விருப்பங்கள்

This entry is part 35 of 48 in the series 11 டிசம்பர் 2011

என் கருதுகோள்கள்
ஒவ்வொன்றாக
உதிர தொடங்குகிறது
பொய்மையின் உருவில் .

வழியெங்கும் அதன்
பிம்பங்கள் என்னை
துரத்துகிறது
உண்மையின்
சிந்தனையாய் .

குறிப்பிட்டு சொல்ல
ஏதும் இல்லாமலே
வார்த்தை இயலாமையில்
உறைகிறது .

அவரவர் நியாயங்கள்
பொய்மையும்
உண்மையும்
உருவில்
அலைந்து
கொண்டிருக்கிறது .

அவர்களுக்கு
விருப்பமானவற்றை
அணிகிறார்கள்
நம்மையும்
அணிவித்து
விடுகிறார்கள்
அவர்களின்
வாயிலாகவே.
-வளத்தூர் தி .ராஜேஷ் .

Series Navigationஆனந்தக் கூத்துஅழிவும் உருவாக்கமும்
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *