Posted in

கடவுளும் கடவுளும்

This entry is part 20 of 28 in the series 29 ஏப்ரல் 2012

 

கடவுளும் கடவுளும்
பேசிக்கொள்கிறார்கள்.

“உன்னை இருக்கிறது
என்கிறார்கள்
என்னை இல்லை
என்கிறார்கள்”

“ஆமாம் புரியவில்லை.”

“இல்லையை
இல்லை என்று சொன்னால்
இருக்கிற‌து
என்று ஆகி விடுகிற‌து”

“இருக்கிற‌தை
இல்லை என்று சொன்னால்
இல்லை என்று ஆகிவிடுகிற‌து.”

“ம‌ண்டையில்
ம‌த்து க‌டைகிற‌ “அல்ஜீப்ரா” தான்
க‌ட‌வுளால‌ஜி.

க‌ட‌வுள் புராண‌ங்க‌ளின் ப‌டி
க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள்
எங்குபார்த்தாலும்
க‌ட‌வுள்க‌ள்.

எங்கு பார்ப்ப‌து?
க‌ட‌வுளுக்கு
தீர்வு சொன்ன‌வ‌னே
ம‌னித‌ன்.

க‌ட‌வுள் போய்விட்டார்.
க‌ட‌வுள் எங்கு போனார்?
ம‌னித‌ன்
சொன்ன‌ இட‌த்துக்கு.

க‌ட‌வுள் அதிச‌ய‌ப்பட்டார்.
ம‌னித‌ன் சொல் ப‌டி
க‌ட‌வுள் போவ‌தா?
க‌ட‌வுள் கேட்டார்.

க‌ட‌வுள் ப‌தில் சொன்னார்.
க‌ட‌வுளை
வ‌ர‌ச்சொன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.
போக‌ச்சோன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.

ம‌னித‌ன் இட‌த்தில் க‌ட‌வுளை
க‌ட‌வுள் இட‌த்தில் ம‌னித‌னை
மாறி மாறி வைத்துக்கொண்டு
க‌ண்ணாடிக‌ள்
முக‌ம் பார்த்துக்கொன்ட‌ன.

ம‌னித‌ன் இட‌த்தில் ம‌னித‌னை
மனிதன்
எப்போது பார்க்க‌ப்போகின்றான்?

அர்ஜுன‌ன் கேட்டான்.
கிருஷ்ண‌ன் சொன்னான்.

நானே த‌ர்ம‌ம்
நானே அத‌ர்ம‌ம்
நானே ர‌த்த‌ம்
நானே ச‌த்த‌ம்
நானே யுத்த‌ம்
நானே ச‌மாதான‌ம்.
நானே பிம்பம்.
நானே பிம்பத்தின் பிம்பம்.

பிம்பம் பெற்ற பிம்பம்
பிர‌ம்மம் ஆனது.
மனிதம் வந்து கணிதம் சொன்னது.
பிம்ப‌த்தின் பிம்ப‌ம் இன்ஃபினிடி என்றது.
உடைத்துப்பார் சீரோ வந்திடும்.
இதுவும் கூட‌ விஸ்வ‌ரூப‌ம்.
நாத்திக‌த்தின் விஸ்வ‌ரூப‌ம்.

இருப்ப‌தை க‌ட‌வுள் என்றால்
இல்லாத‌தை “கிட‌வுள்” என‌லாமா?
“அடி கிடி”ப‌ட்டுவிட‌ப்போகிற‌து
பார்த்து போ
க‌ட‌வுள் க‌ட‌வுளிட‌ம் சொல்கிறார்.
க‌ட‌வுள் கிட‌வுள் வ‌ந்துவிட‌ப்போகிற‌ர்
சீக்கிர‌ம் போ.

கிருஷ்ண‌னிட‌ம் இந்த‌ “கி” புர‌ட்ட‌ல்க‌ள்
ப‌லிக்காது.
புர‌ட்டினாலும்
கிருஷ்ண‌ன் கிருஷ்ண‌ன் தான்.

கிருஷ்ணனின் ஸ்லோகங்களில்
நாத்திக வாடையே அதிகம்.
“என்னையே நினை” என்று சொல்வது
மனிதனாக என்னை நினை
என்று சொல்வ‌தே ஆகும்.
க‌ட‌வுள் எனும் பாம்புச்ச‌ட்டையை
உரித்துப்போட்டுவிட்டு விட்ட‌
சாண‌க்கிய‌ங்களின் ம‌னித‌ன் அவ‌ன்.

ம‌னித‌ன்
க‌ட‌வுளாக‌ அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் கடவுள் என்று சொல்வதை விட‌
க‌ட‌வுள் ம‌னித‌னாக‌
அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் ம‌னித‌ன் என்று சொல்வ‌தே
க‌ட‌வுள்க‌ள் ம‌னித‌னிட‌ம்
புராண‌ங்க‌ள் கேட்க‌வ‌ந்திருக்கிறார்க‌ள்
என்று புல‌னாகிற‌து.

க‌ட‌வுளும் க‌ட‌வுளுமாய் தான்
வ‌ந்தார்க‌ள்.
அத்வைத‌த்தை
அவ‌ர்க‌ள் புரிந்துகொண்டார்க‌ள்.

அவ‌ர்க‌ளே புரிந்து கொண்ட்டார்க‌ள்
அவ‌ர்க‌ள் யாருடைய‌ பிம்ப‌ங்க‌ள் என்று.

ம‌னித‌ அறிவு
ஒரு க‌ல்
அதோ க‌ண்ணாடி.
பிம்ப‌ங்க‌ள் நொறுங்கின‌.

க‌ல்.
ஆம் க‌ல்..
க‌ல்லும் வ‌ரை க‌ல்.

ருத்ர‌ங்க‌ள் ஜ‌பித்தாலும் ச‌ரி.
மீமாம்ச‌ங்க‌ள் ப‌டித்தாலும் ச‌ரி.
அந்த‌ க‌ல் தான் கல்.

==========================================

Series Navigationமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23நூபுர கங்கை

10 thoughts on “கடவுளும் கடவுளும்

  1. அப்பப்பா… மிக மிக ஆழ்ந்த தத்துவங்கள்… தத்துவங்களா அல்லது சத்தியங்களா? பல முறை படித்தேன். சிலவற்றை உணர முடிந்தது.. பலதும் உள்வாங்க எண்ணம் கொண்டுவிட்டேன். முயற்சி திருவினையாக்கும், நாமெல்லோரும் கடவுளர்கள்தானே என்ற நம்பிக்கையில்.. நன்றி ஐயா.

    அன்புடன்
    பவள சங்கரி.

  2. பிம்பத்தின் பிம்பம் இன்பினிட்டிவ்…கடவுள்..கிடவுள்..ரூம் போட்டு யோசிப்பீங்களோ……எந்த லாட்ஜ்னு சொன்னா வசதியா இருக்கும்…

  3. அன்புள்ள பவளசங்கரி அவர்களே

    “தத்வமஸி” (நீயே அதுவாய்இருக்கிறாய்)
    “அஹம்ப்ரஹ்மாஸ்மி”((நான் கடவுளாய் இருக்கிறேன்)என்றெல்லாம் கடவுளை தன்மை முன்னிலை படர்க்கை இலக்கணங்கள் சூட்டி அழகு பார்த்துவிட்டு அப்புறம் யோகம் என்று எல்லாவற்றையும் (உடல் உயிர் மரணம் மனம் ஆகிய எல்லாவற்றையும்)ஒரு சிந்தனைப்பிழம்பில் போட்டு புடம் போடும் அறிவு கூட மனிதனிடமே முகிழ்த்திருக்கிறது.எனவே மனிதன் தன்னை முகம் பார்க்க தன் மீது அறிவு முலாம் பூசிக்கொண்ட கண்ணாடி பிம்பமே கடவுள் என்பது.அதனால் தான் ஆத்திகமும் நாத்திகமும் ஒன்றை ஒன்று இப்படிப் பார்த்துக்கொள்கின்றன என்ற கருத்தே என் கவிதை.உங்கள் ஆழமான ரசனையே என் கவிதையின் முத்தாய்ப்பு.மிக நன்றி

    அன்புடன்
    ருத்ரா

    1. மீண்டும் அருமையான விளக்கம் சொல்லி புரியாததையும் புரியவைத்து, முடித்த முடிச்சுகளை அவிழ்த்துவிட்டு அனைத்தையும் உணரசெய்து என் அறிவுத் தெயவத்தை கண் திறக்கச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி..

      அன்புடன்
      பவள சங்கரி

  4. அன்புள்ள‌ சோமா அவ‌ர்ளே

    எந்த லாட்ஜ் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி வடிவேலு பாணியில். அதைப்படித்து சிரித்து சிரித்து என் வயிறு குலுங்கி விட்டது.ரசனை
    மிக்க உங்கள் கடிதம் தான் அந்த லாட்ஜ்.அதைப்படித்ததும் அடுத்த கவிதைக்கு
    ஒரு உருவம் கிடைத்து விடுகிறதே.

    மிக்க நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

  5. அன்புள்ள ஏ.ஜெ.ஜீவானந்தம் அவர்களே

    இருப்பதை இல்லை என்றும் இல்லாதை இருப்பது என்றும் சொல்வது ஒரு கணித சமன்பாட்டை நிரூபிப்பது போல் தான்.எக்சை ஒய்க்கு சமம் என்றோ சமம் இல்லையென்றோ ஆரம்பித்து உங்கள் அறிவு வேள்வியைத்தொடங்குங்கள்.இது முழுக்க முழுக்க மனித சிந்தனைக்கு பயன் படவேண்டும்.அவ்வளவே.

    நன்றி
    அன்புட‌ன்
    ருத்ரா

  6. பிதற்றினால் ஞானியென்று யாரோ ஒருவன் சொன்னது கேட்டானோ இவன்,
    முன்பின்
    பின்முன்
    முன்முன்
    பின்பின் – என்று எழுதிவிட்டு..
    முன்னென்ன பின்னென்ன
    எல்லாம் என்னுள் என்று
    எழுதினாலும் கைதட்டுவார்கள் போல்….
    சாவுக்கு நாலுபேர் கூடாத வாழ்வு வாழ்ந்தவன்
    பாரதி சாவில் கூட 12 பேர் தான் என்று
    தன்னை பாரதியாய் நினைப்பவர் இன்று அதிகம்…
    இறந்தவன் பிறப்பானா
    தெரியாது
    ஆனால்
    பிறந்தவன் இறப்பான்
    தெரியும்
    ஆனால், என்று இறப்பான் என்று தெரியாது
    … இப்படியும் எழுதினால்
    கவிதையென்று சொல்ல
    ஒரு கூட்டமே இருக்கு…
    என்ன செய்ய…
    கொள்வார் கூட்டம் இருக்கிறதோ
    இல்லையோ
    கடை விரிப்பார் கூட்டம்
    அதிகமிங்கு…
    :)

  7. யாரோ
    “புனைபெயரில்”லாத‌
    ஒரு குரங்காட்டிச் சித்தன்
    கவிதை இது.
    நன்றாக இருக்கிறது
    குரங்கும் அவனே
    சித்தனும் அவனே

    கவிஞர் அவர்களே.
    பாராட்டுகள்.

  8. அன்புள்ள பவளசங்கரி அவர்களே

    எழுத்து என்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கக்கூடும்?அறிவு “எழுச்சியின்” வடிவமே அது.உங்கள் சிந்தனையில் அது இயற்கையாகவே இருப்பதால் இப்படி பெருந்தன்மையோடு எழுதியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *