பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய்
இந்த வரம் வாங்கி வந்தேன்.
“கூடு விட்டு கூடு பாய்ந்து”
மெஹந்தி பிழியும்
இந்த கூம்புக்குள்
கண் கூம்பி தவம் இருந்தேன்.
இந்த “பியூட்டி பார்லருக்குள்”
அவள்
இன்று இதே நேரம் வருவாள்
என்று எனக்குத்தெரியும்.
அப்படித்தான் அவள் தோழியிடம்
பெசிக்கொண்டாள்.
அதோ சல்வார் கம்மீஸ்களின்
சரசரப்புகள் ஒலிக்கிறதே.
கண்கள் மூடி காத்திருந்தேன்.
கனவு விரித்து கூம்புக்குள்
சுருண்டு கிடந்தேன்.
இன்னும் சற்று நேரத்தில் அவள்
பொன் காந்தள் விரல்களில்
மின்னல் பூங்கொடிகளாய்
பின்னிக்கிடப்பேன்…அவள்
உள்ளங்கையில் என்
உள்ளம் பதிப்பேன்.
செம்பஞ்சுக்குழம்பில் அவள்
நாணத்தை பூசியபோதெல்லாம்
அந்த நறும்பூச்சில் நான்
பூக்கலாகாதா? என்ற
ஏக்கத்தையெல்லாம்
இப்போது போக்கிக்கொள்வேன்.
இந்த பூ ஓவியம் கொண்டு
அவள் முகம் மூடிக்கொள்ளும்
போதெல்லாம்
சூரியனைக்கரைத்து
சந்திரனில் ஊற்றிக்குடித்தது போல்
வெப்பமும் தட்பமும்
கலந்து சுவைப்போம்.
சரி.இருங்கள்.
மெஹந்தி
ஏழுவர்ண அருவியாய்
இறங்கி விட்டது.
அடடா! ஐயோ!
அமிலக்கடலில் விழுந்தது போல்
உடலெல்லாம் எரிகிறதே.
ஆயிரம் ஆயிரம் வாட்ஸ்
மின்சாரம்
பாய்ந்தது போல் அல்லவா
இருக்கிறது.
கற்பு எனும் நெருப்பு
இது தானோ..
அய்யய்யோ
தாங்க முடியவில்லையே!!
என்ன கூத்து இது?
மெஹந்தி படர்ந்தது
அவளுக்கு அல்ல.
அவளது தோழிக்கு!
அவள் வரவில்லை.
அவள் தோழி..
அதான்..அந்த
நெட்டக்கொக்கு
கழுத்தாள் தான்
வந்திருக்கிறாள்..
அய்யகோ என் செய்வேன்..
அட! சட்!
நிறுத்து!
ஏன் இந்த புலம்பல்?
இது கொலவெரி யுகம்.
21.. 22 …23..ஆம் நூற்றாண்டுன்னு
போய்க்கினே இருக்கணும்.
இப்ப
என்னாண்ற?
சும்மா..ஜாலியாய்
டைம் பாஸ்ஸுக்கு
தோழி மேல் தான்
படர்ந்தால் என்ன?
வண்ண வண்ண பூங்கொடியாய்
அவள் கைகளில் இறங்கினேன்.
என் தாவு தீர்க்க
தோள் கொடுத்த
தோளி அவள்!
“அய்யோ! அய்யோ!
உடம்பெல்லாம் எரிகிறதே!
யாராவது காப்பாத்துங்க..
ஆயிரம் ஆயிரம் கம்பளிப்பூச்சிகளாய்
கையெல்லாம் ஒரே கொப்பளம்..
சீக்கிரம் காப்பாத்துங்க…”
இப்போ..
அந்த தோழி தான்
அலறினாள்! அரற்றினாள்!
மயங்கிச்சாய்ந்தாள்.
- கல்விச்சாலை
- சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்
- அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்
- இந்த வார நூலகம்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 2
- ‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!
- இவள் பாரதி கவிதைகள்
- நினைவுகளின் சுவட்டில் – (85)
- வாப்பாவின் நாட்குறிப்பைப் போல
- பழமொழிகளில் எலியும் பூனையும்
- பாண்டிராஜின் ‘ மெரினா ‘
- பரிகாரம்
- புள்ளியில் மறையும் சூட்சுமம்
- கம்பன் கழகத்தின் பொங்கல் விழா
- மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3
- அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)
- மெஹந்தி
- அதோ ஒரு புயல் மையம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13
- முன்னணியின் பின்னணிகள் – 26
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)
- பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு
- ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘
- விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘
- மாதா+ பிதா +குரு < கொலைவெறி
- செல்லாயியின் அரசாங்க ஆணை
- “வரும்….ஆனா வராது…”
- எருதுப் புண்
- ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2
- கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்
- சிற்றேடு – ஓர் அறிமுகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10
- ரயிலடிகள்
- தோனி – நாட் அவுட்
- மோகம்
- பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்
- அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9