நதீம் எஃப் பரச்சா
இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே
ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள்
அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று விவரித்தார்கள். ஒரு சிலர் இந்த நாடோடி, முஸ்லீம்களின் புனித புத்தகமாக குரானை அவமரியாதை செய்துவிட்டார் என்று புகார் கொடுத்ததால், அந்த பகுதி போலீஸ் இந்த நாடோடியை கைது செய்தார்கள்.
ஆகவே, புதன்கிழமை, போலீஸ் லாக்கப்பில் கம்பிகளுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தபோது, போலீஸ் வழக்கம்போல, அந்த நாடோடியை பார்த்து, பரிதாபப்படும் இளிப்போடு, இந்த நாடோடி சித்தசுவாதீனம் இல்லாமல் இருப்பதையும் கேலி செய்துகொண்டிருந்தபோது, கும்பல் அந்த போலீஸ் ஸ்டேஷனை சுற்றி வளைத்து, அந்த மதநிந்தனையாளரை (blasphemer) தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது.
போலீஸ்காரர்கள் மறுத்தார்கள். அந்த நபரின் மீதான வழக்கை நீதிமன்றத்தில்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்கள். போலீஸ் யூனிபார்ம் அணிந்திருக்கும் இந்த போலீஸ் முஸ்லீம்கள் தானாகவே வந்து இந்த நாடோடியை கொளுத்தாமல் இருப்பதற்கு ஆச்சரியமடைந்தது போல, இந்த கும்பல் மேலும் முந்தி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய முனைந்தது.
கும்பலில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் மீது ஒரு சில போலீஸ்காரர்கள் கைத்தடியுடனும் கண்ணீர்புகையுடனும் மோதி அந்த கும்பலை விரட்டியடிக்க முனைந்தனர். இந்த கும்பலோடு கூட இன்னும் பல நூறு மக்கள் வேடிக்கை பார்ப்பதற்கா வேறு குழுமியிருந்தனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலெல்லாம் ஈடுபடாமல் ஆனால், உயிரற்ற பிணம்போல அமைதியாக வேடிக்கை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் குழுமுமே அதுபோல.
மேலதிகாரிகளிடம் மேலும் பல போலீஸ்காரர்களை துணைக்கு அனுப்பி வைக்க ஒரு போலீஸ் கெஞ்சினார். அதற்குள் ஏற்கெனவே கும்பல் போலீஸ் லாக்கப்புக்குள் நுழைந்துவிட்டது. மலாங்க் நாடோடி எங்கே வைக்கப்பட்டிருக்கிறாரோ அங்கேயே சென்றது.
செய்திபத்திரிக்கைகள் அந்த சிறையை இரண்டு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பாதுகாத்துவந்தார்கள் என்று அறிவிக்கின்றன. உருது தினசரி பத்திரிக்கை செய்தி நிருபர் என்னிடம் சொன்னதை வைத்து பார்த்தால், அந்த போலீஸ்காரர்கள் கும்பல் மீது சுடுவதற்கு தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால், அலைமோதி வந்த ஏராளமான மக்களை பார்த்து வழியை தடுக்க மட்டுமே செய்தார்கள் என்று அறிகிறேன்.
வேறென்ன செய்யமுடியும்? அவர்களை உதறிவிட்டு மட்டும் போகவில்லை. இரக்கமில்லாமல் அடித்து துவைத்தது இந்த கும்பல். அறைக்குள் நுழைந்த கும்பல், அங்கே திகிலடைந்து இருந்த நாடோடியை பிடித்து இழுத்து வெளியே வந்து குச்சிகளாலும், தடிகளாலும், இரும்பு கம்பிகளாலும் அடித்து துவைக்க ஆரம்பித்தது.
கும்பலிடம் உயிருக்கு மன்றாடி அந்த நாடோடி கத்தினார் கெஞ்சினார் என்று ஒரு சில சாட்சிகள் ( உயிரற்ற பிரேதங்கள்) பத்திரிக்கை நிருபர்களிடம் கூறினார்கள். ஆனால், வேடிக்கை பார்த்தவர்களும் அப்படியே நின்றார்கள். அமைதி மார்க்கமான” இஸ்லாமை நிந்தித்ததற்காக அந்த மலாங்கை நரகத்துக்கு அனுப்ப அந்த கும்பல் வெட்டிக் கொல்லுவதற்கு முன்னால் அதிகப்படி போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள் என்று பிரார்த்தனை செய்தபடி அடிவாங்கிய போலீஸ்காரர்களும் அப்படியே நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
அதிகப்படி போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஆனால், அதற்குள் கும்பல் தனது பழிவாங்கி ரத்தம் குடித்து பசியாறியிருந்தது. அந்த மனநலம் சரியில்லாத நாடோடியை அடித்தே கொன்றிருந்தது. தனது ரத்தவெறிக்கு அது போதாது என்று அந்த நொந்து உயிரற்று கிடந்த சடலத்தை நெருப்பை வைத்து கொளுத்தியது.
இஸ்லாமை நிந்தித்த அந்த கொடியவனின் உடலிருந்து எழுந்த தீக்கொழுந்துகளை பார்த்து அந்த கும்பலில் இருந்த இஸ்லாமிய பக்திமான்கள் வானத்தை பார்த்து, தங்களது ரத்தம் பாய்ந்த கண்களால் ஏழாவது வானத்தில் உட்கார்ந்திருக்கும் அல்லாஹ்வை தேடி, அந்த அல்லாஹ் தங்கள் மீது ரோஜா இதழ்களை பொழிவார் என்று எதிர்பார்த்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாக கருதுகிறேன்.
அது நடக்கவில்லை. கடவுள் அந்த செயலை பார்த்து வெறுப்படைந்திருப்பார் என்று யாரும் சொல்லத்துணியவில்லை.
இன்னொரு முறை, நமது நாடு (பாகிஸ்தான்) தனது மத நம்பிக்கையையும், புனித புத்தகங்களையும் காப்பாற்ற ஆன்மீக பெரியவர்களை அனுப்பவில்லை. மாறாக மன நலம் இல்லாத மிருக குப்பைகளை அனுப்பியிருக்கிறது.
___________________________
ஏறத்தாழ பாகிஸ்தானின் எல்லா பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த செய்தியை பிரசுரித்தன. பாகிஸ்தானின் அரசாங்க நிறுவனங்களும், நீதித்துறையும், அரசியலும், ஏன் சமூகமுமே வளம் குன்றியதாக ஆகிவிட்டன என்று அதே போல மேற்கத்திய ஊடகங்களும் தலையை சொறிந்து கொண்டிருக்கும்.
இஸ்லாமின் கோட்டை” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிகொண்ட நாடு, மெல்ல மெல்ல புத்தி சுவாதீனமற்ற, வன்முறை மிகுந்த எந்திரங்களாக, சித்தசுவாதீனமற்ற நாடோடிகளிலிருந்து, நேட்டோ உணவு கொண்டு செல்லும் வண்டிகள் வரை எல்லாவற்றையுமே இஸ்லாமுக்கு எதிரான சதிகளாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த குரூரமான செய்கைக்கு 24 மணி நேரத்துக்கு பிறகும், கொல்லப்பட்டவரின் பெயர் யாருக்கும் தெரியவில்லை.
அவர் மிகவும் பொதுவாக ஆண்கள் நிந்தித்தல் அவரை குற்றம்சாட்டி பகைவர்களை எதிராக தனிப்பட்ட மற்றும் பொருளாதார மதிப்பெண்களை குடியேற சிறுவன், விரக்தியடைந்த மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி மறைமுகமாக ஆதரிக்க இயக்கக்கூடிய பல காரணங்கள் ஒரு பலியாக?
யார் இவர்? இவர் உண்மையிலேயே குரானை அவமரியாதை செய்தாரா? அல்லது, தனது தனிப்பட்ட அல்லது பொருளாதார காரணங்களுக்காக, ”குரானை நிந்தித்தான்” என்று இளைஞர்களை உசுப்பிவிட்டு பகைவர்களை கொல்வது வாடிக்கையாக இருக்கிறதே அது போன்றதொரு பலியாடா?
அல்லது இதுவும், ஒருவரைமற்றொருவர் காபிர் என்று திட்டிக்கொள்ளும், சுன்னி பரேல்வி பிரிவுக்கும், சுன்னி தேவபந்தி பிரிவுக்கும் இடையே நடக்கும் 200 வருட போரின் இன்னொரு நிகழ்ச்சியா?
ஜியாவுல்ஹக் சர்வாதிகார ஆட்சி, Blasphemy Laws என்ற பெயரில் முகம்மது நபியையும், குரானையும் நிந்திப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங்களுக்கு பின்னால், இந்த சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட 60 சதவீத வழக்குகள் பரேல்விகளும் தேவபந்திகளும் ஒருவரை மற்றொருவர் கைகாட்ட கொண்டுவந்த வழக்குகள் என்று நம்பப்படுகிறது.
1988இல் ஜியாவின் மரணத்துக்கு பின்னால் வந்த பல அரசாங்கங்கள், முக்கியமாக பாகிஸ்தான் மக்கள் கட்சி(Pakistan Peoples Party (PPP) பெனசீர் புட்டோவின் கட்சி), ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சி ஆகியவை இந்த சட்டங்களை நீக்க பலமுறை முயற்சித்தன. இந்த சட்டங்கள் இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை என்று பல தாராளவாத முஸ்லீம் அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜாவேத் அஹ்மத் காமிடி என்பவர் பாகிஸ்தானின் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் பகிரங்கமாகவே இந்த அவமரியாதை சட்டங்கள் இஸ்லாமிய நீதியில் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். இவை மனிதரால் உருவாக்கப்பட்டவை (கடவுள் உருவாக்கியவை அல்ல) என்று அறிவித்திருக்கிறார். 2009இல், பாகிஸ்தானின் பல்வேறு தீவிரவாத குழுக்களின் அச்சுருத்தலுக்கு பின்னால், காமிடி தலைமறைவாகி, மலேசியாவுக்கு பறந்து சென்றார்.
உதாரணமாக 1988-91/1993-96இல் பெனசீர் புட்டோ ஆட்சியிலிருந்தபோது இந்த அவமரியாதை சட்டங்களை மாற்ற வேண்டுமென்று லேசுபாசாக பேசினார். ஆனால், அவரது முயற்சி மத கட்சிகளால் முறியடிக்கப்பட்டது. அந்த விவாதத்தை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசக்கூடியமுடியவில்லை.
2000களில் முஷாரப் சர்வாதிகார ஆட்சியின்போது, அவரும் இந்த சட்டங்களை நீக்க முயன்றார். மேற்பூச்சான மாற்றங்களையே அவரால் கொண்டுவரமுடிந்தது.
2010இல் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பியும் இப்போதைய பாகிஸ்தானின் அமெரிக்க தூதருமான ஷெர்ரி ரஹ்மான் சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். . பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும் பஞ்சாப் கவர்னருமான சல்மான் தஸீர் குரானை அவமரியாதை செய்தார் என்று நினைத்து அவருடைய பாடிகார்டாலேயே கொல்லப்பட்டபின்னால் அதுவும் நிறைவேறவில்லை.
ஒரு ஏழை கிறிஸ்துவ பெண்ணை இஸ்லாமுக்கு மதம் மாற்ற விரும்பியர்கள், அந்த பெண் மதம் மாறவில்லை என்பதால் அவர் குரானை அவமரியாதை செய்தார் என்று அவர் மீது அவதூறு வழக்கு போட்டபோது, அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியதால், தஸீர் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சல்மான் டஸீர். இவர் பஞ்சாப் ஆளுனர். இவர் மதநிந்தனை செய்தார் என்று முல்லாக்கள் கூறியதால், மதவெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜமாத்தே இஸ்லாமி, தேவபந்தி ஜாமியத் உலீமா இஸ்லாம், பரேல்வி சுன்னி இத்தேஹாத் கவுன்ஸில், ஆகியவை மதநிந்தனை சட்டங்களை நீக்குவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன
மேலும், கடந்த பத்தாண்டுகளில், ஏராளமான ஜிகாத் அமைப்புகள், மதப்பிரிவு அமைப்புகளுடன், முக்கியமான ஊடகத்துறை ஆட்களும் இதில் குதித்திருக்கிறார்கள்.
தஸீர் கொலை செய்யப்பட்ட வருடம், ஷெர்ரி ரஹ்மான் மதநிந்தனை சட்டத்தை மாற்ற முனைந்த போது இந்த மதப்பிரிவு அமைப்புகளும் ஜிகாத் அமைப்புகளும் நாடு முழுவதும் பெரும் ஊர்வலங்கள் நடத்தி இதனை எதிர்த்தன.
இந்த ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட மதப்பிரிவு தலைவர்களும் பயங்கரவாத அமைப்பு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இது போதாது என்று, பெரிய தொலைக்காட்சி ஊடகத்துறையினரான ஆமிர் லியாகத், அன்ஸார் அப்பாஸி போன்றவர்களும், தங்களுக்கு ஊடகங்களில் இருக்கும் முக்கியத்துவத்தை பயன்படுத்திகொண்டு, இந்த மதநிந்தனை சட்டங்களை நீக்கக்கூடாது என்று பேசுவது மட்டுமின்றி, இந்த மத நிந்தனை சட்டங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள் மீது வன்முறையைபிரயோகிக்க வேண்டும் என்று இஸ்லாமின் பெயரால் கும்பல்கள் சென்று தாக்குவதை நியாயப்படுத்துகின்றனர்.
சிவில் சமூகத்தின் மற்றொரு முக்கிய பங்கான வழக்குறைஞர்களில், 2006-07 இல் முஷாரப் ஆட்சிக்கு எதிராக உருவான வக்கீல்கள் இயக்கம் இன்று மதரீதியான வன்முறையை நியாயப்படுத்தும் இயக்கமாக ஆகியிருக்கிறது.
தஸீரை கொலை செய்த பாடிகார்ட் மீது ஏராளமான வக்கீல்கள் ரோஜாப்பூக்களை சொறிவதை காமெராவிலெயே வீடியோ எடுத்து புழக்கத்தில் இருக்கிறது. இப்போது சமீபத்தில் லாகூர் பார் கவுன்ஸில் என்ற லாகூர் வழக்குறைஞர்கள் மையம்,ஷெஜான் புட் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் பார் கவுன்ஸிலுக்குள் எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது. காரணம், ஷெஜான் அஹ்மதியாக்களால் நடத்தப்படுகிறதாம்.
ஸ்வாத் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளால், ஒரு பெண் சவுக்கால் அடிக்கப்படுவதை திரும்ப திரும்ப தொலைக்காட்சியில் காண்பித்ததற்கு அன்ஸார் அப்பாஸி கோவித்துகொண்டார். முதலில் அப்படி சவுக்கால் அடிப்பது “இஸ்லாமிய ஷாரியா கூறுவதுபடிதான்” என்று கூறினார். பிறகு, அவ்வாறு சவுக்கால் அடிப்பதை காட்டுமிராண்டித்தனம் என்று பலர் கூறுவதோடு தான் முரண்படுவதாக கூறினார்.
___________________________
மதநிந்தனை சட்டத்தின் மூலம் தங்களது சொந்த பொருளாதார ரீதியான எதிரிகளை, அல்லது மத ரீதியான எதிரிகளை தீர்த்துக்கட்டவே பலரால் தவறாக பொய்யாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில், மக்கள் தடியெடுத்தவன் தண்டல்காரனாக கும்பல் கலாச்சார ரீதியில் சட்டத்தை கையில் எடுத்துகொள்ள ஊக்குவிக்கிறது என்பதும் உண்மை.
பவல்பூரில் மனநிலை சரியில்லாத மலங்கை கொலை செய்தது, பாகிஸ்தானில் முதன்முறையாக இஸ்லாமை காப்பாற்ற அப்படிப்பட்ட ஒரு கொடூரம் நடந்தது என்று சொல்லமுடியாது.
இப்படிப்பட்ட மதநிந்தனைக்காக அப்பாவிகள் கொலை செய்யப்படுவது பெரும்பாலும் மத்திய பஞ்சாபிலும் தெற்கு பஞ்சாபிலுமே அதிகம் நடந்திருக்கிறது என்பது சிந்திக்கத்தகுந்த ஒரு விஷயம். கடந்த இருபதாண்டுகளில், பஞ்சாப் முழுவதுமே ஒரு மதரீதியான பெரும் மாற்றத்தில் இருக்கிறது. இங்கேதான் ஜிகாதி அமைப்புகளும், மதப்பிரிவு தீவிரவாதமும் கொளுந்துவிட்டு எரிகிறது.
இவ்வாறு மதநிந்தனை செய்பவர்களின் சார்பாக தங்களை பார்த்துவிடுவார்களோ என்று பொதுமக்களும், அரசியல்வாதிகளும், அரசாங்க அமைப்புகளும் இந்த ஜிகாதி அமைப்புகளுக்கும், மதப்பிரிவு தீவிரவாதிகளுக்கும் பயப்படுகிறார்கள்.
தஸீர் கொலை, ஷெர்ரி ரஹ்மானும், பாஜியா வாஹெப்பும் அச்சுருத்தப்பட்டது ஆகியவை தவிர்த்து, மத்திய அரசாங்கமும் பஞ்சாபில் நடக்கும் நவாஸ் ஷெரீபின் கட்சி பி.எம்.எல்லும் எவ்வாறு மதரஸாக்களிலும், மசூதிகளிலும் வினியோகிக்கப்படும் பயங்கரவாத ஆதரவு பிரசுரங்களையும், வன்முறைக்கு தூண்டும் பேச்சுக்களையும் நிறுத்துவது என்று தெரியாமல் திருதிருவென்று விழிக்கிறார்கள்.
உண்மையில், மதவாதம் பேசாத, வலதுசாரி கட்சிகளான நவாஸ் ஷெரீபின் பி.எம்.எல் கட்சியும், இம்ரான் கானின் பிடிஐ கட்சியும், மதப்பிரிவு தீவிரவாதிகளுடனும் ஜிகாதி அமைப்புகளுடனும் உறவு பேணுவதை ஜரூராக செய்துவருகின்றன. மேலும், மதநிந்தனை செய்பவர்களை மக்களே தண்டிக்க வேண்டும் என்று பேசி கும்பல் வன்முறையை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
இம்ரான் கான் தனது பிடிஐ கட்சி கூட்டத்தில்பேசுகிறார். கூட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி கட்சி கொடிகளும், தடை செய்யப்பட்ட சிபாஹி ஷஹாபா பாகிஸ்தான் (சுன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பு) கொடிகளும் காணப்படுவதை பார்க்கலாம்.
பஞ்சாப் சட்ட அமைச்சர் பி.எம்.எல் தலைவர் ரானா சனாவுல்லாஹ் மேடையில் தடை செய்யப்பட்ட சிபாஹி சஹாபா அமைப்பு தலைவருடன் காணலாம். (இந்த சிபாஹி சஹாபா அமைப்பு ஷியா பிரிவினரையும் அஹ்மதியா பிரிவினரையும் கொல்லுவதை முக்கிய வேலையாக செய்கிறது)
லாஹூர் வக்கீல்கள் சல்மான் தஸீரை கொன்றவனை பாராட்டுவதை பார்க்கலாம். இவன் மீது ரோஜா இதழ்களை தூவி அவனை காவிய நாயகன் என்று புகழ்கிறார்கள். இந்த படத்தில் இருக்கும் பல வக்கீல்கள், முஷாரப் அரசுக்கு எதிராக வக்கீல்கள் இயக்கத்தில் இருந்தவர்கள்.
தொலைக்காட்சியில் இஸ்லாமிய மதபோதனை செய்யும் ஆமிர் லியாகத். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக அஹ்மதியா பிரிவு மக்கள் மீது வன்முறையை ஏவ மக்களை தூண்டுகிறார். 2007 இல் 4 அஹ்மதியாக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அஹ்மதியாக்கள் லியாகத் நிகழ்ச்சியை காரணமாக சொன்னார்கள். அவர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர் எம்.க்யூ.எம் என்ற கட்சி பிரமுகர். இவர் mqm கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொலைக்காட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால், இந்த வருடம் ரம்ஜானிலிருந்து மீண்டும் அதே நிகழ்ச்சியை அதே தொலைக்காட்சியில் நடத்த அழைக்கப்பட்டுள்ளார்.
___________________________
ஆக, அந்த நாடோடி சூபி மலாங் யார்? அவருடைய பெயர் என்ன? அவர் என்னதான் செய்தார்? பத்திரிக்கையாளர்களிடமிருந்து இதனைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.
அவருடைய பெயர் இன்னும் தெரியவில்லை. அவர் ஒருவேளை மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ளவராக இருந்ததால் இருக்கலாம். அவரை கொல்ல முயன்றவர்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம்.
அந்த பகுதி மக்களால் மனநலம் குன்றியவராக அறியப்பட்டவராக இருந்தார். இந்த மனநலம் குன்றியவர் இஸ்லாமிய புனித புத்தகத்தை அவமரியாதை செய்தார் என்று யார் கண்டுபிடித்தது என்றும் தெரியவில்லை.
ஈராக்கில் அரசாங்க அதிகாரிகளால் 10 ஆம் நூற்றாண்டில் மத நிந்தனைக்காக கொலை செய்யப்பட்ட சூபி துறவி, அறிஞர், கவிஞரான மன்சூர் அல் ஹல்லாஜ் என்பவரை பின்பற்றியவர் இந்த மலாங்க், மன்சூர் அல் ஹல்லாஜ் பிரிவின் அஷிக் என்று அந்த பகுதி மக்கள் கருதியிருக்கிறார்கள்.
அப்பாஸித் காலிப் அல் முக்டாதிர் என்னும் மன்னரால், 922 வருடத்தில் மன்சூர் அல் ஹல்லாஜ் தூக்கிலிட்டதை காட்டும் ஓவியம்.
இவர் சூபி ஆன்மீகத்தில் தோய்ந்த ஒரு நிலையில், “அனால் ஹக்” (நானே உண்மை) என்று கத்தியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய மதகுருக்கள், இவர் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துகொள்கிறார் என்று கருதினார்கள். ஆன்மீகத்தின் உச்ச நிலையை அவர் அடைந்ததால் அவர் அவ்வாறு கூறினார் என்று சூபிக்கள் கருதுகிறார்கள். மன்சூர் அல் ஹ்ல்லாஜின் இஸ்லாம் மக்களிடம் பிரபலமானதால், தன் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்று அஞ்சிய முக்டாதிர் மன்னர், இஸ்லாமிய மதகுருக்கள் உதவியுடன் இவரை கொலை செய்தார் என்று கருதுகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட இந்த மலாங்குக்கு ஒரு குடும்பம் எங்காவது இருக்கலாம். ஆனால், அவர்கள் வெளியே பேச அஞ்சுவார்கள்.
மதநிந்தனைக்காக கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அச்சுருத்தலுக்கும் கொலைக்கும் பாத்திரமாகிவிடுகின்றார்கள். தீக்கனவிலிருந்து எழுந்திருக்கமுடியாமல், மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் கடவுளின் எதிரிகளை கொல்வதும் மதநிந்தனைக்காக கொலை செய்வதும் மிகவும் நிரந்தரமானதாகவும் இன்பமானதாகவும் ஆகிவிட்டிருக்கிறது.
மனத்துயரமடைந்த என் நண்பர் ஒருமுறை என்னிடம் சொன்னார்.”பாகிஸ்தானிடமிருந்து அல்லாஹ் இஸ்லாமை காப்பாற்றட்டும்”
http://dawn.com/2012/07/05/exit-god-enter-madness/
- மீளாத பிருந்தாவனம்..!
- குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்
- எனக்கு வந்த கடிதம்
- லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)
- காத்திருப்பு
- என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.
- நட்ட ஈடு
- சிறிய பொருள் என்றாலும்…
- நகரமும் நடைபாதையும்
- கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”
- மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21
- முள்வெளி அத்தியாயம் -17
- கல்வியில் அரசியல் -1
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்
- தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?
- அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்
- நினைவுகளின் சுவட்டில் (93)
- பொன்னாத்தா அம்படவேயில்ல…
- பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
- 100 கிலோ நினைவுகள்
- 2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34
- வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு
- பில்லா -2 இருத்தலியல்
- உய்குர் இனக்கதைகள் (2)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)
- பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்
- இழப்பு
- மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்