கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)

This entry is part 7 of 29 in the series 25 டிசம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“காற்றே ! எங்களைச் சூழ்ந்து செல்கிறாய்; மெதுவாய் இனிமையாய் பாடிச் செல்கிறாய்; இப்போது பெருமூச்சுடன் வருந்திச் செல்கிறாய் ! உன் நகர்ச்சியைக் கேட்கிறோம். ஆனால் உன்னை நாங்கள் காண முடியாது. நீ எம்மைத் தீண்டுவதை உணர்கிறோம். ஆயினும் உனது வடிவை யாம் அறியோம். நீ ஓர் நேசக்கடல் போல் அசைகிறாய் ! எமது ஆன்மாவைத் தழுவி அணைப்பது நீ. ஆயினும் எம்மை மூழ்க்கி விடுவதில்லை !”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

அறிவும். பகுத்தாய்வு நெறியும்
ஞானி ஒருவரிடம்
நானிதைக் கேட்டறிந்தேன் :
“எந்தத் தீமைக்கும்
இருக்குது ஒரு மருந்து
மூடத்தன நோயைத் தவிர !
ஏசுநாதர்
குணப் படுத்தினார்
குருடர்களை !
சுகப் படுத்தினார்
குஷ்ட ரோகிகளை !
நடக்க வைத்தார்
முடவரை !
வாத நோயில் வருந்து வோர்க்குச்
சாதனை செய்தார் !
ஆயினும் அவரால்
குணமாக்க இயல வில்லை
மூடர்களை !
ஒரு பிரச்சனையின் திக்குகள்
எல்லாம்
உளவு செய்தால்
பிழைகள் உண்டாகும்
முறையைக் கண்டு
பிடிப்பாய் !
வாய்ப்பு உன்னைக்
கடப்பதற்கு முன்பே பற்றாமல்
வருந்து பவன்
தலையைப் பிடிக்காமல்
வாலைப் பிடிப்பவன்
போலாவான் !
இறைவன் தீயவற்றை நீக்கான்
இப்புவியில் !
அறிவும் பகுத்தாய்வுத்
திறனும்
நமக்கவன் அளித்துள்ளது
நம்மை
நாமே காத்துக் கொள்ள !
அழிவி லிருந்து
பிழைத்துக் கொள்ள !
குழியி லிருந்து மீண்டும்
எழுந்திருக்கத் தான் !

 

(முற்றும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 21, 2011)

Series Navigationகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *