மனத்தின் வானவில்.
கற்பனை செய்ததை
கருவாக்கி
உருவாக்கும்
மயிர்ப்புல் தடவியதில்
வனங்கள் உயிர்க்கும்.
முகங்கள் சிரிக்கும்.
பூவும் புள்ளும்
புது மொழி பேசும்.
திரைச்சீலையில்
சுநாமிகளும் தெறிக்கும்.
குங்குமக்கடலில்
சூரியன் குளிக்கும்.
நாணம் கலைத்த
கடலெனும் கன்னி
முத்தம் கொடுத்து
மூடிக்கொள்ள
அந்தி படர்ந்து
பந்தி விரிக்கும்…இது
புருசுச்சுவடுகளின்
புதுக்கவிதைகள்
உன்மத்தம் மோனம் ஆகி
உயிரைக்குழைத்தது
அக்ரிலிக் வண்ணம்.
அடிமன உடலை
வருடிக்கொடுக்கும்
அன்னச்சிறகு
விரிந்து பரந்து
காட்சிகள் விரிக்கும்.
அதன் இடுக்குகளின்
கண்கள் வழியே
அண்டம் தெரியும்.
அக்கினி தெரியும்
அவள் முகமும் தெரியும்.
அதில்
பொசுங்கிய நளனோ
பொங்கி வழிந்தது
தமயந்தி முகமே.
ரவிவர்மா
தூரிகைக்கு பிரம்மா.
அந்த பிரம்மனின்
தாமரை இதயம்
துடிக்க கற்றது
என் காதலியின் இமைகள்.
ஒளிந்து பார்க்கும்
கருவண்டு விழிகளுக்கு
சாமரம் வீசுவதும்
இமைகள் அசைவில்
நொறுங்கிக்கிடக்கும்
இமயப்பனியின்
பளிங்கு சில்லுகள்
காதலின் குளிர்ப்பை
குழைத்தது..இந்த
தூரிகையே.
தூரிகை எழுந்தது.
தூரிகை நடந்தது.
ஏதோ ஒரு
“சோம்னாம்புலிஸ்ட்” போல
உருண்டது புரண்டது.
அதன் உறக்கத்தின் ஊடே
நடந்த தடங்களில்
எத்தனை எத்தனை
சித்திரங்கள்.
பகீரதன் தவம்
பரமசிவனின் விரிந்த சடை.
ஐசக் நியூட்டனின்
புவி ஈர்ப்பு மூர்க்கம்.
கங்கையின் வீழ்ச்சி.
அற்புத சித்திரம் இது.
மார்கண்டேயனுக்கு
எருமையில் வரும்
மரணம் அங்கே
எகிறிப்போகும் சித்திரம்
அந்த குறும்பு மழலையின்
பிஞ்சுக்காலை உரலில் கட்டிய
பேதைத்தாய்
யசோதையின் கண்களில்
அப்பாவித்தனத்தின் அருமைச்சித்திரம்.
ஆதிமூலமே என்று அங்கே
ஆனை பிளிறும்
அதிர்ச்சிக்குரல் நம்
அடியிலும் அதிரும்
அருமைச்சித்திரம்.
ஓசை காட்டி பாட்டு முழக்கும்
சப்பளாக்கட்டைகள் கூட இங்கே
சப்பணம் இட்டு
புராணங்கள் பார்க்கும்.
தூரிகைப்பறவைகள்
எச்சமிட்டாலும்
எத்தனை அழகு!
பிரபஞ்சத்தைக்கூட
பிசிறுகள் ஆக்கி
புருசுகள் ஆக்கி
உசிருகள் காட்டும்
உயர்ந்த படைப்புகள் உதித்தன.
ரவிவர்மாவின்….
வர்ணக்குழம்பின் கர்ப்பத்தில்.
புராணங்கள் சொன்னதால் இவன்
புருசுமயிர்கள் கூட
புனிதம் ஆயின.
புல்தடுக்கி விழுவது போல
தூரிகை தடுக்கி விழும்
பாலைவனமும்
சோலை வனம் ஆகும்
இந்த பிரம்மாக்களிடம்.
ஒரு தூரிகை விழுந்ததில்
அந்த காகிதம் கூட
காரிகை ஆனது.
==============================
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை