கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)

This entry is part 20 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆணாக வாழ்வதி லிருந்து
ஆண்மை உட்கரு
தானாகத் தோன்றுவ தில்லை !
ஆணுக்கு
ஆதரவு அளிக்கும்
தோழ மையி லிருந்தும்
சேருவ தில்லை !
“வெளுத்துப் போய்த் தெரிகிறாய் !
பள்ளிக்குச் செல்லாதே”
என்று
பாட்டி போதிப்பாள் !
ஒட்டம் பிடி நீ அதைக்
கேட்ட வுடனே !
உன் தந்தை கொடுக்கும் உதை
அதை விட
உன்னத மானது !

உடம்பில் ஆத்மா வானது
உடற் சுகம் தேடும் !
ஆய்ந்திடும் தந்தை விழைவது
ஆன்மீக விளக்கம் !
திட்டுவது தந்தை ஆயினும்
கிட்டும் வழி உனக்கு
புற வாய்ப்புக்கு !
பாடுபட பணி புரிய
தேடு ஓர் தீவிர ஆசான் !
உள்ளத் தின் உள்ளே
ஒட்டிக் கொள்ள வேண்டும் !
ஓய்வின்றி உழைத்தோம்
பரிவை நாடி !
பயப்படச் செய்வாய்
பழைய
நடைமுறைக்கு !

பொய் புரட்டு துறப்போரைப்
போற்றிப் புகழ்வோம்
தம்மைக் காலி செய்து
செம்மைப் படுத்து வதால் !

***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 13, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)மீன் குழம்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *