G Ramakrishnan
ஓராண்டிற்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றியும் கபில் சிபலின் மைய அரசின் மோசடி முயற்சிகள் பற்றியும் சொல்லியிருந்தேன். மேலும் ஆகஸ்டில் சமச்சீர் கல்வி பற்றி ராஜாராம் எழுதியிருந்தார்.
கபிலின் மேலதிக விளையாட்டுகள், உச்ச நீதிமன்றத்தின் குழப்பமானத் தீர்ப்பு, சுப்ர பாரதி மணியனின் செய்தி (திண்ணை) போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின் மீண்டும் சந்திக்கிறேன்.
மைய அரசு முயற்சிகளைப் பார்க்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதையே அறவே 2013 லிருந்து அகற்றும் முடிவை மைய பள்ளிக் கல்வி ஆணையம் (CBSE) அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மாநில மேனிலைக் கல்விச் சேர்க்கையை (பிளஸ் 2) இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மகாராஷ்ட்ர மாநில அரசு நீதிமன்றமே சென்றுவிட்டது. இருப்பினும் மைய ஆணையம் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனாக முன்னேறுகிறது.
மையக் கல்விஆணையம் தேர்வினால் வரும் மன உளைச்சலையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளை நீக்குவைதை மட்டுமே காரணமாகக் கூறிக் கொணர்ந்த இம்மாற்றம் ஏமாற்றமே. ஏனெனில், CBSE மாணவர்களுக்கென ஒரு தொலைபேசி வாயிலான உதவிச் சேவையை வழங்குகிறது. அதற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை பெருத்த அளவில் குறையவில்லை.
பார்க்க சுட்டி
http://articles.timesofindia.indiatimes.com/2011-03-18/parenting/29141073_1_class-xii-exam-students
காங்கிரசிற்கோ கபிலிற்கோ ஓட்டு வேட்டைக்காகவாவது இது உதவுமா எனத் தெரியவில்லை.
தமிழகத்திற்கு வருவோம்!
சமச்சீர் கல்வி பற்றிய விவாதங்களில் எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற புளகாங்கிதத்தை மட்டுமே முன்வைத்து முடித்துவிட்டனர். ஒரு வழியாக உச்ச நீதி மன்றமும் அதையே தீர்ப்பாக வழங்கிவிட்டது. சமச்சீர் கல்வியின் நீட்சியாக தனியார் பள்ளிகள் பாடத் திட்டத்திற்கு மேல் எதுவும் கற்பிக்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
நான் பள்ளியில் பயிலும் போது வாய்ப்பாடு எழுதுவது அன்றாடப் பணி. “ராமகிருஷ்ணா நில்ரா” எனும் கோரிக்கை வேகமாக எழுது எனக்கு வரும்; “குச்சியைப் புடுங்கு!” எனும் அடக்குமுறை வரை அது நீளும். இந்த வாதத்தில் அதையே காண்கிறேன். முன்னேறிய நாடுகளில் ஒரே கல்வி கற்பிக்கபடுவதை பலரும் சுட்டுகிறார்கள்; ஆனால் அவை மாணவர்களை இரண்டு அல்லது மூன்றாகத் தரம் பிரித்துக் கல்வி அளிப்பதை எவரும் சுட்டுவதில்லை. சில நாடுகளில் சிறப்பு பள்ளிகளும் தனித் திறமையாளர்களுக்கு உண்டு.
நாம் என்ன செய்ய விழைகிறோம்? படிப்பவன் ஏட்டைப் பிடுங்க விரைகிறோமா?
சமச்சீர் கல்வி செயல்பாட்டை அடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணிற்கு மாற்றாக மதிப்புக் குறியீடு (grades) முறையைக் கொணர்ந்துள்ளது. தமிழகக் கல்வியின் தரம் தாழ்ந்த நிலையை மேலும் குலைக்கும் முயற்சி.
நான் முன்னரே குறிப்பிட்ட தேசியத் திறனறி தேர்வு போன்ற தேர்வுகளில் எந்த முன்னேற்றமமும் இந்த ஆண்டும் இல்லை. மேலும், கல்வி பற்றி education initiatives எனும் அமைப்பு நாடெங்கிலும் கல்வித் தரம் பற்றி ஆய்வு நடத்துகிறது. இது மாணவர்களுக்கான ஒரு தேர்வையும் உள்ளடக்கியது. கவைலையேபடாதீர்கள் கடைசி இடம் நமக்கு தான். அது மட்டுமில்லை 2006 ஐ விடவும் பின்னடைந்துள்ளோம்
பார்க்க சுட்டி
http://www.ei-india.com/wp-content/uploads/Main_Report.pdf
எந்த ஆய்வும் அக்கறையும் இல்லாத வாக்குகளை குறி வைத்துக் கொண்டு வரும் மாற்றங்கள் மிக மோசமான நிலைக்கு நம்மைத் தள்ளுகின்றன.
முடிக்கும் நேரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி
http://timesofindia.indiatimes.com/home/education/news/Indian-students-rank-2nd-last-in-global-test/articleshow/11492508.cms
- ஜென் ஒரு புரிதல் – 27
- வெறுமன்
- ஞானோதயம்
- ஓர் இறக்கை காகம்
- சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்
- நானும் எஸ்.ராவும்
- பாசம் பொல்லாதது
- அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்
- தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘
- “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”
- பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு
- கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”
- முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு
- நான் குருடனான கதை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9
- ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
- பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்
- தமிழகக் கல்வி நிலை பற்றி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5
- ரம்யம்/உன்மத்தம்
- அன்று கண்ட பொங்கல்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6
- பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
- 3 இசை விமர்சனம்
- பொங்கல் வருகுது
- ஷங்கரின் ‘ நண்பன் ‘
- மெர்சியின் ஞாபகங்கள்
- அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி