ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“என் இதயம் கிழிந்து போன பிறகு எந்த உடை அணிந்தால் என்ன ? அணியா விட்டால் என்ன ? என் ஆன்மா கீறப் பட்ட பிறகு இந்த வெளி வேடம் எல்லாம் இனித் தேவை இல்லை.”
மேஜர் பார்பரா
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது. அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது. அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார். மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷாஃப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷாஃப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ·பன் அண்டர்ஷாஃப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷாஃப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.
மற்றும் பலர்.
************************
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
(மூன்றாம் அங்கம்)
அங்கம் – 3 பாகம் – 1
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். மேடம் பிரிட்டனியின் மாளிகை.
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : அடுத்த நாள் பகற்பொழுது.
அரங்க அமைப்பு : மேடம் பிரிட்னி முன்னறையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள். இரண்டாம் மகள் சாரா நாற்காலியில் அமர்ந்தொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள். மூத்த மகள் பார்பரா சல்வேசன் ஆர்மி உடுப்பணியன்றி சாதாரண வீட்டு உடை அணிந்து கவலையோடு உலவி வருகிறாள். சாராவின் காதலன் சார்லெஸ் லோமாக்ஸ் உள்ளே நுழைகிறான். சார்லஸ் அணி உடுப்பில்லாத பார்பராவை உற்று நோக்குகிறான்.
சார்லஸ் லோமாக்ஸ் : என்ன பார்பரா ? உன் சல்வேசன் ஆர்மி உடுப்பணி (Uniform) எங்கே ? அழுக்காய்ப் போனதா ? அல்லது வெளுக்கப் போட்டிருக்காயா ?
பார்பரா: (பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு) ஆம் இதுவரை சுத்தமாக இருந்தது இப்போது அழுக்காய்த்தான் போனது ! ஆனால் அதை வெளுக்க முடியாது !
சார்லஸ் : ஏன் சல்வேசன் ஆர்மியை மூடி விட்டாயா ? அல்லது விற்று விட்டயா ?
மேடம் பிரிட்னி : (சற்று எரிச்சலோடு) சார்லஸ் ! அவளைத் தொந்தரவு செய்யதே ! வெந்த புண்ணைக் கிளறி விடாதே ! நிறுத்து உன் அர்த்தமற்ற கற்பனை யூகங்களை !
பார்பரா : சார்லி ! சல்வேசன் சாவடி எப்போதும் போல் திறந்துதான் இருக்கிறது. நான்தான் விலகிக் கொண்டேன் ! அதை விற்று விட்டோம் என் செல்வீகத் தந்தைக்கு ! இல்லை அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். சாவடிக்குப் நிதிவளம் பெருகி உள்ளது. அதன் கோர விளைவு என் பதவி பறி போனது.
சார்லஸ் : வருந்துகிறேன் பார்பரா ! நானுனக்கு சல்வேசன் ஆர்மி விருத்தியாக உதவி செய்தவன் ! அது இப்போது இன்னொருவர் கையில் இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. நான் கேள்விப்பட்டது இப்போது இங்கிலாந்தின் கிறித்துவ ஆலயம் சிறிய சல்வேசன் சாவடிகளை எல்லாம் விழுங்கி வருகிறது என்னும் புகாரே !
மேடம் பிரிட்டனி : போதும் நிறுத்திகொள் சார்லஸ் ! உன் மனத் தகுதிக்கு ஏற்றதைப் பற்றிப் பேசு !
சார்லஸ்: மேடம் ! இங்கிலாந்தின் ஆலயம் எமது தகுதிக்கு ஏற்றதே. இதிலென்ன ஐயப்பாடு ?
பார்பரா : உன் அனுதாபத்துக்கு நன்றி ! இப்போது நீ போய் சாராவுக்கு வாயில் ஊட்டு. அவள் உனக்காகக் காத்திருக்கிறாள்.
சாரா : சார்லிக்கு எந்தக் கட்டளையும் இடாதே பார்பரா ? (சார்லியைப் பார்த்து) சார்லி ! இன்று நாமெல்லாம் தொழிற்சாலைக்குப் போகிறோம் தெரியுமா ?.
சார்லஸ் : எந்தத் தொழிற்சாலைக்கு ?
சாரா : அதுதான் பீரங்கி உற்பத்திச் சாலை ! எமது தந்தைதான் அதன் அதிபர்.
சார்லஸ் : அப்படியா ? இப்போது புரிகிறது எனக்கு !
(அப்போது பார்பராவின் காதலன் உள்ளே நுழைகிறான். சல்வேசன் அணியுடை இல்லாத பார்பராவைப் பார்த்துத் திகைப்படைகிறான்)
அடால்·பஸ் : என்ன உன் சல்வேசன் ஆடை கிழிந்து விட்டதா ? இப்படி ஒருநாள் கூட நீ அணி உடை அணியாமல் நான் உன்னைப் பார்த்த தில்லை !
பார்பரா : என் இதயம் கிழிந்து போன பிறகு எந்த உடை அணிந்தால் என்ன ? அணியா விட்டால் என்ன ? என் ஆன்மா கீறப் பட்ட பிறகு இந்த வெளி வேடம் எல்லாம் இனித் தேவை இல்லை.
அடால்·பஸ் : என் ஆத்மா பொங்கி வழிகிறது. அது துள்ளி விளையாடுகிறது. இந்த சல்வேசன் சாவடிக்கு இனி ஒரு கதவு தேவை இல்லை. நல்ல தூக்கம் எனக்கு நேற்று. இப்படி நான் நிம்மதியாகத் தூங்கிய தில்லை.
பார்பரா : எனக்குச் சரியான தூக்கம் இல்லை ! பயங்கரக் கனவுகள். ! அடால்·பஸ் ! எப்படி நடந்தது சர்வேசன் ஆர்மி பொதுக் கூட்டம் ?
அடால்பஸ் : மாளிகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார இடமின்றி பலர் நின்று கொண்டிருந்தார் பின்புலத்தில். மக்கள் கலகலப்பாய் மிஸிஸ் பெயின்ஸ் பேச்சைக் கேட்டார்கள்.
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 10 2011)
http://jayabarathan.wordpress.
- புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்
- கோழியும் கழுகும்…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 22
- விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி
- பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
- மணியக்கா
- கெடுவான் கேடு நினைப்பான்
- எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- வெண்மேகம்
- மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை
- வெளிச்சம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்
- ஒஸ்தி
- மழையின் முகம்
- பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து
- முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -3)
- எவரும் அறியாமல் விடியும் உலகம்
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- புரிந்தால் சொல்வீர்களா?
- மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம்
- கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி
- இரவின் முடிவில்.
- காந்தி சிலை
- அகஸ்தியர்-எனது பதிவுகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1
- தரணியின் ‘ ஒஸ்தி ‘
- நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்.
- வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
- ஆனந்தக் கூத்து
- விருப்பங்கள்
- அழிவும் உருவாக்கமும்
- பார்வையின் மறுபக்கம்….!
- மழையும்..மனிதனும்..
- பிரம்மக்குயவனின் கலயங்கள்
- சொல்லவந்த ஏகாதசி
- அரவம்
- அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்
- குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்
- அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
- ’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1 Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson
- புத்தகம் பேசுது
- மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள்&கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நடத்தும் மக்கள் கலையிலக்கிய விழா
- அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்