ஏனென்று தெரிய வில்லை

This entry is part 40 of 39 in the series 18 டிசம்பர் 2011
மூலம் : நோரா உதய ஷங்கர் ஜோன்ஸ்
தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா 

சூரியனை நோக்கும் வரைக்
நான் காத்தி ருந்தேன் !
நீயேனோ வரவில்லை
ஏனென நான் அறியேன் !
விட்டுச் சென்றேன் உன்னை
வேடிக்கை விடுதியில் !
நீயேனோ வரவில்லை
ஏனென நான் அறியேன் !
நீயேனோ வரவில்லை
ஏனென நான் அறியேன் !

காலை விடிவதைக்
கண்ணால் கண்டேன் !
பறந்தோட விழைந்தேன்
கண்ணீர்த் துளிகளைக்
கையேந்தி உன் முன்னால்
மண்டியிடத் தவிர்த்து
மண்ணில் !
மதுவில் நனைந்து விட்டது
இதயம் !
ஆயினும் என் நெஞ்சில்
நீயிருப் பாய்  எப்போதும்  !

முடிவில்லாக் கடல் நெடுவே
புறத்தே நான்
பேரின்பத்தில் மரிப்வேன்
எலும்புப்
பெட்ட கத்தில் கிடக்கும்
என்னுடல் !
தனிப் பாதையில்
இனிப் பயணம் செய்வேன் !
மதுவில் நனைந்து விட்டது
இதயம் !
ஆயினும் என் நெஞ்சில்
நீயிருப் பாய்  எப்போதும்  !

உன்னை உந்தி
ஓட வைக்க வேண்டும் ஒன்று !
நீயேனோ வரவில்லை
ஏனென நான் அறியேன் !
சூனிய மான
முரசமாய்ப் போனேன்
வர வில்லை

நீயேனோ
ஏனென நான் அறியேன் !
வர வில்லை 
நீயேனோ
ஏனென நான் அறியேன் ! 
Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

 1. Avatar
  SOMASUNDARAM says:

  Well translated poem.We, thamizharkal, needs revolutionary poems.Plenty of Romantic poems existed in Thamizh Naadu.Expect more from Thiru.J.B.

 2. Avatar
  ஜெயபாரதன் says:

  மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ்
  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

  நோரா ஜோன்ஸ் இசை மேதை ரவி ஷங்கரின் புதல்வி. அவரது பாடல் திண்ணையில் அறிமுகம் ஆக வேண்டும் என்பது என் அவா.

  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *