பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை விதைத்த கவிஞர்கள் எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் கூடாது. அவ்வாறு படைத்தால் அப்படைப்பாளன் அச்சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய…

மாறியது நெஞ்சம்

கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன…

நச்சுச் சொல்

தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை…

நான் செத்தான்

  எப்போதும் இல்லாத முன்னிரவு... முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த ஏகப்பட்ட கேள்விகள் வல்லாயுதங்களோடு வரிசைபிடித்து நின்றன. இருட்டுக் குகையிலிருந்து வெளிப்படும் பறவை வாயிலிலிருந்து உலகைத் தரிசிப்பதற்கு…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி,…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)

++++++++++++++++++++++++++++++++ காதல் சமப்படுத்தும் இதயங்களை ++++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய…

தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தீவிர வலிபோல் தாக்கியது என் ஆத்மாவை உன் கீதத்தின் இசை ! என் இதயம் எப்படித் துடித்தது என்று அறியும் இதயம் மட்டுமே ! பற்றிக் கொண்டு…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  15

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15

நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.   இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு…

சந்தோஷ்சிவனின் “ உருமி “

சிறகு இரவிச்சந்திரன். பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் கறியும் வைத்தால் எப்படியிருக்கும்? பசிக்கு கொஞ்சம் உள்ளே போகும். அடங்கியவுடன் புறந்தள்ளும். இட்லி வடை கிடைக்காதா என்று ஏங்கும். அப்படி இருக்கிறது படம். சந்தோஷ் சிவன், பிரபு…

காத்திருப்பு

முத்துராமன். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, பொறுமை இழந்து நடந்தே வந்தாலும் வந்து விடுவாள். வீட்டுக்கு வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகும். வீட்டுக்கு…