Articles Posted by the Author:

 • கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

  கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

  பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழிலக்கிய உலக மாநாடு 07.07.2012 சனிக்கிழமை ‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை   முன்னுரை : கம்பன் – கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன்! பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று பல்லாயிரம் பேர்களைக் கொன்று புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு! பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் ! கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா? […]


 • முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

  முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

    முனைவர் மு.வ – அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும்  இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும்.  19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா  சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன்  முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன.   நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல   விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.    கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக ‘மு;வ நூற்றாண்டுவிழா’   மலர், ‘அன்னை தெரெசா மலர்’, ‘கவிஞர் தமிழ்ஒளி மலர்’ ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன்.    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன்  யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின்  ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக்   கேட்ட அவையோர் அசந்துபோயினர்.   சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர்  பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.    தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல்கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள்அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன்,சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர்.   இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது.  “ஊழ்  பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில்  கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே“.  பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நடுவராக அமர்ந்தார்  கொள்ளத்த்தக்கனவே என்று திருமதிகள் எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன்பேசினார்கள். தள்ளத்தக்கனவே எனத் திருமதிகள் லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால்,அருணா செல்வம் பேசினர்.அவரவர்களும் தத்தம் கோணத்தில் தம் கருத்துகளை  வலியுறுத்தினர்.  நடுவர் தன் முடிவை அறிவித்தார் : ‘ஊழ்’ பற்றி வள்ளுவர் சொல்லும் கருத்துகள் இக்காலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமாக இல்லை ; ஊழ் என்ற அதிகாரமேவள்ளுவர் இயற்றியதாக இருக்க முடியாது ; கடைசிக் குறள் மட்டுமே ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறது.அதனை மட்டும் வேண்டுமானால் ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்அதனையும் விஞ்சும் மாற்றுக் கருத்தை – antidote- ஆள்வினை உடைமை அதிகாரக் கடைசிக் குறளில்வள்ளுவர் கூறிச் செல்கிறார். எனவே திருவள்ளுவர் ‘விதி’யை ஏற்றுக்கொள்ளவில்லை, மனிதனின் மதியையும் முயற்சியையுமே வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்காட்டுகள் பல  காட்டி ‘ஊழ்’ அதிகாரத்தில் வள்ளுவர் கூறியதாகச்  சொல்லபடும் கருத்துகள் தள்ளத்தக்கனவே’ என்று தன் தீர்ப்பை ஆணித்தரமாக நிலை நாட்டினார். ஓவியப் போட்டி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நு}ல், குறுந்தகடு எனப் பரிசுகள் வழங்கப் பட்டன. பங்கு கொண்ட இளைய மகளிர்க்கு அழகிய […]


 • கம்பன் கழகத்தின் பொங்கல் விழா

  அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன் நனி நன்றியன் பெஞ்சமின் லெபோ செயலர் பிரான்சு கம்பன் கழகம் .


 • பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

  பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

  முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி. மங்கல விளக்குகளுக்குத் திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர் ஒளியூட்டிய பின், கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர். ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் […]


 • பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

  அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன் தலைவர்: கம்பன்கழகம் – பிரான்சு பேராசிரியர் பெஞ்சமின் லெபோ செயலாளர்: கம்பன் கழகம் – பிரான்சுதிருமிகு தணிகா சமரசம் பொருளாளர்:  கம்பன் கழகம் – பிரான்சு கம்பன் கழகச் செயற்குழுவினர் கம்பன் கழக மகளிர் அணி கம்பன் கழக […]


 • பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

  கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி நகருக்கு ( Paris – பிரஞ்சு ஒலிப்பு ‘பரி’ ) 50 கி .மீ தொலைவில் உள்ள ‘மோ’ (Meaux) என்னும் ஊரில் கடந்த ஏழு ஆண்டுகளாய் இயங்கி வருகிறது பிரானசு தமிழ் கண்ணதாசன் கழகம். இக்கழகத்தின் மகளிரணி, கடந்த இரண்டு ஆண்டுகளாய்க் காந்தி விழாவையும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஒக்தொபர்த் திங்கள் […]


 • தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !

  தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !

  பேராசிரியர்  பெஞ்சமின் லெபோ, பிரான்சு ‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்டுச்  செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப்  பூக்கள்.  காரணம்,  அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர்  ம. இலெ.தங்கப்பா அவர்கள்  அடியேனின் நண்பர்.   புதுச்சேரித் தாகூர்  கலைக் கல்லூரியில்  1970 -ஆம் ஆண்டு,  பணியில் யான் சேர்ந்த போது,  அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார். “இவர்தாம் தங்கப்பா…” – என் இனிய  நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது […]