கிண்ணியா இஜாஸ்
குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய
நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி
சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான்
என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன.
பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு
இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப்
போய்க் கிடக்கிறது. எதுமே செய்ய
இயலாது போகையிலும் உண்மையின்
உறைவிடம் இன்றும் அநாதரவற்ற
நிலையில் இருக்கையிலும்
அடிமைப் படுத்தப்பட்ட வாழ்வுக்கும் மீழ்தழின்றி
தவிக்கும் பொழுதுகளிலும் மெழுகு பூசப்பட்ட
வாழ்வுக்கான போர்கைள் கைகளில்
சிக்கிக் கொள்ள எத்தனிக்கையிலும்
நரம்புடைக்கப்பட்ட நாட்கள்தான் என்றுமே
எல்லையில்லாமல் விழிப்புக்குள்ளாகிறது.
மொழிதலுக்கும் மொழி பெயர்ப்புச் செய்து விட்டதும்
எழுந்த ஆக்ரோஷங்கள் இன்னும்
அமைதிப் படாததல்தானா
இன்னும் என் ஆன்மா
இருள் பற்றலுக்குள்ளாகிறது.
எண் திசைகளிலும் எமை நோக்கும் தோட்டாக்கள்
எம்மைக் குறி வைத்தாலும் நியாயம் தேடிய தராசுகள்
தாறுமாறாய் உயர்கையிலும் ஊதிச்சுருங்கும்
இதயத்தின் சுற்றோட்டத்தை சீர் படுத்த யாருமற்ற
அநாதையாய் நான் தவிக்கையிலும்
சரிதலுக்குள்ளாகும் எண்ணம் மட்டும் உப்புக்கரிக்கப்பட்டு
நாளைய வாழ்தளைக் கசிப்புக்குள்ளாகி விடுகிறது.
நம்பிக்கையில் பற்றிப் பிடித்த கயிறுகளும்
மூன்று சாண் அளவில் அறுக்கப் பட்ட போதிலும்
அதை இறுக்கக் கட்ட முன் வரும் உள்ளங்களோடுதான்
பயணப்பட்டு விடுகிறது என் மனதும்.
நிச்சயம் பயணப்பட இருக்கும் வாழ்தலைத்
தடை செய்ய கொளுத்தப் பட்டு விடும்
நெருப்புக்குள் குளிர்காயும் காலம்
நல்ல கைகோர்ப்பினால் வளப்படுத்தப்பட்டு
விடுகிறது ஒவ்வொரு செயற்பாடுகளிலும்.
தற்போதுகளில்
இருள் நீங்கிய நாளைய வாழ்தல் எப்படியும்
நாளைக்கு எமக்கு வசப்படத்தான் போகிறது.
- பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
- ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்
- நினைவுகளின் சுவட்டில் – 86
- எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
- எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
- பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
- மயிலு இசை விமர்சனம்
- பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
- கலங்கரை விளக்கு
- வேதனை விழா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
- பழமொழிகளில் ஒற்றுமை
- மரணம்
- அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
- கனவுகள்
- பட்டறிவு – 1
- தற்கொலையிலிருந்து கொலைக்கு …
- இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
- குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
- ஐங்குறுப் பாக்கள்
- ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11
- இவள் பாரதி கவிதைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 27
- Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
- தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54