முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

This entry is part 5 of 45 in the series 26 பிப்ரவரி 2012

 

முனைவர் மு.வ – அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும்  இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும்.  19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா  சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன்  முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன.

 

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல   விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 

 

கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக ‘மு;வ நூற்றாண்டுவிழா’   மலர், ‘அன்னை தெரெசா மலர்’, ‘கவிஞர் தமிழ்ஒளி மலர்’ ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன். 

 

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன்  யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின்  ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக்   கேட்ட அவையோர் அசந்துபோயினர்.  

சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்  பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்

 

தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல்கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள்அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன்,சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர்.

 

இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது. 

“ஊழ்  பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில் 

கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே“. 

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நடுவராக அமர்ந்தார் 

கொள்ளத்த்தக்கனவே என்று திருமதிகள் எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன்பேசினார்கள். தள்ளத்தக்கனவே எனத் திருமதிகள் லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால்,அருணா செல்வம் பேசினர்.அவரவர்களும் தத்தம் கோணத்தில் தம் கருத்துகளை  வலியுறுத்தினர்.  நடுவர் தன் முடிவை அறிவித்தார் :

‘ஊழ்’ பற்றி வள்ளுவர் சொல்லும் கருத்துகள் இக்காலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமாக இல்லை ; ஊழ் என்ற அதிகாரமேவள்ளுவர் இயற்றியதாக இருக்க முடியாது ; கடைசிக் குறள் மட்டுமே ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறது.அதனை மட்டும் வேண்டுமானால் ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்அதனையும் விஞ்சும் மாற்றுக் கருத்தை – antidote- ஆள்வினை உடைமை அதிகாரக் கடைசிக் குறளில்வள்ளுவர் கூறிச் செல்கிறார். எனவே திருவள்ளுவர் ‘விதி’யை ஏற்றுக்கொள்ளவில்லை, மனிதனின் மதியையும் முயற்சியையுமே வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்காட்டுகள் பல  காட்டி

‘ஊழ்’ அதிகாரத்தில் வள்ளுவர் கூறியதாகச்  சொல்லபடும் கருத்துகள் தள்ளத்தக்கனவே’ என்று தன் தீர்ப்பை ஆணித்தரமாக நிலை நாட்டினார்.

ஓவியப் போட்டி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நு}ல், குறுந்தகடு எனப் பரிசுகள் வழங்கப் பட்டன. பங்கு கொண்ட இளைய மகளிர்க்கு அழகிய பட்டு மேலாடையும் (shawl) இளைஞர்களுக்குத் துண்டுகளும் பெரியவர்களுக்கு நூல்களும் பரிசாகக் கடைத்தன. இறுதியில் திருமிகு பழ.சிவஅரி, கழகத்தின் துணைப் பொருளாளர்,  நன்றி கூறினார். திருமதிகள் சுகுணா சமரசம் சிவகாமி சிவகுமார் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்.  .

நேரடி வருணனை : புதுவை எழில்

 

படங்கள் : திருமதி லூசியா லெபோ. 

முழு வருணனையைப்  படிக்க இங்கே சொடுக்குக

http://www.vallamai.com/literature/articles/16589/

முனைவர் மு.வ. பற்றிய பேரா. பெஞ்சமின்  லெபோ கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குக :

http://www.vallamai.com/literature/articles/16536/

 

Series Navigationபேரதிசயம்அப்பாவின் சட்டை
author

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *