரு சொற்களில் மட்டுமே இவ்வெழுத்துக்கள் காணப்படுகின்றன. அஃதிலொன்று: ஞாபகம். அதை இவர் நியாபகம் என எழுதுகிறார். பிழையெனச்சொல்லாமல், இவருக்கு ‘ஞ’ வை ஏன் பிடிக்கவில்லையெனக் கேட்கலாம். பிடிப்பதும் பிடிக்காததும் அவரின் மனப்போக்கு.
  போகட்டும்.
  //தவளைகளின் குறட்டைச்சத்தம்.//
  தவளைகள் தூங்குமா ? இருக்கலாம். அப்போது ஒலியெழுப்புமா? அப்படியென்றால், தவளைகளில் குறட்டைச்சத்தம் எனலாம். அவை எப்போது எழுப்புகின்றன என்று நமக்குத் தெரியாதல்லவா? எனவே நாம் தவளைகள் கத்துகின்றன என்று மட்டுமே சொல்வதுண்டு. அவ்வொலி கர்ண கொடூரமாகக் கேட்பதால், கத்துகின்றன எனவெழுதப்படுகிறது.
  Frogs croak என்பதுதான் ஆங்கிலம். அவர்கள் onamatapoeia வழியாக க்ரோக் என்கிறார்கள். தமிழர்கள் விலங்குகள், பறவைகள் ஒலிகளுக்கு தனித்தனி சொற்களை வைத்திருக்கிறார்கள்.
  காகம் கரையும்; மயில் அகவும்; குயில் கூவும்; ஆனை பிளிரும்; சிங்கம் கர்ச்சிக்கும்; புலி உருமும்; தவளை கத்தும்; என்று. அவற்றை நாம் மாற்றலாமா? ‘குறட்டை’ என்பது எனக்கு ஏற்கமுடியாது. பாவலர் பெரும் கற்பனையாளர். அவர் தவளைகள் தூங்குவது போல கற்பனை பண்ணியிருக்கிறாரோ? Poetic licence?
  //இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள் //
  அதிர் என்பதுதான் தமிழ். இதயமதிர என்றுதானே வரும்?
  //வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று//
  வண்ணாத்திப்பூச்சிகளை வண்ணாத்திகள் எனச்சுருக்கிவிடுகிறார். அப்பூச்சிகள் கோபம் கொள்ளாவரையில் நாமும் பாவலரோடு பயணிப்போம்.

  // மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய்
  சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன//

  I like this sentence. நொசநொசத்து is the very word we, as children, used. But it is variously expressed across Tamil Nadu. In our area, நொசநொசத்து. Perhaps, the poet hails from the same area?
  இக்கவிதையில் ஒலிச்சுவை இருக்கிறது என்பதை வாசிக்கும்போது உணரலாம். அது எதுகை மோனைகளில் இருந்தும் ஒரு முழு சொற்றொடரின் அமைப்பு வழியாகவும் வருகிறது என்பதையும் உணரலாம். இதற்காக இவருக்கு ஒரு சின்ன பாராட்டு கொடுக்கலாம்.
  சரி, இப்போது இவர் கூறும் கருத்துக்கு வரலாம்.
  நினைவுகள் பலதரப்பட்டவை. கவிதையில் முதல் வரிகளில் சொல்லப்பட்வை நல்ல் நினைவுகள். ஆனால் பாவம் கவிஞர். அவற்றை அவர் வாழ்க்கையில் இடையில் நடந்த துர்சம்பவங்கள் இடைமறித்து விலக்கி விடுகின்றன்.
  பின்னர் கூறப்படும் நினைவுகளெல்லாம் வருத்தப்பட வைக்கும் நினைவுகள். தவளையில் கத்தல்களாக மீண்டும் மீண்டும் எழும்பி வதைக்கின்றன. என்னதான் மறக்க முயன்றாலும் அவை மழைவிட்ட பின்னும் விடாத சாரலாய் வந்து எரிச்சலூட்டுகின்றன (நொசநொசத்து)

  வேண்டா நினைவுகள். மறக்கப்பட வேண்டியவை. ஆனால் என்ன பண்ணுவது? அவை தொடர்ந்தே வரும் நிழலைப்போல தொல்லை தருகின்றன. கடைசி வரி நல்ல முத்தாய்ப்பு.

  // வேண்டா நியாபகங்களையும்
  தூக்கித் திரிய வேண்டியதிருக்கிறது சமயங்களில்.//

  Overall, an excellent poem Ms ஜுனைத். Write more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *