முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்

author
50
0 minutes, 18 seconds Read
This entry is part 28 of 29 in the series 20 மே 2012

ஜோம்பி
இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம் எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட ஆய்வுகள் பரவலாகவே இருக்கின்றன.

ஆனால், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதை பற்றி ஒரு ஆய்வு நடந்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன் இல்லை?

ஜோசப் ஸ்மித், மார்ட்டின் லூதர், ஆண்டன் லெவி போல முகம்மதுவுக்கும் அவர் இருந்தார் என்பதற்கான தடயங்கள் ஏராளம் என்பதால் முகம்மது வரலாற்றில் இருந்த ஒரு நபரா இல்லையா என்பதை பற்றி ஆராயவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். முகம்மதுவின் போதனைகள் ஒழுக்கரீதியில் சரியானவையா, இல்லையா, அவை பிரயோசனமானவையா அல்லவா என்பதை விட, அவர் நிச்சயமாக இருந்திருக்கிறார் என்றுதான் கடுமையாக இஸ்லாமை எதிர்ப்பவர்களும் கருதுகிறார்கள். இல்லையா?

உண்மையில் இல்லை. குறைந்தது, ராபர்ட் ஸ்பென்ஸர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம், முகம்மது என்பவர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்கிறது.

தடயம் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் ஆகாது என்பது உண்மை என்றாலும், தனது புத்தகமான “Did Muhammad Exist? ” என்ற புத்தகத்தில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறார் என்பதற்கு எந்த விதமான தடயமும் இல்லை என்பதை மிகவும் தேர்ச்சியுடனும் ஆதாரப்பூர்வமாகவும் நம்பத்தகுந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஸ்பென்ஸரே சொல்வது போல, “முகம்மது என்ற நபர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிப்பது முடியாத காரியம்” என்பதை கூறும் ஸ்பென்ஸர், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முகம்மதை பற்றிய இஸ்லாமிய கதையாடலை அப்படியே உண்மை என்று ஏற்றுகொள்வது தேவையற்றது. (நமக்கு இருக்கும் ஒரு சில ஆதாரங்களை வைத்து, முகம்மதின் தோற்றத்துக்கான வேறு கதையாடல்கள் இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்திச் செல்கின்றன என்பதையும் பார்ப்போம்)

ஆதாரங்கள்.

இந்த பெரிய விஷயத்தை அணுகுவதற்கு ஸ்பென்ஸர் ஐந்து முக்கிய செய்திகளை எடுத்துகொள்கிறார்.

1. 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய ஆவணங்கள்.
2. அரபியர்கள்/முஸ்லீம்களே எழுதிய 7 /8 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள்.
3. குரான்
4. ஹதீஸ், இஸ்லாமிய விரிவுரைகள், போதனைகள் 8 /9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை
5. முகம்மதுவின் வாழ்க்கைக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து, இபின் இஷாக் எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைவரலாறு . இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே பிற வாழ்க்கைவரலாறுகள் எழுதப்பட்டன.

200 பக்கங்களில், ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து, முகம்மதுவின் வரலாற்று ஆதாரத்துக்கு தடயமே இல்லை என்று நிரூபிக்கிறார்.

இஸ்லாமை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்னைப் போன்றவருக்கு, முதலாவது பிரிவே மிகவும்முக்கியமானதாக இருக்கும். அதுவே சுதந்திரமான ஒரு தடயமாகவும் இருக்கும். பெரும்பாலான மதங்களது புனித நூல்கள் போலவே, இஸ்லாமின் புனிதநூல்களும், தன்னைத்தானே சரி என்றும், தன்னையே தனக்கான ஆதாரமாகவும் அளிக்கும் என்றுமே நான் அனுமானம் செய்தேன்( அது தவறு என்று பின்னால் அறிந்தேன். அது பின்னர்)

ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?

ஒன்றுமே இல்லை.

எட்டாம் நூற்றாண்டு வரை முகம்மதுவை பற்றியோ, ஏன் இஸ்லாமை பற்றியோ கூட எந்த ஒரு செய்தியும் ஆவணௌம் முஸ்லீமல்லாதவர்கள் எழுதவில்லை. அரபியாவின் மத்தியில் இருக்கும் ஒரு பழங்கால தூரத்திய அனாமதேயமாக இருக்கும் ஒரு மதத்தை பற்றி மற்றவர்கள் எழுத என்ன தேவை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. முகம்மதுவின் இறப்பு நடந்ததாக சொல்லப்படும் 632இலிருந்து துவங்கி அரபியர்கள் தங்களது பாலைவனத்தை விட்டு கிளம்பி முழுமையான மத்தியக்கிழக்கு முழுவதும் ஆக்கிரமித்து கைப்பற்றினார்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் வட ஆப்பிரிக்கா, பெர்ஷியா என்று ஆக்கிரமித்தார்கள். பல கலாச்சாரங்களையும், சமூகங்களையும் எதிர்கொண்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குமே இஸ்லாம் என்றோ முகம்மது என்றோ எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஸ்பென்ஸர் அத்தியாயம் இரண்டில் குறிக்கிறார்.

”அரபிய ஆக்கிரமிப்புகள் வரலாற்று ரீதியான உண்மைகள். ஆனால், அரபிய ஆக்கிரமிப்பாளர்கள் அரபியாவை விட்டு கிளம்பி ஆக்கிரமிக்க இறங்கியது முகம்மதுவாலும், குரானாலும் என்பது சந்தேகத்துக்கு இடமானது.”

முகம்மதின் வாழ்க்கைக்கும், அவரது இறப்புக்கு பின்னர் உடனடியாகவும் மத்திய கிழக்கை தங்களது புதிய மதமான இஸ்லாமின் கீழ் கொண்டுவந்த பின்னரான இஸ்லாமின் ஆரம்ப கால வருடங்களை பற்றிய இஸ்லாமிய கதையாடல்களின் மீது சந்தேகம் கொள்ள நிறைய புதிரான செய்திகள் இருக்கின்றன. உதாரணமாக, ஆண்டியாக்கில் Antioch ஒரு கிறிஸ்துவருக்கும் ஒரு அரபி தளபதிக்கும் நடந்த மத விவாதம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஸ்பென்ஸர் குறிக்கிறார்.

“அதில் அந்த ஆவணத்தை எழுதியவர் அரபியர்களை முஸ்லீம்கள் என்று குறிக்கவில்லை. ஹாகரியர்கள் என்று குறிக்கிறார். “Hagarians” (mhaggraye) அதாவது ஆப்ரஹாமின் வைப்பு மனைவியும், இஸ்மாயீலின் தாயாருமான ஹாகரது மக்கள் என்ற பெயரில் குறிக்கிறார். அரபிய தளபதி இஸ்லாமிய போதனைக்கு ஏற்ப இயேசு கிறிஸ்துவின் கடவுள்தன்மையை மறுக்கிறார். ஆனால், ஒரு இடத்திலும் குரானை பற்றியோ, இஸ்லாம் பற்றியோ, முகம்மது பற்றியோ பேசவேஇல்லை. இரு புறத்திலும் பேசவில்லை.”

ஒரு ”கிறிஸ்துவ”ரிடம் பைபிள், கிறிஸ்துவம், இயேசு கிறிஸ்து பற்றியே ஒரு போதும் பேசாமல் மதத்தை பற்றி விவாதம் பண்ணுவதை பற்றி கற்பனை செய்து பாருங்கள். அவர் “கிறிஸ்துவர்” தானா என்று உங்களுக்கு ஐயம் வரத்தானே செய்யும்?

புத்தகத்தின் மைய கருத்துக்கு தாவினால், அதனைத்தான் ஸ்பென்ஸர் குறிப்பிடுகிறார். அதாவது ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள். அது அங்கிருந்த யூத மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை விடப்பட்டிருக்கிறது.

அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது. இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்.

இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு. இதுவும் குரான் வசனமும் குரான் வசனமற்ற கவிதையும் ஒன்றோடு ஒன்று கலந்து எழுதப்பட்டுள்ளது. குரான் வசனத்தையும் முழு குரானிலிருந்து அங்கங்கிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல இருக்கிறது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட குரானிலிருந்து எடுக்கப்பட்ட வசனமே அல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது dome of rock கல்வெட்டு வசனங்களும், குரானும் அவற்றுக்கு முந்தைய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறார்கள். வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இரண்டுமே என்று கருதுகிறார்கள்.

முகம்மதுவை பற்றிய அவர் கால செய்தி என்று சொல்லக்கூடிய மூன்றாவது பிரிவு குரான் புத்தகம். அதுவும் முஸ்லீமல்லாதவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஸ்பென்ஸர் எழுதுகிறார்.

“முகம்மது என்ற பெயர் குரானில் நான்கே முறைகள்தான் வருகிறது. அதில் மூன்று இடங்களில் அவரது பெயராக இல்லாமல், “புகழுக்குரியவர்” அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பொருளிலேயே வருகிறது. இதற்கு மாறாக, மோஸஸின் பெயர் 136 முறை குறிப்பிடப்படுகிறது. ஆப்ரஹாமின் பெயர் 79 முறை குறிப்பிடப்படுகிறது. எகிப்து பரோ 74 தடவை குறிப்பிடப்படுகிறார். அல்லாஹ்வின் தூதர் என்ற rasul Allah முறையில் வெவ்வேறு வடிவங்களில் 300 தடவை குறிப்பிடப்படுகிறது. இறைதூதர் nabi என்ற வகையில் 43 முறை குறிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் 7 ஆம் நூற்றாண்டில் அரபியாவில் தோன்றிய முகம்மது நபியை பற்றிய குறிப்பா? இருக்கலாம். குரானை படிப்பவர்கள் அப்படித்தான் அதனை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே இருந்தாலும், அதன் மூலம் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளையோ சூழ்நிலைகளையோ அவரது வாழ்க்கை பற்றியோ அறிய முடியாது.

குரான் முழுவதும், அவர் தன்னைத்தானே அல்லாஹ்வின் தூதர் என்று பல முறை கூறிக்கொள்வதையும், அவரை கீழ்ப்படிய வேண்டும் என்று மக்களிடம் கூறுவதையும் தவிர, அவரை பற்றி ஒன்றுமே இல்லை. மூன்று நான்கு முறை அவரது பெயரை குறிப்பிட்டாலும், அவரது வாழ்க்கை பற்றி ஒன்றுமே இல்லை.

குரான் முகம்மதை பெயர் குறித்து கூறுவதை வைத்து அவ்வளவுதான் கூறலாம். அல்லாஹ்வின் தூதர் என்ற குறிப்புகளில், தூதரின் பெயர் குறிப்பிடவில்லை. அது மட்டுமல்ல, அந்த தூதரின் செயல்களும் குறிப்பிடவில்லை. ஆகவே குரானிலிருந்து முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒன்றுமே அறிந்துகொள்ள முடியாது. குரானின் வசனத்தை மட்டுமே வைத்து பார்த்தால், இந்த “அல்லாஹ்வின் இறைதூதர்” என்பது முகம்மதைத்தான் குறிக்கிறது என்றும் கூறவியலாது”

என்கிறார்.

குரானில் முகம்மதுவை பற்றி எந்த விவரணையும் இல்லை. குரானின் ஆரம்பகால வரலாற்றை மிகவும் ஆழமாக ஸ்பென்ஸர் ஆராய்கிறார். இஸ்லாமிய நூல்களிலேயே, முகம்மதின் மறைவுக்கு வெகுகாலத்துக்கு பின்னரே குரான் தொகுக்கப்பட்டது என்று ஒத்துகொள்கின்றன. அதுவும் நினைவிலிருந்து பலர் சொன்னதை வைத்து அவற்றை சேர்த்துத்தான் தொகுத்தவர்கள் குரானை உருவாக்கினார்கள் என்று கூறுகிறது. அதற்கு மேலும், அவர்கள் எந்த வசனத்தை சேர்த்தார்கள் எந்த வசனத்தை விலக்கினார்கள் என்பதற்கு அரசியல், ராணுவ காரணங்கள் காரணமாக வெவ்வேறு தொகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட போட்டி குரான்களும் இருந்தன என்று இந்த நூல்களே கூறுகின்றன.

இதேதான் ஹதீஸ் தொகுப்புக்கும். குரான் ஏறத்தாழ முகம்மதுவை பற்றி மவுனமாக இருந்தாலும், ஹதீஸ் (என்னும் மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட இரண்டாம் கட்ட குரான் விளக்க உரை, முகம்மதுவை பற்றி மிகவும் விலாவாரியாக விளக்குகிறது. அதுவும் மிகவும் நுண்ணிய விளக்கங்களோடு இருக்கிறது. இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எனக்கு பெரும்பாலான இந்த விவரணைகள், வெறும் கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றுகின்றன. ஸ்பென்ஸர் இந்த ஹதீஸ்கள் எவ்வாறு உருவாயின என்று விளக்கும்போது, என்னுடைய அவநம்பிக்கை உறுதிப்படுகிறது. பல நூற்றாண்டுகள் கழித்து, போட்டி பிரிவுகளால் தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் இந்த வாய்மொழிச்செய்திகள் யாரிடமிருந்து யார் சொல்லி வந்தது என்ற வழிமுறை வேறு சொல்கின்றன. இதனை இஸ்னாத்(isnad) என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு இஸ்நாதும் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதுதான் என்று நிரூபிக்க எழுதுகிறார்கள். அந்த இஸ்நாத் ஆதாரப்பூர்வமானதுதான் அல்லது சரியானதுதான் என்று யார் நிரூபிப்பார்கள்?

வெவ்வேறு போட்டி பிரிவினர் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்வதற்காக ஹதீஸ்களை உருவாக்கிகொண்டதால், இந்த ஹதீஸ்கள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.

8ஆம் நூற்றாண்டில் இறுதியில் அப்பாஸித் வமிச ஆட்சியாளர்கள் இந்த ஹதீஸ்களை தொகுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் முயன்றார்கள். இவ்வாறு தொகுத்ததால், முகம்மது எதனை அங்கீகரித்தார், எதனை அங்கீகரிக்கவில்லை, எதனை ஆணையிட்டார், எதனை தடுத்தார் என்பதற்கான செய்தி தொகுப்பை ஏராளமானதாக ஆக்கினார்கள்… இன்னும் அடுத்த நூற்றாண்டில் (9ஆம் நூற்றாண்டில்)தான் ஆறு முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்படுகின்றன. அதாவது அனைத்துமே முகம்மது இறந்து, சுமார் 200 வருடங்களுக்கு பிறகு.Ignaz Goldziher இக்னாஸ் கோல்ஜிஹெர் என்ற ஹதீஸ் வரலாற்றாராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார், “கட்டுக்கடங்காமல் உருவாகும் போலி ஹதீஸ்களை தடுக்க நேர்மையானவர்கள் செய்த முயற்சிதான் இலக்கியத்தின் வரலாற்றிலேயே மிகவும் வினோதமான நிகழ்வு. நல்ல நோக்கத்துடன், போலி ஹதீஸ்களை எதிர்கொள்ள போலி ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன. புதிய ஹதீஸ்களை உருவாக்கி அதன் மூலம் போலி ஹதீஸ்களை உருவாக்குபவர்களை கடுமையான வார்த்தைகளில் இஸ்லாமிய இறைதூதரே திட்டும் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன”

ஒரு ஹதீஸ் போலியாக உருவாக்க முடியுமென்றால், அதன் வாய்வழி தொடர்ச்சியும் (யார் மூலமாக யார் கேட்டு யாரிடம் சொன்னது என்ற வழி) போலியாக உருவாக்க முடியும். எந்த அளவுக்கு ஹதீஸின் உள்ளுறை (matn)போலியாக உருவாக்கப்பட்டதோ அதே வேகத்தில் அதே துல்லியமாக வழிமுறை (isnad) தொடர்ச்சியும் போலியாக உருவாக்கப்பட்டது.”

ஆமாம் போலி ஹதீஸ்கள்.

அதே போல இபின் இஷாக் அவர்களால் எழுதப்பட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாறு நம்பகமானது என்று எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுகொள்பவர் மட்டுமே ஏற்றுகொள்ள முடியும். அல்லது எதனையாவது ஆதாரப்பூர்வமாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று தவிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே இபின் இஷாக்கை ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறாக எடுத்துகொள்ள முடியும். ஏனெனில் அந்த காலத்தின் வரலாறு பற்றிய ஆதாரப்பூர்வமான பதிப்பு வேறெந்த இடத்திலும் இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்

முகம்மது இபின் இஷாக் இபின் யாஸர் என்ற முழு பெயர் கொண்ட இபின் இஷாக் ஒரு தீவிர மத நம்பிக்கை கொண்ட முஸ்லீம். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறே இன்றைக்கு “வரலாற்றின் முழு ஒளியும் வீசும் முகம்மதின் வாழ்க்கை வரலாறு” என்று அறியப்படுகிறது. இருப்பினும் இபின் இஷாக் முகம்மதோடு சமகாலத்தில் வாழ்ந்தவர் அல்ல. முகம்மது மறைந்ததாக சொல்லப்படும் வருடம் 632. இபின் இஷாக் மறைந்த வருடம் 773. ஆகவே அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு முகம்மதின் மறைவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு பின்னரே வருகிறது. மேலும் இபின் இஷாக் எழுதிய ஸிரத் ரசூல் அல்லா என்ற புத்தகம் அதன் ஒரிஜினல் படிவத்தில் கிடைக்கப்படவில்லை. அதுவும் அவருக்கு பின்னர் வந்த மற்றொரு இஸ்லாமிய அறிஞரான இபின் ஹிஷாம் என்பவரால் சுருக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. இபின் ஹிஷாம் மறைந்த வருடம் 834..

இறைவன் அளிக்கும் அன்பை பற்றி போதித்த அமைதியான போதகர் அல்ல இபின் இஷாக் காட்டும் முகம்மது. இபின் இஷாக்கின் முகம்மது, தனது எதிரிகளை தீர்த்துக்கட்ட ஆளை அனுப்பிய ஒரு போர்ப்படை தளபதி. ஏராளமான போர்களை நடத்திய போர்ப்படை தளபதி. இபின் இஷாக் வரையும் முகம்மதின் சித்திரம் பாராட்டத்தகுந்ததல்ல என்று வரலாற்றாய்வாளர் டேவிட் மார்கோலியோத் கூறுகிறார்…

..இபின் ஹிஷாம் தான் எழுதிய சுருக்கப்பட்ட வரலாறு சுத்திகரிக்கப்பட்டது என்று கூறுகிறார். மூலத்தில் ஏராளமான அவமானப்பட தகுந்த விஷயங்கள் இருக்கின்றன. அவை பலரை மனகஷ்டப்படுத்தும் என்று கூறுகிறார். , “things which it is disgraceful to discuss; matters which would distress certain people….”

அதாவது, எந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து பின்னர் வந்த வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டனவோ அந்த வாழ்க்கை வரலாறே முகம்மதின் இறப்புக்கு நூறு வருடங்களுக்குபின்னரே எழுதப்பட்டது. பத்திரிக்கைகளோ, ஆவணங்களோ இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது. நடந்திருக்கக்கூடிய விஷயங்களை நேருக்கு நேராக பார்த்தவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்டபிறகு இந்த வரலாறு எழுதப்படுகிறது. அந்த வரலாறும் போய், அந்த வரலாற்றை படித்த ஒருவர் அதிலிருந்து சுருக்கி, அமங்கலமான விஷயங்களை எல்லாம் நீக்கி எழுதிய வரலாறுதான் முகம்மதின் ஆதாரப்பூர்வமான வரலாறாக சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றாசிரியரே அமங்கலமான பல விஷயங்களை விட்டுவிட்டதாக சொல்கிறார்.

புத்தகம்

முகம்மது இருந்தாரா? இறைவனால் அருளப்படுகிறதாக சொல்லப்படுகிற புத்தகம், அதன் ஆரம்பத்திலிருந்து மாறாததாக சொல்லப்படுகிற புத்தகத்துக்கான ஆதாரத்தை இஸ்லாம் தர முடியவில்லை என்று ஸ்பென்ஸர் குறிக்கிறார்.

முகம்மது இருந்திருக்கக்கூடிய, அல்லது இல்லாமல் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை ஆராயும் இந்த புத்தகம், பல இலக்கிய தத்துவ தடயங்களை இருபுறமும் அளிக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் “அகழ்வாராய்ச்சி தடயங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்கலாம். துரதிர்ஷ்ட வசமாக ஸ்பென்ஸர் இந்த வாதத்தை எதிர்கொள்ளவில்லை. அதற்கும் முக்கிய காரணம், தடயங்கள் ஏதும் இல்லாமையே. சவுதி அரசாங்கமும்( ஜெருசலத்தில் உள்ள டெம்பிள் மவுண்ட் மசூதியை நிர்வகிக்கும் வக்ப் நிர்வாகமும்) அகழ்வாராய்வுக்கு உரிய தடயங்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன. இஸ்லாமின் ஆரம்ப காலத்துக்கு தடயங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் வேண்டுமென்றே அழிக்கின்றன. முகம்மதுக்கும் அவரது ஆரம்ப கால தோழர்களுக்கும் தொடர்புடையதாக கருதப்பட்ட பல இடங்களை சவுதி அரசாங்கம் அழித்து அவற்றின் மீது பல கட்டிடங்களை எழுப்பியுள்ளது. ஆகவே இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றிய எந்த அகழ்வாராயச்சிக்கும் இன்று முயற்சி எடுக்க முடியாத சூழ்நிலை. மெக்காவின் வரலாற்றை வேண்டுமென்றே சவுதிகள் அழிப்பதற்கு காரணம், இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றி அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் அவை இஸ்லாமின் வரலாறாக சொல்லப்பட்டு வருவது பொய் என்று தெரியவரலாம் என்ற அச்சத்தால் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. இந்த விஷயம் இந்த புத்தகத்துக்கு முக்கிய விஷயம் இல்லை என்றாலும், இந்த புத்தகத்தின் வாதத்தை இன்னும் வலுவாக ஆக்கியிருக்கும்.

முகம்மது வரலாற்றில் இருந்தவரா? இந்த புத்தகம் பொதுமக்களுக்காக பொதுமக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஸ்பென்ஸர் தானாக எந்த ஆராய்ச்சியையும் செய்ததாக சொல்லிக்கொள்ளவில்லை. அவர் செய்திருப்பதெல்லாம், அதுவும் மிகவும் திறமையான முறையில், கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒன்று சேர்த்து கொடுத்திருப்பதுதான். Günter Lüling, David Margoliouth, Patricia Crone ஆகியோர் எழுதிய ஆராய்ச்சிகள் இருக்கின்றன. மேலும் Christoph Luxenberg என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர், குரானை அரபி மொழி மூலமாக அன்றி, அந்த காலத்தில் புழக்கத்திலிருந்த சிரியாக் மொழி வாசிப்பில் அதனை படித்து அதற்கு இருக்கக்கூடிய வேறு பொருட்களை கொண்டுவந்தவர். அவ்வாறு ஆராய்ச்சி செய்வது பழமையில் ஊறிய இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்ற அச்சத்தால் புனைபெயரில் புத்தகம் பதிப்பித்தவர். இவை அனைத்து நூல்களையும் ஒருங்கிணைத்து, இந்த ஆய்வு முடிவுகளை இணைத்து, இந்த தடயங்கள் மூலம், தற்போதைக்கு இருக்கும் கொள்கை(அதாவது முகம்மது வரலாற்றில் இருந்தவர் என்ற கொள்கை)க்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் அது உண்மையாக இருக்க மிகக்குறைந்த சாத்தியங்களே உள்ளன என்று கொண்டுவருகிறார். இதுவரை அறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இஸ்லாம் என்ற மதம் மெல்ல மெல்ல முந்தைய யூத கிறிஸ்துவ நம்பிக்கைகள் அடிப்படை மேல் உருவாக்கப்பட்ட மதம். இந்த புதிய மதத்துக்கு அதிகாரப்பூர்வ முத்திரை கொடுக்க அதன் மீது ஒரு இறைதூதர் இருந்ததார் இவை அவர் கூறியவை என்று பின்னால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை.
இந்த புத்தகத்தின் நூறு பக்கங்களுக்கு பிறகு ஸ்பென்ஸர் இந்த தேற்றத்தை தெளிவாக கூறுகிறார்.

”முகம்மது ஒரு அரபிய தூதுவர், மெக்காவில் பிறந்தார், அரபி மொழி பேசி அல்லாஹ்வின் செய்தியை அரபுகளுக்கும் பிறகு உலகத்தாருக்கும் கொண்டுவந்தார்.” இந்த வரியின் முஸ்லீமல்லாதவர்களும் பொதுவான உண்மையாக எடுத்துகொள்கிறார்கள். இருப்பினும் நுணுக்கி பார்த்தால், ஒவ்வொரு விஷயமும் கரைகின்றன. அந்த காலத்திய வரலாற்று ஆவணங்கள் எதிலுமே முகம்மது என்ற ஒரு அரபிய தூதுவர் மெக்கா அருகாமையில் இருந்தார் என்பதற்கோ அவர் உலகத்துக்கான எதாவது செய்தியை சொன்னார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. ஒருவேளை முகம்மது என்ற ஒருவர் இருந்திருந்தாலும், மெக்காவில் இருந்தார் என்பதற்கோ அவர் இஸ்லாமில் கூறப்படும் விஷயங்களை போதித்தார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. அவர் அப்படியே இருந்திருந்தாலும், அவரது வாழ்க்கை வரலாறும், அவர் கூறியதாக சொல்லப்படும் புனித புத்தகமும் அவரது மறைவு என்று கூறப்படும் வருடத்துக்கு பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தே உருவாக்கப்படுகின்றன.

புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஸ்பென்ஸர் மூல கருத்தை விட்டுவிட்டு குரான் அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்கு போகிறார். ஆனால், இவ்வறு செல்வதற்கான காரணம் வெகுவிரைவிலேயே தெரியவருகிறது. குரானின் பல முக்கியமான பகுதிகள் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட யூத, கிறிஸ்துவ நூல்களிலிருந்து ஏறத்தாழ காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறார். இஸ்லாமின் வேர்கள் அதற்கு முன்னால் இருந்த மத புத்தகங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை. (அல்லாஹ்விடமிருந்து தனித்துவமாகவும் முழுமையாகவும் பெறப்பட்டதாக கூறப்படும் நம்பிக்கைக்கு மாற்றாக). அப்படியானால், “இறைதூதர்” என்ற கதையும் கடன் வாங்கப்பட்ட ஒரு கதையா?

ஏற்கெனவே இருக்கும் ஒன்றை பொய்யென நிரூபிப்பதன் பிரச்னையே அது மிகவும் உழைப்பை உறிஞ்சக்கூடியது, ஏராளமான நுண்ணிய தகவல்களை தேடுவது என்பதுதான். எந்த மாதிரியான பொதுமைப்படுத்தல்களாலும், அதன் இருப்பை மிக எளிதில் உதாசீனம் செய்துவிடவியலாது. ஒரு நூறு பெட்டிகள் உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றில் ஒரு வாதாங்கொட்டை எதுவும் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமானால், ஒவ்வொரு பெட்டியையும் திறந்து அவற்றில் வாதாங்கொட்டை இல்லை என்றுதான் நிரூபிக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க, ஸ்பென்ஸர் எத்தனை வரலாற்று ஆவணங்களை திறக்க முடியுமோ அத்தனை ஆவணங்களையும் ஆராய்கிறார். இவை அனைத்தையும் புத்தகத்தில் எழுதுவது ஒரு பொதுமக்கள் படிக்கக்கூடிய புத்தகத்துக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இருந்தாலும், ஒவ்வொரு வரலாற்று தடயத்தையும் மேலும் ஆராய விரும்பும் வாசகர்களுக்கு உதவியாக மிகவும் நீண்ட ஆவண இணைப்பை வழங்கியிருக்கிறார்.

தடயங்களில் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துகொண்டு ஸ்பென்ஸர் தனது புத்தகத்தை எழுதியிருக்கிறாரா? அதாவது முகம்மது என்பவரைப் பற்றிய ஆரம்ப கால இஸ்லாமின் வரலாற்று ஆதாரங்களில் அவர் இருந்தாரா என்பதற்கு சந்தேகம் வரக்கூடியவற்றை மட்டுமே எடுத்துகொண்டு, அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை உதாசீனம் செய்திருக்கிறாரா? நிபுணன் அல்லாத என்னைப் போன்ற ஒருவரால் அதனை நியாயமாக அணுக முடியாது. ஆனால், இந்த புத்தகத்தில், இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆரம்ப காலத்திலிருந்து, அதற்கு பின் ஒரு நூற்றாண்டுகளான அனைத்து ஆவணங்களையும், உதவக்கூடிய உதவாத அனைத்து வரலாற்று ஆவணங்களையும் அவர் முழுமையாக கொடுத்திருக்கிறார். விவாதமும், வன்முறையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துறையில் இந்த புத்தகம், ஒரு அச்சமற்ற, நியாயமான பல்கலைக்கழக ஆய்வாளரின் பார்வையிலிருந்து இஸ்லாமை அணுகுகிறது. இந்த புத்தகத்துக்குப் பின்னால், இந்த ஆவணங்களை எதிர்கொள்ளாமல், இஸ்லாமின் தோற்றத்தை பற்றி தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் அங்கீகாரத்தை கேள்வி கேட்காமல், அப்படியே ஒப்புகொண்டு போகும் எந்த ஒரு ஆய்வாளரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும்படி வைக்கிறது.

ஐரோப்பிய, அமெரிக்க மனதுக்கு, இருண்ட காலங்கள் Dark Ages எனக்கூறப்படும் காலம் ஏறத்தாழ முழுமையாக இருண்டதாக இருக்கிறது. கிபி 600களில் நடந்த எதனையும் அறுதியுடன் கூறுவது மிகவும் மெத்த படித்த அறிஞர்களுக்கு கூட கடினமானதாக இருக்கிறது. இந்த இருண்டகாலங்களை பற்றிய இலக்கிய, அகழ்வாராய்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால், இந்த கால கட்டத்தில்தான் முகம்மதின் கதையும் இஸ்லாமின் தோற்றமும் நடக்கிறது. ஆகவே, இந்த காலத்தில் தடயங்கள் கிடைக்காமல் இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வாதிட இடமிருக்கிறது.

 

இருப்பினும், இஸ்லாமை பற்றிய வரலாற்றை ஆராயப்புகுந்தால், ஒரு சிக்கலான நிலையையே எட்ட வேண்டியதிருக்கிறது. முகம்மது இருந்ததாக கூறப்படும் காலத்தை நெருங்க நெருங்க, ஆதாரங்களும் மூலங்களும் ஆவணங்களும் அரிதாகி விடுகிறது. முகம்மதின் இறப்பு முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகுதான் நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னால், செல்வது கடினமாகிவிடுகிறது. திரை இறங்கிவிடுகிறது. அந்த திரையை கிழித்து அதன் ஆரம்பத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, நம்மால் முகம்மது ஒரு உண்மையான மனிதரா? அல்லது உருவாக்கப்பட்ட பிரமையா, அல்லது வசதியாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதையா என்று சொல்லமுடிவதில்லை.

இன்றைய நவீன அரசியல் சூழ்நிலையில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? Did Muhammad Exist? என்ற தலைப்பே ஒரு சவால்தான். இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு, இந்த மாதிரி தலைப்பை வைத்ததற்காகவே, எதிர்ப்பு, வன்முறை, ஒதுக்கல், பத்வாக்கள் ஆகியவை வரக்கூடும் என்பதால், உண்மையில், “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாமா?” என்றுதான் இந்த புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தலைப்பு கேள்விக்கு விடை இன்றைய அரசியலில் “கூடாது” என்றுதான் இருக்கும். ஆகவே, “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்விக்கும் விடை “இல்லை” என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம் இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும், இந்த புத்தக ஆசிரியர், முகம்மதின் வரலாற்று இருப்பை சந்தேகப்பட்டிருப்பதாலும், அவரது முடிவை எளிதில் பொய்யென நிரூபிக்க முடிந்திருந்தால், இந்த கேள்வியும் உடனே உதாசீனம் செய்யப்பட்டு மறக்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புத்தகம் விவாதத்துக்குரியதாக இருப்பதாலும், இது சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இந்த புத்தகத்தின் வாதங்களில் சத்திருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

இயேசு வரலாற்றில் இருந்தாரா என்பதை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது அது விவாதத்த்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போது அது விவாதத்துக்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன் பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை. கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது. அது தன் செய்தி தரும் வலிமையால் நிற்கிறது. அதன் வரலாற்று தகவல்களால் நிற்கவில்லை. அதே போல இஸ்லாமும் இவற்றை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
Did Muhammad Exist?
by Robert Spencer
ISI Books, April 2012
$27.95

Series Navigation2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்
author

Similar Posts

50 Comments

 1. Avatar
  பா. ரெங்கதுரை says:

  மிக அருமையான, அவசியமான புத்தக அறிமுகம். தமிழ்ஹிந்து போன்ற தளங்கள்கூட இத்தகைய அறிமுகக் கட்டுரையை வெளியிடத் தயங்கும் சூழலில் திண்ணை இதை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

  இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தமிழகப் பதிப்பகங்கள் உடனடியாகக் குறைந்த விலையில் வெளியிட வேண்டும். பெரியாரிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 2. Avatar
  punai peyaril says:

  நிச்சயமாக இது ஒரு நல்ல அறிமுகம். நன்றி.

 3. Avatar
  smitha says:

  This book will definitley be banned in India. Many politicians wil create a hue & cry in parliament, some imams will issue fatwas against the author & ‘secularists” in this forum like piriyan & kavya will support that.

 4. Avatar
  Truth says:

  This is a bold measure by the author and Thinnai. In fact, if the Islamists have so much faith in their religion and Mohd. then let them explain and counter-debate the theories put forth by this author. Opposing something and issuing fatwas just because someone does not believe in you or your theories is the height of barbaric culture.

  //விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன் பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை. கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது.//

  This is blatant false. The Church keeps quiet because the voices that doubt the existence of Christ is very loud and they cannot answer the logical questions posted by these researchers. But earlier, those who questioned the existence and the points put forth in Bible were threatened, killed, burnt alive and what not!

 5. Avatar
  suvanappiriyan says:

  //ஆகவே, “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்விக்கும் விடை “இல்லை” என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம் இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும்//

  எந்த ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காத இஸலாத்தின் ஆரம்ப அரிச்சுவடி கூட தெரியாதவர் எழுதிய ஒரு பிதற்றலுக்கு ஆஹா.. ஓஹோ என்ற பின்னூட்டம் வேறு. கட்டுரையை படித்து விட்டு என்னையறியாமல் சிரித்து விட்டேன். அந்த அளவு கோமாளித்தனமான வாதங்கள்.

  முகமது நபி வாழ்ந்த வீடு மற்றும் அவர் பயன்படுத்திய வாள், செருப்பு முதலானவை கூட இன்றும் சவுதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இவரது வருகையை அறிந்து மெக்கா சென்று நபியை பார்த்து இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாள் கதையும் பொய்யா? நமது நாட்டிலேயே முகமது நபி காலத்தில் கட்டப்பட்ட சேரமான் மசூதி கொடுங்கலூரில் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கிறதே!

  முகமது நபி பல நாட்டு மன்னர்களுக்கும் எழுதிய கடிதங்கள் ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது. முகமது நபியைப் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அடங்கிய தொகுப்பு பல பாகங்களாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முகமது நபிக்கு இறக்கும் தருவாயில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பது வரை நபித் தோழர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளார்கள்.

  முகமது நபி வாழ்ந்நததற்கான முக்கிய ஆதாரமே எங்களிடம் உள்ள குரான்தான். தோரா பைபிளில் வரும் சில வரலாறுகளின் பெயர்கள் ஒத்து வந்தாலும் சம்பவங்கள் முற்றிலும் மாறுபடுகிறது. குர்ஆன் பைபிளையும் தோராவையும் தழுவி எழுதப்பட வில்லை என்பதற்கு பல சான்றுகளை நானே பதிவாக இட்டுரிக்கிறேன். ஜாகிர்நாயக், பி.ஜெய்னுல்லாபுதீன் போன்ற அறிஞர்கள் எல்லாம் இதை விளக்கி பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

  http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_05.html
  இந்த பதிவில் குர்ஆன் எவ்வாறு தொகுக்கப்பட்டது என்பதை விவரமாக பார்க்கலாம்.

  http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_03.html

  குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கான விவாதம் பற்றிய ஒரு தொகுப்பு

  http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post_16.html

  பைiபிலிலும் தோராவிலும் இல்லாத புதிய செய்திகள் குர்ஆனில் எப்படி வந்தது என்பதை விவரிக்கும் மற்றுமொரு பதிவு.

  http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_25.html

  ஒரு இறைத் தூதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் முகமது நபி வருகையை ஏசுவே தனது சீடர்களிடத்தில் சொன்ன விதத்தையும் விவரிக்கும் ஒரு பதிவு.

  http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_23.html

  முகமது நபிக்கு முன்பு அரபுகளுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர் சாலிஹ் வாழ்ந்த கிராமம் இன்றும் சவுதி அரசால் பாதுகாக்கப்பட்டு வருவதை விவரிக்கும் பதிவு.

  இந்த கட்டுரையில் வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பெரிய அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை. நானே பதில் அளித்து விட முடியும். அந்த அளவு தெளிவாக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

  இந்த கட்டுரையை இந்து மக்களே நம்பப் போவதில்லை எனும் போது முஸ்லிம்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? :-)

  இங்கு வைக்கப்படும் பின்னூட்டங்களைப் பொறுத்து அடுத்து எனது பதில்கள் அமையும்.

  (திண்ணை ஆசிரியர் குழு எடிட் செய்யாமல் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும் பதிலளிக்கிறேன்.)

 6. Avatar
  suvanappiriyan says:

  //ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?
  ஒன்றுமே இல்லை.//

  கட்டுரையாளரின் அடுத்த பொய். மாற்றார் முகமது நபியை எவ்வாறு நடத்தினர் என்பதற்கு சில உதாரணங்கள்.

  மனிதாபிமானம் உடையவர்
  அமானிதம் பேணுபவர்
  வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
  எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
  விருந்தினரை உபசரிப்பவர்
  உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
  ”நம்பிக்கையாளர்”

  இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

  ஒரு சம்பவம்:
  முகமது நபி அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ”இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். ”ஆம் நம்புவோம்” என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் – நபித்துவ வாழ்வுக்கு முன் – நபியவர்களை ”உண்மையாளர்” என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

  பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

  முகமது நபி அவர்களை ”உண்மையாளர்” என்று கூறிய அதே மக்கள் பின்னர் ”பொய்யர்” என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
  விடலாம்.
  ஏனெனில்,ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.
  முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.

  (ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

  http://www.badriseshadri.in/2008/10/581-644.html

  முகமது நபியின் எதிரியாக இருந்த உமர் எவ்வாறு இஸ்லாத்தை தழுவி பின்னர் சிறந்த ஜனாதிபதியாக வாழ்ந்தார் என்பதை விவரிக்கும் பத்ரியின் பதிவு

 7. Avatar
  Muhammad Ashik says:

  தங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!

  மத எதிர் வெறி மனிதனின் சிந்தையை மழுங்கடிக்கும் என்று தெரியும். இப்படி, சிந்தையையே இல்லாமல் செய்து விடும் என்று இப்போதுதான் உணர்கிறேன்..!

  எழுதிவைத்துக்கொள்ளுங்கள்…
  ‘ராபர்ட் ஸ்பென்சர் என்று ஒரு மனிதர் இருக்கவில்லை’ என்று எவனாவது நூறு வருஷம் கழித்து எழுதி வைக்க போகிறான்..!
  ஹா…ஹா…ஹா…ஹா……………….

  இடுகை செமை காமடியா கீது….! அதைவிட மேலே உள்ள பின்னூட்டங்கள் படிச்சா… சிரிப்பை அடக்கவே முடியலை…!

  // பெரியாரிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.//——-இதுக்கு மேலே இவங்க ரெண்டு போரையும் வேற எது மாதிரியும் கேவலப்படுத்தவே முடியாது..! ஹா…ஹா..ஹா…..

  1. Avatar
   paandiyan says:

   இந்த சிரிப்பை தாண்டி உங்களால் ஏதும் ஆதாரமாக பதில் அளிக்க முடியவில்லை . அது என்ன ரூம் நம்பர என்று கீடவர்கள் தான் அவர்கள் எல்லாரும் ஒரு காலத்தில்

 8. Avatar
  தங்கமணி says:

  சுவனப்பிரியன் தனது இணையப்பக்கங்களை இங்கே மேற்கோள் காட்டுவதற்கு முன்னால், இந்த குறிப்பிட்ட புத்தகத்தை படித்து அதன் மீது விவாதம் செய்வது சரியாக இருக்கும்.
  ராபர்ட் ஸ்பென்ஸர் அஞ்சம் சவுத்ரியோடு விவாதம் செய்கிறார்.
  http://www.youtube.com/watch?v=Que1xs81Wts

  அவருடைய உரை
  http://www.jihadwatch.org/2012/05/robert-spencer-in-los-angeles-speaks-on-did-muhammad-exist.html

  கேட்டுவிட்டு பிறகு புத்தகத்தை படித்துவிட்டு பதிலெழுதுங்கள்

 9. Avatar
  sarang says:

  சூ பீ

  //தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாள் கதையும் பொய்யா? நமது நாட்டிலேயே முகமது நபி காலத்தில் கட்டப்பட்ட சேரமான் மசூதி கொடுங்கலூரில் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கிறதே!//

  இதை பற்றி ஏற்கனவே தமிழ் ஹிந்துவில் எழுதி நாறினது உங்களுக்கு போதாதா.

  நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் சேரநாட்டு ராஜாவாக இருந்தது குலசேகர ஆழ்வாராக இருந்தார். நீங்கள் சொல்லும் சேரமான் பெருமாள் இருந்த காலம் பதினோராம் நூற்றாண்டு. ஏன் இப்படி சுத்தி சுத்தி தக்கியா விளையாட்டு.

  இது ஒன்னே போதும் நீங்கள் உளறல் திலகம் என்பதற்கு.

  1. Avatar
   Kavya says:

   குலசேகர ஆழ்வாரின் காலமெது சாரங்க? ஆதாரத்தோடு சொல்லவும்

 10. Avatar
  தங்கமணி says:

  அன்புள்ள சுவனப்பிரியன்
  //கட்டுரையாளரின் அடுத்த பொய். மாற்றார் முகமது நபியை எவ்வாறு நடத்தினர் என்பதற்கு சில உதாரணங்கள்.//

  அப்போது என்ன நடந்தது என்று 240 வருடங்களுக்கு பின்னர் எழுதப்பட்ட ஹதீஸில் என்ன இருக்கிறது என்று கேட்கவில்லை. அவர் உயிரோடு இருந்ததாக சொல்லப்படும்போதே எழுதபப்ட்டது என்ன என்பதுதான் கேள்வி.

  முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்.
  ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்து.. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார்.

  810இல் முகம்மதுவுடன் கூட இருந்தவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. அந்த காலத்தில் சராசரி வாழ்நாளே 40 வருடங்களாகத்தான் இருந்திருக்கும். ஆகவே எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றிருக்கும் என்று கணக்கு போட்டுகொள்ளுங்கள்.

  அதுதான் இங்கே பேசப்படுகிறது. இப்படி 230 வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்று அவர் இவரிடம் சொன்னார். இவர் அவரிடம் சொன்னார். அவர் என்னிடம் சொன்னார் என்பவை எல்லாம் இட்டுக்கட்டப்பட்டவையாகக்த்தான் இருக்க முடியும். இவற்றை ஆதாரப்பூர்வமாக கருதுபவர்களை என்ன சொல்வது?

  இந்த காலத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியே யார் எழுதுகிறார்கள், யாருக்கு எழுதுகிறார்கள், எப்படி எழுதுகிறார்கள் என்பதை வைத்து ஏகத்துக்கு மாறுபடுகிறது. அப்படி இருக்கும்போது, பத்திரிக்கைகளோ, ட்விட்டர்களோ, ஆவணங்களோ இல்லாமல் இருக்கும் ஒரு கால கட்டத்தில் எப்படிப்பட்ட செய்திகள் எதற்காக சேகரிக்கப்பட்டிருக்கும், அல்லது சேகரிக்கப்பட்டதாக கதை விடப்பட்டிருக்கும் என்பது சிந்திக்க கஷ்டமானதா?

 11. Avatar
  sarang says:

  காவ்யா

  ஆழ்வார்கள் காலத்தை ஆதாரத்தோடு சொல்வது என்பது ஒவ்வொன்றும் ஒரு கட்டுரை ஆகிவிடும். அவர் சங்கரர் காலத்துக்கு சற்று முந்தியவர். சரி சங்கரர் காளைமீது என்றே சர்ச்சை உள்ளது சங்கரர் காலம் பலரால் ஒத்துக் கொல்லப்படுவது கொள்ளப்படுவது என்பது எட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். சங்கரர் ஆழ்வாரின் இறுதிக்காலங்களில் வாழ்ந்தார் என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆக முஹம்மதின் காலத்தில் ஆழ்வாரோ அவரது தந்தை திடவரதரோ தான் ஆண்டிருக்க வேண்டும். ஆழ்வார் சங்கரர் சம காலம் பற்றி நீங்கள் தேடினால் கூட நெட்டில் விஷயங்கள் கிடைக்கலாம்

  சூ பீ விடுவது உடான்சு அதற்க்கு இஸ்லாமிய பரி பாஷையில் தக்கியா என்று பெயர் (இஸ்லாத்தை பரப்புவதற்காக செய்யும் நபியால் ஒத்துக் கொள்ளப்பட்ட கேவலாமான காரியம்)

 12. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்.
  ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்து.. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார்.
  810இல் முகம்மதுவுடன் கூட இருந்தவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. அந்த காலத்தில் சராசரி வாழ்நாளே 40 வருடங்களாகத்தான் இருந்திருக்கும். ஆகவே எத்தனை தலைமுறைகள் கடந்து சென்றிருக்கும் என்று கணக்கு போட்டுகொள்ளுங்கள்.
  அதுதான் இங்கே பேசப்படுகிறது.//

  மீண்டும் தவறான புரிதல். இமாம் புகாரி ஹதீதுகளை எழுதவில்லை. ஏற்கெனவே எழுதப்பட்டு தோல்களிலும், எலும்புகளிலும், மரப் பட்டைகளிலும் பல ஹதீதுகள் பாதுகாக்கப்பட்டிருந்தன. பல ஹதீதுகள் வாய் வழியாகவும் கேட்கப்பட்டு பதியப்பட்டன. யாரோ சொன்னதை எல்லாம் நபி மொழியாக பதிய மாட்டார்கள். அதற்கான இலக்கணமும் உண்டு. அவற்றையும் பார்ப்போம்.

  “ஹதீஸ் கலை” என்பது ஆழ்ந்த அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய செய்திகளல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படைச்செய்தி இதுதான்.
  1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
  2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
  3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
  4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
  5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
  6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
  7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல நினைவாற்றலுடன் இருந்து பிற்காலத்தில் நினைவாற்றலில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
  8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
  9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
  10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
  11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனமாகும்.
  12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
  13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
  14. தமது கருத்தை நியாயப்படுத்துவதற்காக அல்லது நம்ப வைப்பதற்காக ஆதாரமில்லாது கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமாகும்.
  இப்படி ஏராளமான வழிகளில்-மொழிகளில் -பலகீனமாக வரும் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
  சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36).
  என்ற இறைக் கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எனவே ஹதீஸ்கலை மேதைகள் தரம் பிரித்து நம்பத்தகுந்தவை-என்று அடையாளம் காட்டப்பட்ட ஹதீஸ்களையே நாம் ஏற்க வேண்டும்.
  (குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸான், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது)

  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களின் வரலாறுகள் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு முன்னேற்ப்பாட்டோடு நபி மொழிகள் தொகுக்கப்பட்டிருக்க எங்கிருந்து உங்களுக்கு குழப்பம் வருகிறது?

 13. Avatar
  suvanappiriyan says:

  சகோ காவ்யா!

  //குலசேகர ஆழ்வாரின் காலமெது சாரங்க? ஆதாரத்தோடு சொல்லவும்//-Kavya

  //ஆக முஹம்மதின் காலத்தில் ஆழ்வாரோ அவரது தந்தை திடவரதரோ தான் ஆண்டிருக்க வேண்டும். ஆழ்வார் சங்கரர் சம காலம் பற்றி நீங்கள் தேடினால் கூட நெட்டில் விஷயங்கள் கிடைக்கலாம்//- சாரங்

  ஆக காவ்யா கேட்ட கேள்விக்கு நம்பகமான பதிலை சாரங்கால் தர முடியவில்லை. :-) நாம் கொடுக்கும் செய்தி இந்திய அரசால் தொல் பொருள் ஆய்வினரால் தொகுக்கப்பட்ட செய்தி.

  சேரமான் பெருமாளின் நெருங்கிய உறவினரான திரு ராஜா வலைய தம்புரான் சேரமான் பெருமாளைப் பற்றியும் அவர் முகமது நபியை சந்தித்ததைப் பற்றியும் கொடுத்த பேட்டியை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  The 87-year-old Raja Valiyathampuram of Kodungallur in Central Kerala is a descendant of King Cheraman Perumal, the first Indian to embrace Islam in the early 7th century. Talking to him is like talking with history. In the following interview taken by A U Asif (right in the picture) in Ernakulam………,.

  http://www.iosworld.org/interview_cheramul.htm
  ஆங்கில பத்திரிக்கையான ஹிந்து தரும் செய்தியை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
  http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm

  காணொளியாக திரு சலீம் தரும் செய்தியையும் இந்த சுட்டியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

  http://www.youtube.com/watch?v=BU2duvVicuI

  அவர் ஓமானில் எந்த இடத்தில் அடக்கப்பட்டுள்ளார் என்பதை விக்கிபீடியா அழகாக தொகுத்து தருகிறது. கீழே அதன் சுட்டியில் சென்று விபரங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

  இத்தனை ஆதாரங்களையும் தூரமாக்கி விட்டு சாரங் சொல்லும் செய்தியை நாம் நம்ப வேண்டுமாம். :-)

  கல்கியில் தொடர்கதையாக வந்த கண்ணதாசன் எழுதிய ‘சேரமான் காதலி’ நாவலை படித்ததுண்டா சாரங். இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ரரியில் தேடிப் பார்த்து கண்ணதாசன் சொல்லும் சில செய்திகளையும் தெரிந்து கொள்ளவும். :-)

 14. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு!//

  கட்டுரையாளர் எந்த அளவு விபரமற்று குர்ஆனை விமரிசிக்க வந்து விட்டார் என்பதை இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru

  //இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு.//

  முகமது நபி காலத்திலேயே மரப்பட்டைகளில் எலும்புகளில் தோல்களில் எழுதப்பட்டு முகமது நபி காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு பிறகு உஸ்மான் காலத்தில் அந்த பிரதியும் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த பல தோழர்களை அழைத்து ஓத வைத்து சரிபார்க்கப்படுகிறது. பலரிடம் 5 அத்தியாயம் சிலரிடம் எட்டு அத்தியாயம் என்று இருந்ததை எல்லாம் ஒன்றாக்கி மனனம் செய்தவர்களை வைத்து சரி பார்த்து அது பல பிரதிகள் எடுக்கப்படுகிறது. அதில் இரண்டு ரஷ்யாவிலும் துருக்கியிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை எல்லாம் தெரிந்து கொண்டே மறைத்து பொய்களை இந்த கட்டுரையாளர் புகுத்தியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் பலரால் வைக்கப்பட்டு அது பொய் என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது. புதிதாக படிப்பவர்களுக்காகவே இதனை இங்கு பதிக்கிறேன்.

 15. Avatar
  தங்கமணி says:

  நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விஷயங்களை பார்ப்போம்.
  http://www.iosworld.org/interview_cheramul.htm
  இது 87 வயதானவர் சொன்ன பழங்கதை. இதில் அவர் நம்பிக்கையைத்தான் பேசுகிறாரே தவிர வரலாற்றை அல்ல.

  சரி அடுத்ததை பார்ப்போம்
  http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm
  The mosque is believed to have been established in 629 AD by Malik Bin Dinar, a contemporary of Cheraman Perumal.

  Belief goes that Perumal had gone to Mecca, met Prophet Mohammed and embraced Islam. Perumal fell ill as he returned from Mecca

  அதாவது இதுவும் நம்பிக்கைதானே தவிர வரலாறு அல்ல.

  சலீம் தரும் காணொளி வேறென்ன சொல்லும். ஆகவே அதுவும் வேஸ்ட்.
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
  விக்கிபீடியா என்ன சொல்கிறது?

  ”சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார்.”

  எட்டாம் நூற்றாண்டு.. அதாவது கிபி 800இலிருந்து 900 வரை எட்டாம் நூற்றாண்டு.

  ”ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். ”
  எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்?

  சுவனப்பிரியரால் எல்லாம் முடியும் என்று தெரிகிறது!

  இதுவரை நீங்கள் கொடுத்த ஆதாரத்திலேயே மிகச்சிறந்தது கண்ணதாசன் எழுதிய சேரமான்காதலிதான். அசைக்க முடியாத ஆதாரம். ஹதீஸ்கள் குரான் போலவே!

 16. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //இது 87 வயதானவர் சொன்ன பழங்கதை. இதில் அவர் நம்பிக்கையைத்தான் பேசுகிறாரே தவிர வரலாற்றை அல்ல//

  . 87 வயதானவர் சொல்வதை ஒதுக்க வேண்டும் என்று ஏதும் சட்டம் உள்ளதா? அதிலும் சேரமான் பெருமாளின் வழி வந்தவரே இந்த வளைய தம்புரான். இந்து மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சிறந்த இந்துவாக இன்றும் வாழ்ந்து வருபவர். இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

  அடுத்து வரலாறு பதியப்படுவதே அதிகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு பிறகுதான். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகள் அதிகமாக வழியாக வழியாக முன்னோர்கள் சொல்லி வந்தவையே! கல் வெட்டுகள் மூலம் நாம் வரலாறுகளை அறிந்து கொள்வது மிகச் சொற்பமே. இது எல்லா வரலாறுகளுக்கும் பொருந்தும். திருவள்ளுவரைப் பற்றிய உண்மையான வரலாறே இன்று வரை நமக்கு கிட்டவில்லை. சிலர் அவரை சமணர் என்றும், சிலர் பிராமணர் என்றும், சிலர் பவுத்தர் என்றும் சிலர் அவரை திராவிடர் என்றும் இஷ்டத்துக்கு அழைத்துக் கொள்கிறார்கள். திருவல்லிகேணியில் பிறந்ததாகவும் நம்புகிறோம். நம்பகமான கல்வெட்டோ, ஓலைச்சுவடியோ கிடைக்காத போது வாய் வழிச் செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது. அரபு வரலாறுக்கும் இந்திய வரலாறுக்கும் இது பொருந்தும். உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பதாலேயே இந்த ஆதாரங்களை மறுக்க முடியாது.

  நீங்கள் ஒத்துக் கொள்ளாததாலேயே வரலாறும் மாறி விடாது. சேரமான் சகோதரர்கள் கட்டிய பல மசூதிகள் இன்றும் கேரளாவில் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

  //எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்?
  சுவனப்பிரியரால் எல்லாம் முடியும் என்று தெரிகிறது!//

  ராஜ ராஜ சோழனின் தங்கை குந்தவை இஸ்லாமிய மதத்துக்கு மாறியதை மறைக்க அவரது வரலாறையே திரிக்கவில்லையா? இவர் பேரில் பல கட்டுக் கதைகளை நம் முன்னோர்கள் விதவிதமாக புனையவில்லையா? நமது வரலாற்றை தொடர்ந்து படித்து வந்தால் பல அரசர்களது வரலாறு நூற்றாண்டுகள் வித்தியாசப்படுகிறது வரலாற்று ஆய்வாளர்களால். முறையான ஆய்வுகள் செய்யப்பட்டால் பல உண்மைகள் வெளி வரும். தற்போது ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

  //இதுவரை நீங்கள் கொடுத்த ஆதாரத்திலேயே மிகச்சிறந்தது கண்ணதாசன் எழுதிய சேரமான்காதலிதான். அசைக்க முடியாத ஆதாரம்.//

  கண்ணதாசனுக்கும் இந்த வரலாறு தெரிந்ததால்தான் தனது கதையின் முடிவில் சேரமான் பெருமாள் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டதை கோடிட்டுக் காட்டுவார். இதையும் நீங்கள் நம்பவில்லை என்பதால் உங்களை நான் வற்புறுத்தப் போவதில்லை. :-(
  .

 17. Avatar
  தங்கமணி says:

  திருதிரு சுவனப்பிரியன்,

  சேரமான் மானியம் அளித்திருப்பார். ஆகையால் சேரமான் மசூதி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். சேரமான் மசூதி என்பது சேரமான் இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்று பிற்காலத்தில் எழுதிகொண்டார்கள் என்றுதான் தெரிகிறது.

  இது போல, இந்த காலத்தில் இருந்தவர்கள் பலரையே அவர்களுக்கே தெரியாமல் இஸ்லாமுக்கு மதம் மாற்றியிருக்கிறீர்கள்.
  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக அடித்துவிட்டது.
  http://wikiislam.net/wiki/Neil_Armstrong_(Conversion_to_Islam)
  சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக அடித்துவிட்டது.
  http://wikiislam.net/wiki/Sunita_Williams_(Conversion_to_Islam)
  வில் ஸ்மித் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக அடித்துவிட்டது
  http://wikiislam.net/wiki/Will_Smith_(Conversion_to_Islam)
  ஜாக் குஸ்டோவ் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக அடித்துவிட்டது
  http://wikiislam.net/wiki/Jacques_Cousteau_(Conversion_to_Islam)

  இப்படியெல்லாம்தான் பொய் சொல்லி இஸ்லாத்தை பர்ர்ர்ரப்பணுமா?

  உயிரோட இருக்கிறவங்களையே அவங்களுக்கே தெரியாம மதம் மாற்றுறப்ப சேரமான் பெருமாளை மதம் மாத்துரதும் அடிச்சி விடுறதும் கஷ்டமா? தாத்தா சொல்கிறார், பேரன் சொல்கிறார் என்பதெல்லாம் ஹதீஸ் வழியில்தான் உண்மை என்று நிரூபணம் ஆகும். எங்க தாத்தா சுவனப்பிரியன் இந்துவாக ஆகிவிட்டார் என்று சொன்னார். அதுவும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அவர் ஏன் பொய் சொல்லப்போறார்?
  ஓலைச்சுவடிகளின் கார்பன் டேட்டிங், கல்வெட்டு, ஆகியவைதான் எல்லா பல்கலைக்கழகங்களிலும் நம்பத்தகுந்த ஆதாரம். வேண்டுமானால், சவுதி அரேபிய பல்கலைககழகத்தில் என் தாத்தா சொன்னார் என்று வரலாறு எழுதி பதிப்பித்துகொள்ளுங்கள்.

 18. Avatar
  சான்றோன் says:

  சுவனப்பிரியன் அவர்களே…..

  //ராஜ ராஜ சோழனின் தங்கை குந்தவை இஸ்லாமிய மதத்துக்கு மாறியதை மறைக்க அவரது வரலாறையே திரிக்கவில்லையா? //

  இதெல்லாம் போதாது……இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுங்க…..சும்மா அடிச்சு விடரதுன்னு ஆகிப்போச்சு…..அதை ஏன் ராஜராஜன் சகோதரியோடு நிறுத்திக்கனும்……..ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லோருமே முஸ்லீம்கள்தான் அப்படீன்னு அடிச்சுவிடவேண்டியதுதானே?

  ராஜராஜனுக்கு ஒரே சகோதரி குந்தவை தான் ….அவரும் ராஜராஜனின் தங்கை அல்ல………….மூத்த சகோதரி…..அக்காள்……

  அவரும் அவர் கணவர் வந்தியத்தேவரும் சிறந்த சிவ பக்தர்கள்……பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு அவர்கள் செய்த நிவந்தங்களுக்கு விரிவான கல்வெட்டு ஆதாரங்களை இன்றும் காணலாம்…..

  for your information…. மதம் மாறியவர் ராஜராஜன் சகோதரியல்ல……அவரது மகள் சந்திரமல்லி……..அவள் சிங்கள பவுத்த பிக்குகளின் சதியால் பவுத்த பிட்ஷுனியாக மாற்றப்பட்டார்……தன் தந்தையை பழி வாங்க, தான் பலியாடாக மாற்றப்பட்டதை தாமதமாக புரிந்து கொண்ட சந்திரமல்லி ,மீன்டும் தந்தையை வந்தடைந்து, இறுதிவரை தஞ்சையில் வாழ்ந்து மறைந்தார்……குறைந்த பட்ச சரித்திர அறிவையாவது வளர்த்துக்கொண்டு பின்பு கருத்து பதிவு செய்ய வாருங்கள்……

 19. Avatar
  smitha says:

  Thangamani,

  Suvanapiriyan & kavya will raise questions on hinduism, criticise them & ask for proof, but u shud not do thia with respect to islam.

  Bcos his faith is to be respected while for others, it must be questioned.

  Rules are different for different people.

 20. Avatar
  sarang says:

  சூ பீ

  நான் எங்கே எனக்கு தெரியாது என்று கூறினேன். ஆதாரம் சரியாக இருக்கிறது என்று தானே கூறினேன். நீங்கள் சொல்லும் சேரமான் பெருமான் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பதற்கு நிறைய அதாரம் இருக்கிறது. குலசெகர் ஆழ்வார் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. நான் மும்மீன் அல்ல சும்மா அடிச்சு விடுவதற்கு. பிறர் கருத்தையும் சந்தேகத்திற்கு இடமிருந்தால் அதையும் ஒத்துக் கொள்ளக் கூடிய மனப்பாங்கு எனக்கு இருக்கிறது. சங்கரர் காலம் நிச்சயமாக எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் என்று நிறுவ முடியும். குலசேகர ஆழ்வாரும் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி எட்டாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தார் என்று சொல்ல முடியும். இதெல்லாம் கல்வெட்டு ஆதாரங்கள், பிற புத்தகங்களின் ஆதாரங்கள், வைணவர்கள் அல்லாதர்வர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தும் எடுத்து காட்ட முடியும். நீங்கள் வைக்கும் ஆதாரம் எல்லாம் குரான் அதீஸ், அரபியர்கள் கூறியதாக ஹதீஸில் உள்ளவை. சுற்றி சுற்றி இதே தான். நான் சங்கரர் காலத்தை பற்றி எழுதியது அவரது தேதியில் சர்ச்சை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே. சர்ச்சை இருந்தால் அதை சீ சீ என்று அதை பார்த்து சிரிக்காமால் அதையும் ஏற்றுக் கொண்டு உண்மையை நிறுவ வேண்டும். இதை தமிழ் ஹிந்து தளத்தில் ஏற்கனவே நிருவியாகிவிட்டது, சங்கரரின் காலம் ஒரு பார்வை கட்டுரை பார்க்கவும்.

  குலசேகர ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றால் அவதறு தந்தை தான் அதற்க்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா. இது உங்கள் அறிவுக்கு நிச்சயம் புரியக்கூடிய விஷயமே. அதனால் நீங்கள் எப்படி சுத்தி சுத்தி தக்கியா செய்தாலும்,

  காவ்யா மும்மீன் அல்லா என்று எண்ணிய அவர் புரிந்துகொள்வார் என்று அவருக்கு எழுதிய பதில். உங்களுக்கேன்றால் உங்களுக்கு புரியும்படியே எழுதி இருப்பேன்.

  நான் சேரமான் பெருமாள மும்மீனாக மாறினார் என்பதை மறுக்கவில்லை அவரது காலம் பதினோராம் நூற்றாண்டு என்பதை தான் சொல்கிறேன். நீங்கள் காட்டிய சுட்டிகளில் ஏழாம் நூற்றாண்டு தான் என்று ஒரு சுட்டியிலும் இல்லை., ஏழாம் நூற்றாண்டு என்று நம்பப் படுகிறது என்றே சொல்கிறார்கள்.

  சேரமான் பெர்மால் அரேபியா வந்தார் நபியை சந்தித்தார் என்று அவரோ அவரது சம காலத்தவர்களோ அல்லது அரபு நாட்டிலிருந்து வந்த சுலைமான்
  இப்னு படூடாவோ, அப்துர் ரஜாக்கோ மற்றும் எவரும் சொல்லவில்லை எழுதி வைக்கவும் இல்லை. இதுவும் ஹதீஸ் போல பின்னால் சேர்க்கை. செக்கு ஜைனுதீன் அடித்து விட்டது. இதை நம்பியே Raja Valiyathampuram பேட்டி கொடுத்துள்ளார்.

  William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469

  இந்த புத்தகத்தில் ராஜாவே இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டியதாக சொல்வதாக ஒரு வெண்கல தகடு உள்ளதாக சொல்கிறார்.

  நீங்கள் சொல்லும் கால கட்டத்தில் நிச்சயமாக சேர நாட்டில் இஸ்லாம் இருந்திருக்க முடியாது, அது ஆழ்வார் காலம். ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு வரும் எந்த ஆழ்வாரோ நாயன் மார்களோ அதை பதிவு செய்யவில்லை. எந்த சைவ வைணவ ஆசார்யர்களும் பதிவு செய்யவில்லை. சைவம், சாணக்கியம், புத்தம், ஜைனம் போன்ற மதங்களை எதிர் கொள்ளும் ஆழ்வார்கள் இஸ்லாமை பற்றி ஒரு வரி கூற வில்லை.

  ஆகா நீங்கள் சொல்வது வெறும் தக்கியா. நீங்கள் விடும் சரடுக்கு எதிராகவே நிறைய ஆதாரங்கள் உள்ளன.

 21. Avatar
  Robert Kunasekaran says:

  The Truth about Mohammed என்கிற புஸ்தகம் எழுதினவர்தானே இந்த ஸ்பென்செர். அம்பது வயது தாண்டிய முகமது, ஆயிஷா என்கிற ஆறு வயது பெண்ணை கல்யாணம் செய்து, அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது முதலிரவு கொண்டாடினார் என்பதாக அபாண்டமாக எழுதினவர்தனே இந்த ஸ்பென்சர்.

  அப்போது முகமது இருந்தார். இப்போது இல்லையாமா? குழப்பமாக இருக்கிறதே….

  1. Avatar
   paandiyan says:

   அப்போ அது பொய் என்று இப்போ சொல்லுகிண்றீர்களா? அதை சொன்னத முஸ்லிம் தான ? அப்படி ஒரு கல்யாணம் நடந்ததா இல்லையா??

 22. Avatar
  Robert Kunasekaran says:

  ஆமாம். அதை ஒரு பொய் என்றுதான் சொல்லுவேன். முகமது அப்படி ஒரு குழந்தையை கலியாணம் செய்து சாந்தி கழித்தார் என்பதற்கு ஆதாரம் வேண்டாமா? வெறுமனே ஸ்பென்சர் சொன்னார் அல்லது வேறு யாரோ சொன்னார் என்பதற்காக அப்படியே அதை நம்பலாமா என்பதுதான் என் கேள்வி.

 23. Avatar
  suvanappiriyan says:

  சகோ ராபர்ட் குணசேகரன்!

  //ஆமாம். அதை ஒரு பொய் என்றுதான் சொல்லுவேன். முகமது அப்படி ஒரு குழந்தையை கலியாணம் செய்து சாந்தி கழித்தார் என்பதற்கு ஆதாரம் வேண்டாமா? வெறுமனே ஸ்பென்சர் சொன்னார் அல்லது வேறு யாரோ சொன்னார் என்பதற்காக அப்படியே அதை நம்பலாமா என்பதுதான் என் கேள்வி.//

  ஹா…ஹா… நம்ம திருதிரு தங்கமணியும், சாரங்கும், பாண்டியனும் இதற்கு என்ன பதில் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

 24. Avatar
  Kavya says:

  //குலசேகர ஆழ்வாரும் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி எட்டாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தார் என்று சொல்ல முடியும். இதெல்லாம் கல்வெட்டு ஆதாரங்கள், பிற புத்தகங்களின் ஆதாரங்கள், வைணவர்கள் அல்லாதர்வர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தும் எடுத்து காட்ட முடியும். . சுற்றி சுற்றி இதே தான். நான் சங்கரர் காலத்தை பற்றி எழுதியது அவரது தேதியில் சர்ச்சை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே. சர்ச்சை இருந்தால் அதை சீ சீ என்று அதை பார்த்து சிரிக்காமால் அதையும் ஏற்றுக் கொண்டு உண்மையை நிறுவ வேண்டும். இதை தமிழ் ஹிந்து தளத்தில் ஏற்கனவே நிருவியாகிவிட்டது, சங்கரரின் காலம் ஒரு பார்வை கட்டுரை பார்க்கவும். //

  சாரங்!

  தமிழ்ஹிந்து.காம் இணயதளம் ஆர் எஸ் எஸ்காரர்களால் நடாத்தப்படுவது. அங்கு போடும் கட்டுரைகளை படிப்பவர்கள் அவர்களே. அக்கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களும் அவர்களிடமிருந்துதான். அங்குதான் நீங்கள் பிணத்தை வீட்டில் வைத்து கிருத்துவர்கள் வழிபடுகிறார்கள் என்றெழுதினீர்கள். கிருத்துவத்தில் இசுலாமிலும் ஆன்மிகம் என்பதே கிடையாதென்று மலர்மன்னன் எழுதினார். தமிழ்ஹிந்து.காமுக்க அதுதான் வேண்டும். அவர்களின் கட்டுரைகள் கற்றறிந்தோர் சபையிலே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ‘ஆராய்ச்சிகள்’ என்ற முகாந்திரந்தை வைத்து முன்முடிபுகளோடு எழுதப்படுவதால் அக்கட்டுரைகளை எவரும் சீந்துவதில்லை. அவைகளில் உண்மைகள் இருப்பினும்கூட ஈசாப்பின் கதையில் வரும் ‘ஓநாய் வருகிறது’ என்று பலதடவை பொய் சொன்னச் சிறுவன் இறுதியில் உண்மையிலே ஓநாய் வந்தபோது பிறரைக்காப்பாற்ற அழைக்கும்போது ஒருவரும் நம்பவில்லை. அதைப்போல. எனவே திண்ணை வாசகரை அக்கட்டுரையைப்படிக்க அழைக்காதீர்கள்.

  இங்கேயே குலசேகரரின் காலத்தை நிறுவ என்ன ஆதாரங்கள்? ‘வைணவர் அல்லாதார்’ எவர் எழுதினார்? என்று சொல்லுங்கள். தனிக்கட்டுரையாகக்கூட‌ போடலாம். சங்கரர் காலமோ, ஆழ்வார்கள் காலமோ தெளிவாக எவருக்குமே தெரியாது. எல்லாம் கற்பனைகளே. அல்லது யூகங்களே. அதற்கு காரணம் வரலாற்றை எழுதிவைக்க வேண்டுமென்ற நினைப்பு இந்தியருக்குக் கிடையாது. மேலும், ஆழ்வார், சங்கரர் எல்லாம் மதத்தின் கீழ் வருபவர்கள். அவர்களைப்பற்றி எப்படியெல்லாம் எழுதினால் மக்களுக்குப்பக்தி பிறக்குமோ அப்படித்தான் அவர்கள் தொண்டர்கள் எழுதியிருப்பார்கள். எ.கா. வைணவர்கள் திருமழியிசையாழ்வார் மனிதப்பிண்டமாக ஒரு புதருக்குள் கிடந்தார். அப்பிண்டத்தை எடுத்து திருமாவளவன் என்ற தலித்து எடுத்து வளர்த்தான் என்கிறது உங்கள் குருபரப்மரா பிரபாவம். இந்துமத புனிதர்களைப்பற்றி எழுதிய எதையும் நம்மால் நம்ப முடியாது. எவனோ ஒருவன் ஆராய்ச்சியில் இறங்கி வேறொரு கருத்தைச்சொன்னால், அவன் ‘இந்துமதத்துரோகி’ எனவழைக்கப்படுவான். ராஜாஜி, ஆண்டாள் என்று ஒரு பெண் ஆழ்வாரே கிடையாது. எல்லாம் பெரியாழ்வார் பண்ணிய பாவனை என்றார். தொல்லியல் அறிஞர் நாகசாமி, ராமானுஜர் என்பவர் ஒரு கற்பனை. அப்படி ஒருவர் கிடையாது என்று ஒரு ஆராய்ச்சி எழுத அவர் வைணவர்களால் தாக்கப்பட்டார் சொற்களால்.

  ‘உண்மையை நிறுவ வேண்டும்’ என்பது எப்படி சாத்தியாமாகும் ? எனவே ‘அடிச்சுவிடுதல்’ இங்கேயும் அங்கேயும் இருக்க ஒருவரை மட்டும் காலரைப்பிடித்து இழுக்கலாமா?

 25. Avatar
  தங்கமணி says:

  குலசேகர வர்மன் பிற்காலத்திய சேர வமிசத்தை தோற்றுவித்தவர்.
  Sreedhara Menon.A,A Survey of Kerala History(1967),p.152. D.C.Books Kottayam
  பிற்காலத்திய சேர வமிச வரலாறு மிகவும் ஆதாரப்பூர்வமானது. இவை ஆதாரப்பூர்வமானவை. கல்வெட்டுகள், ஆவணங்கள் மூலமாக ஆராய்ந்து எழுதப்பட்டவை.வாய்வழிச்செய்திகள் மூலமாக அல்ல.

  காலம் மிகச்சரியாக 800 to 820 AD
  திருவாஞ்சிக்குளம் சிவன் கோவில் கல்வெட்டுகள் ஆதாரமாக இருக்கின்றன.

 26. Avatar
  தங்கமணி says:

  வேறொரு திசைக்கு இந்த உரையாடலை கடத்த மிகவும் கடினமாக முயலும் காவ்யாவுக்கும் சுவனப்பிரியனுக்கும் பாராட்டுகள்.

 27. Avatar
  சான்றோன் says:

  //அவர்களின் கட்டுரைகள் கற்றறிந்தோர் சபையிலே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.//

  இதனால் சகலவிதமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…..இதுவரையிலும் ,இனிமேலும் , நாட்டின் ஒரே ஒரு அறிவாளியான காவ்யா என்கிற ஜோ. அமலன் .ரேயன் பெர்னான்டோ அவர்களின் கருத்துக்கள் [ பிதற்றல்கள் ] மட்டுமே ” கற்றறிந்தோர் ”சபையில் ஏற்கப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது……..அவரின் கருத்துக்களை [பிதற்றல்களை ] ஏற்க மறுத்து ,சுய புத்தியுடன் விமர்சிப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று பிரகடனம் செய்யப்படுகிறது…….

 28. Avatar
  smitha says:

  வேறொரு திசைக்கு இந்த உரையாடலை கடத்த மிகவும் கடினமாக முயலும் காவ்யாவுக்கும் சுவனப்பிரியனுக்கும் பாராட்டுகள்.

  Thangamani,

  I am not surprised. If you are a regular reader of this website, even you will not be.

  That is their speciality. They do that regularly.

  Kavya will question hindus’ faith but defend muslims’ faith.

  He is a ‘secularist”.

  As for piriyan, ketkave vendaam.

  Kabya comments on tamilhindu.com. They write articles not based on hearsay. The references are also given.

  But he says it is not authentic.

  It is like “heads I win, tails you lose”.

  Both of them know that if they question islam, they are finished.

 29. Avatar
  sarang says:

  காவ்யா என்கிற ஜோ

  நாகசாமி எழுதின புத்தகத்தை தவறு என்று மறுத்து புத்தகம் வந்தாயிற்று அதையும் வாங்கிப் படிங்கள். அந்த புத்தகத்திற்கு இது வரை ஒரு மறுப்பு கூட வைக்கவில்லை நாகசாமி.

  ராமானுஜர் இருந்தார் என்பதற்கு வைணவர் அல்லாத பலர் எழுதிய புத்தகங்கள். அவரது பாஷ்யங்களை மேற்கோள் காட்டும் மாற்று மத புத்தகங்கள், கல் வெட்டு ஆதாரங்கள் எல்லாம் உண்டு. நாம ஒன்னும் அவரு வேட்டி, அவரு செருப்பு, அவரு வீடு எல்லாம் அருங்காட்சியகத்துல இன்னும் இருக்குன்னு அடிச்சு விடல.

  ஆழ்வார் கட்டையிலிருந்து பிறந்தார் என்று தமிழ் ஹிந்துவில் கட்டுரை எழுதினால் அதன் ஆசிரியர் குழு அது கட்டுக் கதை என்று தான் சொல்வார்கள். ஆண்டாளை முறையே பாடம் படித்த ஒருவர் (இறை அருள் வந்து டபக்குன்னு தேர்ச்சிபெற்றார் என்றால் நம்ப முடியாது என்று கூட எழுதி உள்ளனர்).
  இப்போ ஆழ்வார்கள் விஷயத்திற்கு வருவோம். குலசேகர ஆழ்வார் பற்றி சேக்கிழார் புராணத்தில் உள்ளது.

  ஆதி சங்கரர் காலத்தை நிர்ணயம் செய்ய ஏராளமான சான்றுகள் உள்ளன. அவரது சிஷ்யர்களின் பரம்பரை, மாற்று மதத்தவர் எழுதிய புத்தகங்கள். சங்கரர் எழுதிய பாஷ்யங்கள், அதில் அவர் கொடுக்கும் மேற்கோள்கள் இப்படி நிறைய இருக்கு.

  (மாற்று மதம் என்றால் இசுலாம் இல்லை, த்வைதம் புத்தம் போன்றவை :-) )

  //
  அங்குதான் நீங்கள் பிணத்தை வீட்டில் வைத்து கிருத்துவர்கள் வழிபடுகிறார்கள் என்றெழுதினீர்கள்
  //

  அப்போ ஏசுவ கிறிஸ்தவர்கள் கும்பிட்றது இல்லையா

  தமிழ் ஹிந்துவில் ஆராய்ச்சிகள் என்றால் அது எல்லாவித மேற்கோள்களுடன் தான் வரும். இந்த சங்கரர் கால ஆராச்சி கட்டுரையை படித்து பாருங்கள்.

  //அவர்களின் கட்டுரைகள் கற்றறிந்தோர் சபையிலே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.//

  இது எந்த சபைங்க, தாம்பரம் அட்வேன்ட் திருச்சவையா இல்லை மயிலை சி எஸ் ஐ திருச்சபையா ?

  1. Avatar
   Kavya says:

   நான் ஒரு கருத்தை அவர் எழுதியிருக்கிறார்; இவர் எழுதியிருக்கிறார் என்றால் நான் அவருக்கு ஜால்ரா; இவருக்கு ஜால்ரா என்ற பொருள கிடையாது. இராஜாஜி சொன்னது சரி; நாகசாமி சொன்னது சரி என்று நான் சொல்லவில்லை. அப்படிச்சொன்னார்கள் என்றது அப்படியும் மாறுபட்டக்கருத்துக்கள் வரும்போது, அவற்றை எழவிடாமல் தாக்குகிறார்கள் என்றே சொல்கிறேன். நாகசாமி சொன்னதை மறுத்துவிட்டோம். இராஜாஜி சொன்னதை ஆதாரத்தை வைத்துப்பொய்யாக்கினோம். உங்களிடம் ஆர் கேட்டது?

   அது கிடக்க. சேக்கிழார் புராணம் ஆரால் எப்போது எழுதப்பட்டது? முதலில் அதைத்தேடுங்கள். எழுதியவர் எந்த ஆதாரத்தை வைத்து எழுதினார் ? அதையும் தேடுங்கள்.

   தெரியாவிட்டால் நான் திண்ணையில் போட்ட ‘கொற்றங்குடி உமாபதி சிவாச்சாரியார்’ படிக்கவும். தமிழ்ச்சைவர்களில் பொழுதுபோக்கு என்ன தெரியுமா? தமிழ் வைணவம் ஒரு டுபாக்கூர் மதம் எனச் சொல்ல எதையாவது எழுதுவதுதான். என் இரண்டாவது கட்டுரை இன்னும் திண்ணைக்கனுப்ப்படவில்லை;. அப்போது தெரியும் இந்த சிவம் சைவத்தைத்தூக்க என்ன செய்தார் என்று. நினவிற்கொள்க: இதே திண்ணையில் உங்கள் தமிழ்ஹிந்து.காம் சகா களிமுகு கணப்தி சேக்கிழார் புராணம் ஒன்று இருப்பதைத் தெரியாமல் நான் பொய் சொல்கிறதாக எழுதியிருக்கிறார். அவருக்காகவே நான் போட்ட கட்டுரையது.

   அதுவும் கிடக்க. ‘கற்றறிந்தோர் சபை’ என்றால் என்ன சாரங்கன்? திண்ணை அப்படிச் சொல்ல முடியாது. பின்னர் எப்படிச்சொல்லலாம்? இது ஒரு பல்லரங்கம். இங்கு எந்தப்பொருள் பற்றி எவரும் எழுதலாம். ஒரு கல்லாதவனுக்குத்தெரியும் விசயங்கள் உங்களுக்குத்தெரியுமா? கல்லா விவசாயிக்குத்தான் எப்போது நாற்று நடவேண்டும்; எப்போது அதைப்பிடுங்கி நட வேண்டும் ? என்று தெரியும். உங்களுக்குத் தெரியுமா? அவ்விவசாயி சொல்ல நான் ஒரு கட்டுரையைப்போடுகிறேன். அதையும் திண்ணைப்போட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், ராகவன் சொன்னமாதிரி, குதிரைக்குத்தான் திண்ணை. கழுதைக்கில்லை போ போ என்பது போல ஆகி விடும்.

   கற்றறிந்தோர் சபையென்பது, இலக்கிய ஆராய்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி என்றால், பல்கலைக்கழக பண்டிதர்கள்,. விஞ்ஞானிகள், வரலாற்றிறிஞர்கள் குறிப்பிட்ட துறையில் வல்லுனர்கள் கூடி விவாதிக்கும் அரங்குகள், உலகாளவியதாகவும் இருக்கலாம். வரலாற்றறிஞர்கள் கூடம் சபையில் தமிழ்ஹிந்து காமில் சொன்னார்கள் என்று மேற்கோள் காட்டுவது உண்டா? ஆர் எஸ் எஸ் சார்புடை வரலாற்றரறிஞர்கள் கூடினால் மட்டுமே நடக்கும். முன்முடிபுகளோடுக்கூட பரவாயில்லை. உள்ளோக்கத்தோடு எழுதப்படுகிற கட்டுரைகள் குப்பைத்தொட்டிகளில்தான் போடப்படும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

   But I do agree that the said internet site has a liberal policy of allowing comments on their essays which sometimes are so unnerving i.e harshly controverting it. My comments often appeared there and they were very harsh.

 30. Avatar
  Sugumar says:

  @ Muhammad Ashik : Have you lived in Saudi? I lived both in Chennai and Saudi. How much difference in islamic practices in both places? I have not seen “dharga” or “panja” in Saudi. Where did you got this from? Do you know how a widow without issues and govt. support lives in Saudi? If, for argument’s sake, we accept Mohammed (peace be uponhim ) he would not have killed the present day immams or mullahs for these pathetic state. Ask your islamic friends from Saudi to confess in the name of Allah. Read anything without bias and be bold to argue if you have evidence to dis-approve. Kutharkkam vendame. Islamic people are the one to suffer out of this kutharkkam and not any other religious people. Please understand this. Peace be with you.

 31. Avatar
  mohamed thaseen m says:

  முதலில் பிறரிடம் தவறுகளை சுட்டிகாட்டுவதற்குமுன்
  நம்முடைய தவறுகளை திருதிகொள்ளவேண்டும் ……..
  “நீங்கள் பிற மதத்தை பின்பற்றுபவர்களை அவர்களுடைய மதத்திலிருக்கும்
  தவறுகளை சுட்டிகாட்டி அவர்களுடைய மனது புண்படும்படி நடந்துகொள்ளதீர்கள் “
  என்று எங்களுக்கு சொல்லி தந்ததே முஹம்து (ஸல்) அவர்கள்தான் .
  முடிந்தால் ராபர்ட் ஸ்பென்சர் மற்றும் அவருக்கு வசை பாடும் மற்றவர்களும்
  dr .வில்லியம் கேம்பல் dr .ஜாகிர் நாயக் இவர்களுடைய விவாதத்தை பாருங்கள் ……
  அபொழுது உங்களுக்கு தெரியும் ……………………..

 32. Avatar
  smitha says:

  Sarang,

  I told you. Kavya will always say that tamilhindu is an RSS site & that the articles are without basis. Also, he is adept at diverting the topic. Just see his post & you will know.

  He has defended the murder of a class teacher by a student in this same site. He calls himself a teacher. God save the students.

  If the islamists say that in the hazratbal mosque, there is a strand of hair that belongs to the prophet, we must agree. Kavya & his ilk will not dare question that.

  But if a hindu claims that Lord Rama was born in Ayodhya, kavya will ask for his birth certificate.

 33. Avatar
  தேவப்ரியா சாலமன் says:

  இக்கட்டுரை ஆரம்பம்-கிறிஸ்துவர்கள் ஏதோ உண்மையை அப்படியே ஏற்பதாக கூறுகிறது? உண்மை அப்படி இல்லை.
  சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற பைபிள் அறிவியலை மறுத்த கலிலேயோ தன் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று.
  புதிய ஏற்பாட்டை ஏற்ற பைபிளியல் ஆய்வாளர், இடைச்சருகல்கள் நீக்கி ஏசு உண்மையில் என்ன சொன்னார் என ஆய்வு முடிவுகள் வெளியிட பல உண்மைகள் வந்தது. சர்ச் அவர்களை மதப் பிரஷ்டம் செய்தது. ஏன் பைபிளை முதலில் மொழி பெயர்த்து வெளியிட்ட திண்டேலை உயிரோடு சிலுவையில் கொளித்தியது.

  சாக்கடல் சுருள்களை பல ஆண்டுகள் மறைத்துதான் வைத்துருந்தது. சர்ச்சின் கொடுமைகளை எதிர்த்து எழுந்த தியாசாபிகல் சொசைட்டி போன்றோரும், 25000 பிரிவு சர்ச்சுகளுள் போட்டியும் மேலுமாக அறிவியல் வளர்ச்சியும் சர்ச்சின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது. வரலாற்று ஏசு என்பவர் இருந்திருந்தாலும் சுவிசேஷங்கள் சொல்லும் கதைப்படியானவர் வாழவில்லை என்பதை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

  ஏன் சமீபத்தில் 2ம் நூற்றாண்டின் மாற்கு சுவிசேஷத்தின் ஏடுகள் கிடைத்துள்ளது-அதில் 43% மட்டுமே உள்ளதாம். 27000 பிரதிகள் உண்டு எனப் பெருமை பேசும் சர்ச்சுகள் அவற்றை ஏன் பிலிம் ஆக்கி வலையில் ஏற்ற தயங்குகிறார்கள்.
  http://newindian.activeboard.com/t36443520/jesus-is-myth/?page=1&sort=newestFirst

  இந்து மததின் 5000 வருடமாக பெற்றுள்ள ஆய்வு சுதந்திரமும், கிறிஸ்துவம் பெற்ற 300 வருடஆய்வு சுதந்திரமும் இன்னும் இஸ்லாம் பெறவில்லை, ஆனால் இன்றைய அறிவியல் இதை மிக வேகமாக செய்யும்.
  தேவப்ரியா சாலமன்

 34. Avatar
  Firthouse Rajakumaaren says:

  Firthouse Rajakumaaren
  முகமது நபி காலத்திலேயே மரப்பட்டைகளில் எலும்புகளில் தோல்களில் எழுதப்பட்டு முகமது நபி காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு பிறகு உஸ்மான் காலத்தில் அந்த பிரதியும் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த பல தோழர்களை அழைத்து ஓத வைத்து சரிபார்க்கப்படுகிறது. பலரிடம் 5 அத்தியாயம் சிலரிடம் எட்டு அத்தியாயம் என்று இருந்ததை எல்லாம் ஒன்றாக்கி மனனம் செய்தவர்களை வைத்து சரி பார்த்து அது பல பிரதிகள் எடுக்கப்படுகிறது. அதில் இரண்டு ரஷ்யாவிலும் துருக்கியிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை எல்லாம் தெரிந்து கொண்டே மறைத்து பொய்களை இந்த கட்டுரையாளர் புகுத்தியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் பலரால் வைக்கப்பட்டு அது பொய் என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.முகமது நபி வாழ்ந்த வீடு மற்றும் அவர் பயன்படுத்திய வாள், செருப்பு முதலானவை கூட இன்றும் சவுதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

  1. Avatar
   Sugumar says:

   Dear friend Can you tell me which museum is it? In Mecca and Madina where a non-muslim cannot go? Let us see on internet atleast with proof .

 35. Avatar
  தங்கமணி says:

  அன்புள்ள Firthouse Rajakumaaren

  இருக்கும் குரான் பிரதிகள் 800க்குப் பின் உருவாக்கப்பட்டவை என்று ஆய்வாளர்களே கூறுகிறார்கள். அவை நிச்சயம் முகம்மதுவின் மேற்பார்வையில் உருவாகியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, உத்மானின் பிரதியாகவும் இருக்கமுடியாது.
  இருப்பதிலேயே மிகப்பழையதாக அறியப்படும் பீட்டர்ஸ்பர்க் குரான் 775க்கு பிறகுதான் உருவாக்கப்பட்டது.
  As for the examples of carbon-dated manuscripts, the E20 manuscript housed in the St. Petersburg branch of the Institute of Oriental Studies was discussed in detail. This manuscript is palaeographically dated to around the final quarter of the 8th century CE. The carbon dating, depending upon the confidence levels, yields a variety of time periods. A 95.2% confidence level (2σ) yields 775–995 CE.

  ஆகவே இவை முகம்மது நபியின் மேற்பார்வையிலோ அல்லது உதமானின் மேற்பார்வையிலோ உருவாக்கப்பட்டவை என்று சொல்வது வெறும் கதை. அதாவது 800களில் உருவாக்கப்பட்ட ஹதீஸ் கதை.

 36. Avatar
  punai peyaril says:

  என்னைப் பொறுத்தவரை தத்துவங்களின் ஆதாரமாக கொள்ளப்பட வேண்டியது திருக்குறளும், மனு, பகவத் கீதையும் தான். இங்கிருந்து ஏற்றுமதியானதே பிற.. சிலர் கடவுள் இல்லை என்றார்கள்… சிலர் இருக்கு ஆனா இல்லை எனும் நிலை கொண்டார்கள்… நாம் தெளிவாக அஹம் பிரம்மாஸ்மி எனத் தெளிவுடன் உள்ளோம்… உண்மையுள்ளவன் விமர்சனத்தில் டென்ஷன் ஆக மாட்டான்…

 37. Avatar
  சீனு says:

  //இது போல, இந்த காலத்தில் இருந்தவர்கள் பலரையே அவர்களுக்கே தெரியாமல் இஸ்லாமுக்கு மதம் மாற்றியிருக்கிறீர்கள்.//

  ஹா ஹா…இப்பத்தான் படிச்சேன்…செம ரகளை.

  அப்புறம், எம்.ஜே. கன்வெர்ஷன் கூட போய் போல இருக்கு.

  http://wikiislam.net/wiki/Fake_Conversions

 38. Avatar
  arputharaj says:

  சுவனப் பிரியன் சுவனத்தில் எதை எதிர்பார்த்து இங்கே கமெண்ட்களை இடுகிறாரோ? முஹம்மது அவர்களைப் பற்றிய சமகால வரலாறு எதுவுமே இல்லை என்பது வரலாற்று உண்மை. அவர் ஒரு ஆட்சியாளராக இருந்தார் எனில், மற்ற நாட்டவர்கள் யாராவது ஒருவர் கூடவா அவரைப் பற்றி எழுதாமல் இருந்தார்கள்! அந்த அளவுக்கு அவரை வேண்டுமென்றே வரலாற்றில் இருந்து மறைக்க சதி செய்தது யார்?

 39. Avatar
  ஜோ. தமிழ்ச்செலவன் says:

  முஹம்மது என ஒருவர் இல்லை எனபதற்கு என்ன ஆதாரம் முன் வைக்கப் படுகிறதோ அதுபோல் அவர் வாழ்ந்தார் எனபதற்கு குரானும் ஹதீசும் ஆதாரமாக முன் வைக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் முழுவதுமே முஹம்மது மரித்தபிறகு பலரிடம் கேட்டு சேகரித்தத் தகவல். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் ஆய்வு செய்து முஹம்மது இல்லை எனச் சொல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முஹம்மது பெயரல் பொய்யான ஹதீஸ் உள்ளன என சொல்பவரும் பலர் உள்ளனர். ராமர் வாழ்க்கை ஒரு கற்பனை காவியம் என்றும், அது உண்மை வாழ்க்கை என்றும் சொல்பவர்கள் உண்டு. இயேசு ஒருவர் பிறந்ததற்கு ஆதாரம் இல்லை என சொல்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே பார்க்கப்பட வேண்டிய விசயம் ஒருவரைப் பற்றி பல செய்திகள் வலம் வருகிறது என்றால் அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதுதான் உண்மையானதாகும். இருப்பினும் மாறுபட்ட கருத்தியல் நூல்களை வரவேற்கிறேன்,

 40. Avatar
  P.M.Jeyaraman Iyer says:

  இதனால்தான் சனாதன தர்மத்தைச் சார்ந்த பாரதீயர்கள், எல்லாவற்றுக்கும் ஆதியான,/ மூலமான / மூலகாரணமான—–, ஆரம்பமோ – முடிவோ இல்லாத, — ஆதியந்தமில்லாத வேதோக்தமான, வேதபூர்வமான, பாரதீய சனாதன தர்மமே என்கிறார்கள், வேதத்தில் தெய்வங்களைப்பற்றி இழையோட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலம், எல்லாவற்றையும் கடந்து அதற்கப்பால் கடப்பதற்கு இனியொன்றுமில்லை என்ற நிலையில் உள்ள அந்த பெயரோ உருவமோ இல்லாத [ நாம-ரூபம் அற்ற ] [ அதன் ஸவரூபமே – பெயரே – ஒன்றுமில்லாதது – அது வெறும் ஒரு சூன்ய தத்துவப் பரவெளி ] பரம்பொருளான ப்ரஹ்ம/ப்ரம்ஹ தத்துவத்தைக் / குருதத்வத்தைக் கூறியுள்ளார்கள், பிற்காலங்களில் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும், சுயபாதுகாப்பிற்காகவும், டாம்பீக சுயப்பெருமைக்காகவும் இன்ன பல தீய கெட்ட சுயநல நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவைகளே இதர மதங்கள். ஆழ்ந்து ஆழமாக தீவிரமாக உள்புகுந்து ஆராய்ச்சி செய்தால் எல்லா இதர மதங்களும் / அவற்றின் கூற்றுக்களும் நமது மதத்தை ஒட்டியே கோட்பாடுக் கூற்றுக்களை – கூற்றுக் கோட்பாடுகளை ஒட்டியே / சார்ந்தே / தழுவப்பட்டே எழுதி உருவாக்கப்பட்டுள்ளன என்ற மஹத்தான உண்மை தெரியவரும். வியாபார-இதர-கெட்ட-குள்ளநரித்தந்திர-நிலப்பெருக்க / நிலவிருத்தி செய்ய வந்த மூர்க்கத்தனமான, ஆங்கிலேய – ஐரோப்பிய- பாரசீய – முஹம்மதீய மக்களின் துஷ்ப்ரசார – துர்மார்க போதனைகளே – போதிப்புகளே – பலவந்தத் திணிப்புகளே – மத மாற்றங்களே அனைத்திற்கும் காரணம் – விஷவிதை வினை / விளை/வினைக்கப்பட்டு அது அழிக்கமுடியாத அசுர விஷ விருக்ஷமாய் இன்று நம் பாரத தேசத்தைப் பீடித்திருக்கும் பெரு வியாதியாய் உள்ளது. இவைகள் நம் புண்ணிய சமாதான தேசத்தைமட்டும் அல்ல, உலகெங்கும் பரவி இந்த பூமியையே உலகையே பீடித்து ஆட்டுகிறது / நாசம் செய்து கொண்டிருக்கிறது – அது சரி – இந்தப்புஸ்தகஸ்த்திற்கு, உலக இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கண்டித்து, தடை செய்து போராட்டம் நடத்தி ஆர்பாட்டம் செய்து கோஷமிட்டு கூச்சலிட்டு கொளுத்தி / எரித்து குண்டு வீச்சுக்கள் முதலியவைகளை நடத்தவில்லையா ? கிறிஸ்த்துவமும் சரி, இஸ்லாமும் சரி, இதர வேறு அனைத்து மதங்களும் சரி, போட்டிக்கு முளைத்தவைகளே, மற்றும் சில அக்காலத்து சனாதன புரட்சியாளர்கள் பிரிந்து சென்று இவைகளை உருவாக்கியிருக்கலாம்.

 41. Avatar
  ஷாலி says:

  // ஆங்கிலேய – ஐரோப்பிய- பாரசீய – முஹம்மதீய மக்களின் துஷ்ப்ரசார – துர்மார்க போதனைகளே – போதிப்புகளே – பலவந்தத் திணிப்புகளே – மத மாற்றங்களே அனைத்திற்கும் காரணம் – விஷவிதை வினை / விளை/வினைக்கப்பட்டு அது அழிக்கமுடியாத அசுர விஷ விருக்ஷமாய் இன்று நம் பாரத தேசத்தைப் பீடித்திருக்கும் பெரு வியாதியாய் உள்ளது.//

  நம்ம ஐயர் சொல்றது சரிதேன்! நாம என்ன கேட்கிறோம் என்றால். இந்து மதத்திலிருந்து மதம் மாறுபவர்கள் அனைவரும் ஏன் சூத்திரர்களாக இருக்கின்றனர்? முதல் வருணக்காரர்கள் ஏன் மாறுவதில்லை?பாரதீய ஹிந்து மதத்தில் பிராமணருக்கு ஒரு நீதி சூத்திரனுக்கு மனு நீதி என்று சட்டம் வகுத்ததால் மதம் மாறுகிறார்கள். நாலு வர்ண லிஸ்டில் இல்லாத பஞ்சமனான பள்ளன், பறையன், சக்கிலியனுக்கு ஹிந்து மதத்தில் இன்னும் விடியவில்லை. விடுதலை,விடியலை தேடி அவர்கள் ஓடுகிறார்கள்.சவுண்டி பிராமணருக்கு உள்ள அந்தஸ்து கூட சத்திரிய சூத்திரருக்கு கிடைக்காது. இதுதான் திரு.ஜெயராம ஐயரின் பாரதீய சனாதன ஹிந்து தர்மம்.

 42. Avatar
  ஷாலி says:

  மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?
  சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

  “இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

  நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமி ருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.

  வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார் களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

  தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு:

  அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப் பாளிகள் அல்லர்.
  அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர் களும் இருக்கிறார்கள்.

  அத்தகைய நயவஞ்சகர்கள் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுய நலத்தை வளர்ப்பவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பாரமார்த்திகம், வியவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.

  ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக் காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?

  மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்? இவ்வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லுவதற்கும் இந்துமதம் சிறந்த வழிகாட்டியாகவிருக்கின்றது.
  இந்தமதத்தைச் சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவினுடைய பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர்களிடையே பேச்சு அதிகம். செயல் குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்தவற்றையும் பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.

  நமக்குப் பேசத்தான் தெரியும் நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம் முடைய துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.
  மேலும் நாம் சோம்பேறிகளாகவிருக் கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையி லுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.”

  (தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *