ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)

This entry is part 16 of 42 in the series 29 ஜனவரி 2012

எழில் இனப் பெருக்கம்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத்தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 4)

ஏன் வீணாக வேண்டும் ?

உன் பிறப்பெழில் ஏன் வீணாக வேண்டும்

சுய இச்சை உனக்குள் அடங்கிப் போய் ?

இயற்கை தரும்கடன் நேராக எதுவு மில்லை !

எதிர்பார்க்கும் நன்றி தன் இலவசக் கொடைக்கு !

தன்னலமி நீ ஏன் தவறிப் பிழைக்கிறாய் ?

வாரிசாய் வந்த அழகைச் சந்ததிக்கு அளித்திடு !

கடன் பெற்றதைப் பயன் படுத்தல் முறையாம்.

சேமிப்பு பேரளவு ! ஆயினும் வாழாய் நீ !

கைச்சுகப் போக்கு தனிமையில் மட்டுமே !

உன்னை ஏமாற்றிக் கொள்வது நீயே !

என்ன பதிலோ இயற்கை செத்தபின் கேட்டால் ?

ஏற்புடைச் சந்ததி எப்படி விட் டேகுவாய் ?

சந்ததி படைக்கா சுந்தரம் புதைபடும் உன்னுடன் !

விந்தின் பயன் பெறின் பிறவிப் பலன் வாழ்வில் !

+++++++++++++

Sonnet : 4

Unthrifty loveliness, why dost thou spend

Upon thy self thy beauty’s legacy?

Nature’s bequest gives nothing, but doth lend,

And being frank she lends to those are free:

Then, beauteous niggard, why dost thou abuse

The bounteous largess given thee to give?

Profitless usurer, why dost thou use

So great a sum of sums, yet canst not live?

For having traffic with thy self alone,

Thou of thy self thy sweet self dost deceive:

Then how when nature calls thee to be gone,

What acceptable audit canst thou leave?

Thy unused beauty must be tombed with thee,

Which, used, lives th’ executor to be.

++++++++++++

Sonnet Summary

The youth is urged once again not to throw away without regard the beauty which is his to perfection. It is Nature’s gift, but only given on condition that it is used to profit the world, that is, by handing it on to future generations. An analogy is drawn from money-lending: the usurer should use his money wisely. Yet the young man has dealings with himself alone, and cannot give a satisfactory account of time well spent. If he continues to behave in such a way, his beauty will die with him, whereas he could leave inheritors to benefit from his legacy.

+++++++++++++

தகவல் :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)

5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)

+++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 24, 2012

Series Navigationபிரியாவிடைஇரகசியக்காரன்…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

6 Comments

 1. Avatar
  ELAIYARAJA.A says:

  First i proud to be a tamilan because you sir
  your tamil translate work is amazing
  i’m a eng teacher
  but i understand eng through tamil
  when i searched in net i got you in this site
  thank you very much
  please continue ur work sir

 2. Avatar
  jayashree shankar says:

  உயர்திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
  தங்களது படைப்புகள் மொழியாக்கம்…கவிதைகள்…
  அறிவியல், விஞ்ஞானக் கட்டுரைகள் அனைத்தும்
  போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய எழுத்துப்
  பொக்கிஷங்கள். தங்களின் வலைப் பக்கத்தைப்
  பார்த்து பிரம்மித்தேன்..! எழுத்துலகின் உமது
  சேவை…..உயர்ந்தது. திண்ணையில் தங்கள்
  படைப்புகள் தனித்துவமானது. நன்றி.
  போற்றுகிறேன். இவண்….
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 3. Avatar
  ஜெயபாரதன் says:

  அன்புமிக்க ஜெயஸ்ரீ ஷங்கர்,

  என் படைப்புக்களைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *