அக் கிராமத்தின் சிற்றோடைக்
கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை
செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும்
சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை…
கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க
கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான
இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக்
காத்திருக்கும் பாவனையில் … இடக்கை நாடி தாங்க
வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின்
கை விரல்கள் சிலவற்றை காணவில்லை..
உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்….
அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ
எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை…
வயதான ஒருவர் சொன்னார் …
தன் சிறு பிராயத்தில்
கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது
நிற்க முடியாமல்ப் படுத்ததென்று…
யாரோ துப்பிய வெற்றிலை எச்சில்
உறை ரத்தம் போல் தலைக் கிரீடத்தில்…
சிதைந்துக் கொண்டிருப்பது
வெறுமொரு கற்சிலயல்ல…
சிந்தையுள் காதலுடன் ..
யாரையோ நினைவிலேற்றி
மனமுழுக்க வடிவமைத்து
விரல்கள் வழி மனமிறக்கி
உளிகளில் உயிர் கொடுத்து
பலநாட்கள் பாடுபட்டுச்
செய்தெடுத்த …
எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர்
அற்புத சிற்பியின் காதலுடன்
கூடிய கலையும், உழைப்பும் கூடத்தான் …
– பத்மநாபபுரம் அரவிந்தன்-
- அள்ளும் பொம்மைகள்
- சில்லறை நோட்டு
- அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
- காதறுந்த ஊசி
- ஜென் ஒரு புரிதல் -26
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- ஜெயமோகனுக்கு “முகம் “ விருது
- இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை
- மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)
- சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்
- ஏன்?
- கிறுக்கல்கள்
- சிற்றிதழ் அறிமுகம் : சங்கு
- சாந்தகுமாரின் ‘மௌனகுரு’
- தீட்டுறிஞ்சி
- நன்றி உரை
- முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)
- கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ
- புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்
- ………..மீண்டும் …………..
- பாசாங்குப் பசி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5
- பஞ்சரத்னம்
- மார்கழி காதலி
- துளிதுளியாய்….
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்
- சிலை
- மண் சுவர்
- அழகின் சிரிப்பு
- பூபாளம்
- Learn Hindu Vedic Astrology
- கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா
- பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்
- முடிச்சு
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 4
விண்சென்ற சிற்பிக்காய் பார்த்திருக்குமோ?
Good concept. Keep writing.
Almost all artists and sculptors give their soul in their works. The ststue was done in such precision that the love is there for the onlooker. The poet has used his imagination and has given life to the lifeless piece of art.
Thank you very much for the comment..aravindhan.