அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்

This entry is part 18 of 42 in the series 25 மார்ச் 2012

 

 

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்த்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜ்ப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உல்கநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.
அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டிகளுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.

 


கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்

எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!  இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.

கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.

 


ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்

1. ஞாநியின் கருத்து:

கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

எனது விளக்கம்:

செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.

விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.

2. ஞாநியின் கருத்து:

பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

எனது விளக்கம்:

நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

 

 

3. ஞாநியின் கருத்து:

கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

எனது விளக்கம்:

அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

4. ஞாநியின் கருத்து:

கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!

எனது விளக்கம்:

அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!

 

 

மீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

2.  http://www.npcil.nic.in/

செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

1.  ஞாநியின் கருத்து

மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.

எனது விளக்கம்

http://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது

2.  ஞாநியின் கருத்து

வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.

எனது விளக்கம்.

இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.

3.  ஞாநியின் கருத்து

கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனது விளக்கம்

இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனஐ யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.

4.  ஞாநியின் கருத்து

கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].

எனது விளக்கம்.

கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல !

இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

 


இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.

அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.

 

கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

 


அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படா திருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனை களைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக் குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார்.

ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.

 

(தொடரும்)
++++++++++++++

தகவல்:
1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)

http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)

 

இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:


1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]

16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)

17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)

 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

Series Navigationகுளவி கொட்டிய புழுகாரைக்குடியில் கம்பன் விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

15 Comments

  1. Avatar
    punai peyaril says:

    ஜெயபாரதன், நீங்கள் ஒரு கட்டுரையில் டான்ஸ் ராணி என்பதான ஒரு அடைமொழியை ஜெயலலிதாவிற்கு கொடுத்திருந்தீர்கள். அது உங்கள் எழுத்தின் தரத்தை குறைத்திருந்தது. உங்கள் எழுத்துப் போல் தான் 70களில் மூளையுள்ள விஞ்ஞானிகள் ரசாயன உரத்தை அதிகமாக 17:17:17 என்று விளம்பரங்களின் மூலம் மார்கெட் செய்தார்கள். ஆனால் இன்று…? அது போல் தான், இதுவும். ஆனால், இதை தற்போதைய தீர்வாக மட்டுமே கொள்ள முடியும். வெகு சீக்கிரம் மாற்று மின்சார வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்….

  2. Avatar
    ஜெயபாரதன் says:

    தமிழகத்துக்குக் காற்றாடி, சூரியசக்தி, அலைச்சக்தி, புவிக் கனல் சக்தி, அனல் மின்சாரம், புனல்மின்சாரம், அணுசக்தி மின்சாரம் அனைத்தும் தேவை. இந்தியாவிலே விஞ்ஞானிகள் கடந்த 50 ஆண்டுகளாக விருத்தி செய்து அணுமின்சக்தி ஆற்றலை மின்சாரத்துக்குப் பயன்படுத்த உன்னத தொழில்நுட்பச் சாலைகளை உருவாக்கி உள்ளது.

    சி. ஜெயபாரதன்.

  3. Avatar
    Ramesh says:

    Million thanks jeyabradhan. Your arguments really add value to the discussion. Gnani is simple anti establishment writer who only wants to be critic empty vessel. But we need some noise also to know the truth.
    There is one more no sense person called nagarjun who claims to be known chap in all these matter and write rubbish.
    As general public, without neutral thinking and science approach it would have been very difficult for us to come to the conclusion.
    Add some measure they have to take at the time of building and what are the contegency plan if any issue happened. As well from insurance and rehabilitation part throw some light how other developed countries operate.

  4. Avatar
    ஜெயபாரதன் says:

    கூடங்குளம்: அரசு- போராட்டக் குழு பேச்சுவார்த்தை- உண்ணாவிரதம் வாபஸ்!
    செவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012, 17:19 [IST]
    Save This Page
    Print This Page
    Comment on This Article
    A A A
    ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடன் அரசு அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையி்ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்கள் திடீரென்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்த பின்னனி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

    இதனால் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பொன் இசக்கியம்மாள், பிரேமா, தாமஸ், நேரூஜி, அஞ்சலி ஜெயராஜ் ஆகியோரின் உடல் நிலை மோசமாகியுள்ளது. இடிந்தகரையைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்இசக்கி மேடையிலேயே மயங்கினார். அவரை அருகில் உள்ள லூர்து அன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே நேற்று முன்தினம் மயக்கம் அடைந்த அதே ஊரை சேர்ந்த ராஜு மனைவி மெல்ரட் என்பவருக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உண்ணாவிரத பந்தலில் உதயகுமார் பேசியதாவது, மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்தும் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. பொதுமக்களை எந்த குழுவும் சந்திக்கவில்லை. நாங்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். மாநில அரசின் பிரிதிநிதிகள் வந்தால் அவர்களுடன் பேசுவோம். அணு மின் நிலையத்திலிருந்து 30 கி்மீ சுற்றளவு எல்லைக்குள் இருப்பவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தல் வேண்டும்.

    நிலவியல், நீரியல், கடலியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு அரசே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அணு உலை பாதிப்பால் ஏற்படும் காப்பீடு தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம் போட்டுளளனர். அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

    பேச்சுவார்த்தை வெற்றி:

    இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடங்குளம் விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையை அரசு துவங்கியது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியது.

    ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பேராயர் யுவான் அம்புரோஸ், மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, கிராம மக்கள் 10 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசின் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அவரது மனைவியும் மாவட்ட துணை கலெக்டருமான ரோகிணி பிதாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவினர் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அதன் விவரம் வருமாறு,

    1) கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
    2) போராட்டக்குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
    3) அணு உலை விபத்து இழப்பீடு குறித்த இந்திய- ரஷ்ய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
    4) அணு உலையைச் சுற்றி 30 கி.மீ. பரப்பளவிற்குள் பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
    5) அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை எந்த முறையில் அப்புறப்படுத்துவது என்பது குறித்து விளக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

    ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடரும். அதே சமயம் ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என்று கலெக்டர் செல்வராஜ் உறுதியளித்தார். மேலும் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது சட்டப்பூர்வமாகத் தான் நடக்கும் என்றும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகத்தினர் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

  5. Avatar
    ஜெயபாரதன் says:

    Times of India

    Kudankulam N-plant to go on stream soon
    Mar 27, 2012, 04.10AM IST

    HYDERABAD: Even as situation remains tense at the Kudankulam Nuclear Power Project (KKNPP) in Tamil Nadu, the chairman and managing director of Nuclear Power Corporation of India Limited (NPCIL) S K Jain on Monday firmly stated that generation of nuclear power at the controversial plant would begin soon.

    “As soon as we get permissions from the regulatory bodies, we will begin power generation. Work is going on a war-footing as round the clock operations are in full swing at the two plants at Kudankulam,” S K Jain said at a press conference at Nuclear Fuel Complex (NFC) here. He, however, said he would not be able to specify a time frame at this juncture as clearances would first have to be obtained from the regulatory bodies.

    In the aftermath of the Fukushima Daiichi nuclear disaster last year, Jain said a safety assessment was conducted at all the 20 nuclear power plants in the country. Though safety aspects of all the power plants has been taken care of, he said another Rs 150 crore was being spent at the suggestion of PM Manmohan Singh to scale up safety measures. ” There are enough safety margins but we are still upgrading them,” he said.

  6. Avatar
    சீனு says:

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கங்கள். ஞானியின் வாதத்திற்கு அறவியல் பூர்வமான ஆதாரமான ஆணித்தரமான எதிர்வாதம். விளக்கமளித்தமைக்கு நன்றிகள் பல

  7. Avatar
    ஜெயபாரதன் says:

    I agree with Mr. Jayabarathan’s sound analysis.

    This explains Jayalalithaa’s dilemma and her considered decision to go ahead with the project; ELECTRICITY generation being the predominating factor. Kudankulam plant (I heard it is nearing completion) is a necessary evil until such time as alternative sources of energy are found; otherwise TN will come to a grinding halt. The committee appointed by Jayalalithaa after studying the safety concerns raised has indicated according to India Today that “the plant is equipped to deal with any situation such as earthquakes and tsunami strikes and its third generation reactors would shut down automatically in case of any problem.”

    Usha

    From: tamil_araichchi@googlegroups.com [mailto:tamil_araichchi@googlegroups.com] On Behalf Of RRavi Ravi

    +++++++++++

    திருவாளர் ஞாநி நினைப்பது போல் உலகில் 50 ஆண்டுகளாக அணுமின் உலைகள் இயக்கும் உலக நாடுகள் கருதுவதில்லை.

    இந்தியாவில் 2000 மெகாவாட் இரட்டைக் கூடங்குள அணுமின் உலை இப்போது இயங்கப் போகிறது.

    ஞாநியின் உபதேசம் நீர்மேல் எழுத்து போல் எழுதப்பட்டது.

    30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் “தேவையான தீங்குகள்” என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.

    கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் அடுத்தடுத்து 20 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.

    உலகில் அணுமின் உலைகள் இயக்கம் இன்னும் 25 – 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.

    கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.

    In India Atomic Power Industries & Space Exploration are two major interlinked components of its sustaining Infrastructures
    .

    சி. ஜெயபாரதன்.

  8. Avatar
    punai peyaril says:

    below is from vikatan vasagar feedback for the article,

    சாலை மறியலுக்கு தூக்கு தண்டனையா…?

    Rajesh: அனு உலை அனத்தையும் பெல்ஜியம் மூட முடிவு செய்துள்ளது தெரியுமா…. குவைத் அதனுடைய அனு உலை ஆர்டரை ரத்து செய்தது தெரியுமா….. கூடங்குளம் கழிவுகளை எங்கு, எப்படி வைக்கப் போகிறார்கள் தெரியுமா….. இந்தியாவின் மின் உற்பத்தியில் 2% தான் அனு உலை முலம் வருகிற்து…. நான் ஒரு மின்சார பொறியாளர்…. கய்கா அனு உலையில் கொஞ்ச காலம் வேலை பார்த்தவன்…..

    Jayabarathan should not use the word, தவறான for other people’s opinion,

    1. Avatar
      ஜெயபாரதன் says:

      2% Nuclear Power Capacity is = 5000 MWe + Kudungulam 2000 MWe (7000 MWe) with over one hundred industries to supply various nuclear products & Spare parts for 20 reactors to a minimum period of 30 years.

      Nuclear Power Technology is a job creator in India unlike the Renewable Energy Sources for over 30 years of the reactor operation.

      S. Jayabarathan

  9. Avatar
    punai peyaril says:

    Jayabaradhan uses the method, ::: talk technically with non technical people:::: all we need is how they are going to handle the waste…? let him answer this directly.

  10. Avatar
    ஜெயபாரதன் says:

    The Hindu

    News » National
    Published: March 1, 2012 01:47 IST | Updated: March 1, 2012 01:47 IST

    R. Chidambaram bats for Kudankulam
    Special Correspondent

    Says nuclear power imperative for energy security

    India’s nuclear programme is safe in terms of design, operation, regulatory mechanisms and in observance of safety culture — the main parameters to pursue the programme without any inhibitions, noted nuclear scientist and Principal Scientific Adviser to the Government of India R. Chidambaram has said.

    “We have learnt lessons from the Fukushima nuclear accident, particularly on the post-shutdown cooling system,” he said, but insisted that it should not unduly deter or inhibit India from pursuing a safe civil nuclear programme, which was imperative for energy security, an essential component to achieve sustainable development by 2020.

    He was giving a lecture on “Energy Technologies and Energy Security,” after receiving the ‘Rajiv Gandhi Outstanding Leadership Award-2011′ from the Academy of Grassroots Studies and Research of India (AGRASRI), a Tirupati-based NGO, on Wednesday.

    Dr. Chidambaram, who is also the Chairman of the Scientific Advisory Committee to the Union Cabinet, said there was no need for any apprehensions nor needless panic over the nation’s nuclear power plants (NPPs). They were ‘safe in design, operation, regulation and in observance of the safety culture.’

    A review carried out in all the nuclear plants, including the one at Kudankulam in Tamil Nadu, post-Fukushima, at the instance of Prime Minister Manmohan Singh, had indicated that everything was perfect and the safety culture followed was ‘excellent.’ “All nuclear plants are totally complying with the guidelines prescribed by the Ministry of Environment and the pollution control board vis-à-vis the release of thermal effluents into water bodies.”

    Dr. Chidambaram said the fears over the Kudankulam project were needless as it would be like stopping to eat food for the fear of choking or stop eating fish for the fear of bones getting stuck in the throat.

    Quoting international reports, he said the anti-nuclear feeling following the Fukushima incident now looked like no more than a ‘temporary blip’ as year-on-year improvement in its support had resumed.

    Keywords: India’s energy needs, Kudankulam nuclear plant crisis

  11. Avatar
    R V Aravintraj says:

    கூடங்குளம் திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து உற்பத்திக்கு தயாராக உள்ள ஒன்று. தமிழ்நாட்டில் கடும் மின் பற்றாக்குறை தற்போது உள்ளது. எனவே கூடங்குளத்தை அணுமின் உலை திட்டத்தை அதன் ஆரம்பக் கட்டத்தில் எதிர்த்து போராடி இருந்தால் தமிழகம் முழுவதும் அதற்கு ஆதரவு பெருகி இருக்கும். இப்போது பல கோடி செலவழித்தபின் கடும் மின் பற்றாக்குறை இருக்கும் இந்த சமயத்தில் எதிர்ப்பது அறிவீனம்.

    மேலும் போராட்ட குழுவினர் அணுமின் உலை வேண்டாம் என்பதில் மட்டும் தீர்க்கமாக இல்லாது, அதன் தொழில் நுட்பம் என்ன? யார் முதலீடு செய்கிறார்கள்? என்பது போன்ற தேவையற்ற விசயங்களில் தலையிடுவதன் மூலம் அவர்களின் நோக்கம் அணுமின் உலை வேண்டாம் என்பதை தவிர்த்து வேறெதொ இருப்பது உறுதியாகிறது. மேலும் அவர்கள் போராட்ட குழு உறுப்பினர்கள் ஒரு சார்பாக உள்ளது தௌ¤வாகிறது. இதுவே இதன் தோல்விக்கு காரணம்.

    அணுமின் உலை திட்டங்கள் இனி தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிப்பதை தடுப்பதிலும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு ஆதரவாகவும் ஏதேனும் முயற்சி இயக்கம் நடத்துவதில் இவர்கள் கவனம் செலுத்தினால் நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *