மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று
குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு
கொடுத்த புனிதனே!ஜனாதிபதி
உன் கவிதைக்குழந்தைக்கு
விருது என்று கொடுத்தார்
ஒரு கிலு கிலுப்பையை!
அத்தனயும்
எத்தனை வரிகள் உன் வரிகள்.
அத்தனையும்
உன் எழுத்துக்குள் இனித்த வலிகள்.
கவிதை எனும் உலகக்கோளத்தின்
பூமத்திய ரேகை
சிறுகூடல் பட்டியின் வழியாக
அல்லவா ஓடுகிறது.
“உலகம் பிறந்தது எனக்காக”
என்றாயே
நீ எதைச்சொன்னாய்?
தமிழ் எனும் சொல்லின்
ஈற்றெழுத்தின் தலையில்
ஒரு புள்ளி வைத்தாயே
அதைத்தானே சொன்னாய்?
“இரவின் கண்ணீர் பனித்துளி” என்றாயே
அந்த வைரத்துளியே உனக்கு “பொற்கிழி”.
“சிலர் அழுதுகொண்டே சிரிப்பார்.
சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்”
என்று நீ எழுதுவதற்கு
அந்த “நடிப்பு இமயத்தின்”
முகத்தையல்லவா காகிதம் ஆக்கிக்கொண்டாய்.
“சட்டி சுட்ட தடா”என்றாய்.
அதில் “ஜென்”ஆழ்ந்து அமர்ந்து
ஒளி வீசியதை
ஒளித்து வைத்து விளையாடினாய்.
“எறும்புத்தொலை உரித்துப்பார்க்க
யானை வந்ததடா..என்
இதயத்தோலை உரித்துப்பார்க்க
ஞானம் வந்ததடா..”
வந்தது யானையா? “ஜென்னா?”
“வீடு வரை உறவு..”
சித்தர்களின் எழுதுகோலை நீ
இரவல் வாங்கியிருக்கலாம்.
ஆனாலும் உன்
உயிரைத்தான் அதில்
உமிழ்ந்திருக்கிறாய்.
“சென்றவனைக்கேட்டால்
வந்து விடு என்பான்.
வந்தவனைக்கேட்டால்
சென்றுவிடு என்பான்.”
மனப்புண்ணில் ஒரு காக்கையை
உட்கார்த்தினாய்
கொத்தி கொத்தி அது
உன் எழுத்தைக்கீறியதா?
அதன் உள் குருதியை
கொப்பளிக்க வைத்ததா?
மெல்லிசை மன்னர்கள்
உன் வரிகளைக்கொண்டு
உணர்ச்சியின்
கவரி வீசினார்கள்.
“கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு”
அப்புறம் ஓடத்தான் போகிறேன்
இப்போது கோடு காட்டுகிறேன் என்றாய்.
ஏனெனில்
கவிதை படைப்பதனாலேயே
நீ ஒரு கடவுள் என்று
பிரகடனப்படுத்திக்கொண்டாயே
உன் எழுத்துக்குள்
முட்டி நிற்கும் எரிமலை லாவா அது?
எந்த “தலப்பா”வுக்கும்
தலை வணங்கா தமிழ்ப்பா அது.
கோப்பையில் குடியிருப்பதை
ஆடிப்பாடி பெருமிதத்தோடு சொன்னாய்.
குடித்தது நீயாய் இருக்கலாம்
அப்போது உன் தமிழையும்
ருசித்தது அந்த “உமர்கயாம் கோப்பை”.
உனக்கு ஒரு இரங்கற்பா பாட
என்னை யாரும் அழைக்கவில்லை.
இருந்தாலும்
“தெனாவெட்டாக” கூறிக்கொண்டேன்.
நீ இறந்தால் அல்லவா
இரங்கற்பா பாட வேண்டும்.
உனக்கு இரங்கற்பா பாடியவர்கள்
எத்தனையோ பேர்!
அப்போது உன் பூத உடல்
திடீரென்று காணாமல் போய் விட்டது
என்று எல்லோரும் பதறிப்போனார்கள்.
என்ன ஆயிற்று.
ஒன்றுமில்லை
அங்கு இரங்கற்பா பாடியவர்கள்
யாருமில்லை.
நீயே தான்.
உன் உயிரின் “அகர முதல” வை
அந்த அக்கினியில் நீயே ஆகுதி ஆக்க
விரும்பிய உன் இறுதி ஆசை அது.
அர்த்தமுள்ள இந்துமதம் என்று
எத்தனை வால்யூம்களை எழுதி
உனக்கு சிதையாக்கிக்கொண்டாய்.
அப்போதும் அந்த தீயில்
நீ ஒலிக்கிறாய்.
“நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை”
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை”
நீ ஒரு அப்பழுக்கற்ற கவிஞன்.
கவிதை உன்னில் புடம் போட்டுக்கொண்டது.
நீ கவிதையில் புடம் போட்டுக்கொண்டாய்.
கவிஞர்கள் பேனாவை எடுக்கும்போதெல்லாம்
கர்ப்பம் தரிக்கிறாய்.
நீ இல்லை என்ற சொல்லே
இங்கு இல்லை.
நீ காலம் தீண்டாத கவிஞன்.
==============================
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2