மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
களிப்புப் பூங்காவில் உலாவி
வழி தவறிப் போன ஒரு
குழம்பிய பயணி நீ !
அங்கே போகிறாய் ! அந்தோ
எங்குதான் போகி றாயோ ?
உன்னை நீயே சுருட்டித்
தூக்கிச் செல்கிறாய் பித்துடன்
கண் மூடிய வண்ணம்
ஆவேசம் மிகுந்து !
அந்தோ அப்படி நீ
வேண்டி விரும்பும் அந்த
வேற்று மனிதன் யார் ?
எங்கே உன்னிதயம் அலைந்து
திரிவது ?
எங்கே நீ விலகிச் செல்லும்
இந்தப் பூமி ?
மாயை யான படகிலே நீ
பயணம் செய்கிறாய்
மந்திரத் தளத்துக்கு
உந்திச் செல்வது போல் !
எந்த மந்திர புரிக்கு நீ விரைவாய்
ஏறிச் செல்கிறாய் ?
+++++++++++++++++++
பாட்டு : 362 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++
தாகூரின் கீதப் பாமாலை – 11
பொறுமையாய்க் காத்திருக்கும் காதலி
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என் ஆத்மா விழைவது போல்
அப்படியே உருவெடுத்து
இருப்பவள் நீ !
அப்படித் தானே நீ
இருக்கிறாய் !
உன்னைத் தவிர இந்த
உலகத்தில் வேறு
ஒருத்தி இல்லை எனக்கு !
இல்லவே இல்லை
வேறு !
ஆனந்தம் இவ்வுறவில் நீ
காண வில்லை என்றால்
போய்விடு ! நீ
பூரிப்பைத் தேடிப் போ !
என் உள்ளத்தின் உள்ளே
நான் உன்னைக்
கண்டு கொண்டேன் !
வேறு எப்பெண்ணையும் நான்
விரும்ப வில்லை !
பிரிந்துள்ள போது
என்னுடல் உன்னோடு
இணைய
ஏக்கம் உண்டாகும் எனக்கு !
உன் உள்ளத்தில் தான்
என் இல்லத்தை அமைப்பேன் !
நீண்ட பகல் முழுதும்
நீளும் இரவு பூராவும்
ஈராறு மாதங்களும்
ஆண்டுகளாய் நீடித்து
நீ வேறு ஒருவனை
நேசித்தால் —
மீண்டும் நீ மீளாது போனால்
வேண்டுவதை அடைந்து கொள்
என் வேதனை
எவ்விதம் காயப் படுத்தும்
என்பது
ஒவ்வாத நினைப்பு !
+++++++++++++++++++
பாட்டு : 142 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated
from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 24, 2012
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!