தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து

This entry is part 40 of 42 in the series 25 மார்ச் 2012

 

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இரவும் பகலும் காத்துள்ளேன்
எவளோ ஒருத்திக் காக
வருவாள் எனும் நம்பிக்கை யோடு.
வழிமேல் விழி வைத்து,
ஏங்கித் தவித்துத் தாகம் மிகுந்து
என் செவிகளைத் திறந்து.
எச்சரிக் கையோ டுள்ளேன் !
அமைதி யின்றி
எதிர்பார்க்கும் மனம்
அடிக்கடி
அவள் முகத் தெரிசனத் துக்கு.
பூந்தோட் டத்தில் அழைக்கும்
புள்ளின அரவமும்
துள்ள வைக்கும் என்னை !
வருவ தெவள் என்று
அறியாது !

காண வில்லை நான் அவளைக்
காலையில் விழித்ததும் !
பொறுத் திருக்க வேண்டும் நான்
இரவுக் கனவுக்கு !
உறக்கத்தின் திரை மறைவில் நான்
அவளைப் பிடிக்க முடிந்தால்
கனவோடு அவளைக்
கட்டி வைத்தி டுவேன் !
ஏங்கிப் பித்துடன் நான் காதலிப்பவள்
தொலைவில் போனாள் என்று
மலைப்பது கடினம !.
அழுத்த மான என் வேட்கை
இழுத்து வந்திடும் அவளை
என்னிடம்
ஆத்ம இச்சையால் !

 

+++++++++++++++++++
பாட்டு : 316 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). மயர் கேலாவில் ஒரு காதல் நோய் வாலிபனின்

கீதம் இது.
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 21, 2012

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 33விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *