ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 17 of 41 in the series 10 ஜூன் 2012

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி
இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி.
நாத‌ஸ்வ‌ர‌ம்.

எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது.
என்ன அர்த்தம் அது?
“மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே”

அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும்
த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான்.
குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?”

கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை.
ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்?
அவ‌ள் போட‌ கோல‌ம்.

ப‌வுர்ண‌மி
மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து.
அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள்.

==============================

============ருத்ரா
Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5ருத்ராவின் குறும்பாக்கள்

4 Comments

  1. கவிஞர் ருத்ரா அவர்களே…

    ஒவ்வொன்றும்..பிரமாதமாக பேசுகிறது..!
    அருமை.அருமை.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar ruthraa

    நன்றி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே

    அன்புடன்
    ருத்ரா

  3. Avatar சோமா

    கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை.
    ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்?
    அவ‌ள் போட‌ கோல‌ம்.

    ப‌வுர்ண‌மி
    மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து.
    அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள்
    இந்த வரிகளை…புதிதாய் காதலிப்பவன் தன் காதலிக்கு எழுதித்தரலாம் :-)

  4. Avatar ruthraa

    அன்புள்ள சோமா அவர்களே

    தி அதர் சைடு ஆஃப் தி டன்னல் என்பார்களே..அது போல் தான் காதல் குகையும்.என் குறும்பாக்கள் ஒரு வெளிச்சம் காட்டுவதாக போக்கு காட்டிக்கொண்டிருக்கும் இனிய கனவுகளின் “குகைப்பாக்கள்”தான்.காதலின் விடியல் கூட கானல் நீர் சித்திரமோ?காதலின் ஈஸ்தெடிக் தன்மை எனும் அழகியல் சுவடுகளை காட்டியதற்கு நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *