தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !

This entry is part 22 of 35 in the series 29 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கவினுறச் செய்துன்னைக்
கவர்ந்து கொள்ளேன் !
காதல் வலையால் உன்னைக்
கவர்ந்து கொள்வேன் !
கதவைத் திறப்பது உனக்கென்
கையல்ல ! எனது
கானங்கள் தான் உனக்கு
கதவைத் திறக்கும் !

கழுத்து முழுதும் நகை
உனக்கு
குவித்திட மாட்டேன் !
பூமாலைப் பூத்தோரணம்
உனக்குப்
பூண மாட்டேன் !
என் பரிவுப் பண்பை எல்லாம்
ஒரு மாலையில் பின்னி
உன் கழுத்தணி செய்வேன் !

எவருக்கும் தெரியாது
இதயத்தில் அலைகள் எழுப்பும்
எத்திசைப் புயலுக்கு
நர்த்தனம் ஆடுமென்று ?
நிலவின் புலப்படா ஈர்ப்பால்
எழும் அலைகளின்
ஏற்ற இறக்கக் கொந்தளிப்பை.
ஏற்படுத்துவேன்.

+++++++++++++++++++++++++
பாட்டு : 90 தாகூர் தன் 49 ஆம் வயதில் “ராஜா” என்னும் பாட்டு நாடகத்தில் ஒரு பாகமாக எழுதியது (டிசம்பர் 1910).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 23, 2012

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

27 Comments

 1. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் திரு ஜெயபாரதன்,

  மிகச் சுவையான கவித்தேன். ஆரம்ப வார்த்தைகளே சுவையின் உச்சம். மிகவும் இரசித்துப் படித்தேன். மிக்க நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 2. Avatar
  punai peyaril says:

  ஒரு புதிய பின்னூட்ட கலாச்சாரம் திண்ணையில் தோன்றியுள்ளது. எழுத்தாளர்கள் ஒவ்வொருக்கொருவர் நெகிழ்ந்தது இது போல் இல்லை… என்று சொல்ல…. உடன் இவர் நன்றி சொல்லிவிட்டு , அந்த எழுத்தாளரின் எழுத்தை ஓகோ ஓகோ என்று பின்னூட்டம் இட… சுப்புடு இருந்தால் நாக்கை பிடுங்கிங் கொள்வார். விமர்சனம் பின்னூட்டம் என்பதற்கு ஒரு தரம் இருக்கிறது. இந்த வியாதியை பெண் எழுத்தாளார்கள் துவக்கி வைத்துள்ளனர் இங்கு…

 3. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இப்படி இல்லாத ஓர் இலக்கண விதியைச் சொல்லிக் கொண்டு தனி மனிதரை “ஜால்ரா போடுறார்” என்று தவறாமல் தாக்குவது திருவாளர் புனை பெயரார் அவர்களுக்கு அடிக்கடி வரும் மனநோய்.

  சி. ஜெயபாரதன்.

  1. Avatar
   ஆனந்தன் says:

   அதென்ன ஜெயபாரதன், புனைப்பெயரில் பின்னூட்டத்தின் பெண்வியாதி என்கிறார். நீங்கள் இதற்காக மெனக்கெட்டு அவரை மனநோயாளி என்கிறீர்களே? தாகூரைத் தமிழாக்கம் செய்த, அதுவும் இவ்வளவு அழகாகச் செய்த உங்களுக்கு இது அழகா? பொருட்படுத்தவே கூடாத ஒருவரை நீங்கள் கோபத்தில் பொருட்படுத்தி விட்டீர்களே? பவள சங்கரி தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்தி விட்டார். பெயரை வைத்து நம்புவதானால் அவர் ஒரு பெண்மணி. ஆகவே, இது பெண்களுக்கே உரித்தான நல்ல குணம். அமுக்கறை (உம்மணா மூஞ்சு என்றும் இதனைப் பொருள் கொள்ளலாம்) களான சில ஆண்களுக்கு கலைவாசனை என்னவென்று தெரியாதவர்களுக்கு செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியுமா? பின்னூட்டம் போடுவதால மட்டும் தன்னையும் ஒரு எழுத்தாளனென்று பாவம் புனைப்பெயரில் தவறாக நினைத்து விட்டார்போல் தெரிகிறது. நான் அறிவுரைகளுக்கு எதிரானவன் என்பதால் கொஞ்சம் கோபத்துடன் புனைப்பெயரிலுக்குச் சொல்கிறேன். நாகரிகம்பேணி தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்களும் ஜெயபாரதன்போல் ஆகிவிடலாம்.

   1. Avatar
    punai peyaril says:

    எனது இந்த பின்னூட்டத்திற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லை. எனது பின்னூட்டம் இந்த தமிழாக்கம் பற்றியதோ இல்லை . இது பின்னூட்டங்கள் பற்றியதே. செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் சம்பந்தமில்லை தான்… செக்கு மாடாய் உழைக்கும் வர்க்கத்தினுடையது… சிவலிங்கமோ புணர்தலின் உல்லாச உச்சநிலைகொண்டது. கோயமுத்தூர் அவுட்டரில் அந்த ஊர்க்காரனிடம் கேட்டால், பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சக்தி ஏற்ற அந்த சாமி என்ன செய்தார் என்று சொல்வார்கள். எந்த ஊரில் கேட்டாலும் செக்கு இழுப்பவின் கதை வியர்வையும் ரணமும் தான். ஜெயபாரதன் போல் நான் ஆக வேண்டியதில்லை… என்னுடைய தளத்தில் வெற்றிகரமாக நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.. ஆனால், தீயாய் கருத்து பரிமாற்ற நிலையில் மட்டுமே உள்ளேன். ஐஸ் வைத்து பிழைப்பது எமக்குத் தெரியாது. சோவியத், ஜெர்மானிய, தமிழ், வங்காள , மலையாள படைப்புகளால் தொட்டிலாட்டப்பட்டு வளர்பவன். திண்ணையின் தரமே ஆக்ரோஷமாக புரட்டி போடும் புதினங்கள். ( மீண்டும் சொல்கிறேன், இந்த பின்னூட்டம், விஞ்ஞான மற்றும் மொழி மாற்றம் கட்டுரைகள் பற்றியதல்ல… ) ஆனா, சமீபகாலமாக எழுதி தள்ளியதால் எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள் போடும் மாறி மாறி ஜால்ரா அடிக்கும் பின்னூட்டம் பற்றியதே… அக்கா என் வீட்டு விருந்து சாப்பிட்டு நல்லாயிருக்கு என்று சொல்லு… நான் நன்றி மறவாமல் உன் வீட்டு விருந்தை நல்லா இருக்கு என்று சொல்றேன் என்ற வகை பின்னூட்டம் பற்றியது மட்டுமே. புரட்டிப் பாருங்கள்.. இம்மாதிரி கலாச்சாரம் வந்தது அழுகை புலம்பல். based எழுத்தாளர்கள் வருகைக்கு பின் மட்டுமே..

    1. Avatar
     சி. ஜெயபாரதன் says:

     எழுத்தாளார் என்று எண்ணிக் கொள்ளும் இந்தப் புனை பெயர் எழுத்தாளர் பிறரை எழுத்தாளரா என்று கேட்பது வியப்பாக இருக்கிறது. இவர் முக மூடி போட்டுக் கொண்டு பிறரைத் திறனாய்வு செய்து, உயர்வு நவிற்சியில் உதாரணம் காட்டிச் சொல்வது அறிவீனம் என்று கூடத் தெரிய வில்லை .

     சி. ஜெயபாரதன்

 4. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் திரு புனைப்பெயரில்,

  மனதிற்குப் பிடித்த படைப்புகளை நன்றாக இருக்கிறது என்று மனதாரப் பாராட்டுவதில் என்ன தவறு என்று புரியவில்லை. இதற்குக் கூட பெண் எழுத்தாளர்கள் என்று பிரித்து வைத்துப் பார்க்கும் பார்வை நன்றாக இருக்கிறதா… இதை வியாதி என்று சொல்வதிலும் அர்த்தமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த பாராட்டும், பின்னூட்டமும் எதிர்பார்க்கும் வழக்கம் என்னிடம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிடித்ததை பிடித்தது என்று சொல்வதற்குக்கூட தயங்க வேண்டுமா…?

  அன்புடன்
  பவள சங்கரி.

 5. Avatar
  jayashree says:

  மதிப்பிற்குரிய…உயர்திரு .திரு.புனைப் பெயரில் அவர்களுக்கு.

  தங்களின் பின்னூட்டம் வழக்கம் போல படித்தேன். முன்பும், இதுபோல் சீதாம்மாவின்
  கட்டுரைக்கு நான் போட்ட பின்னூட்டத்துக்கு பஜனை கோஷ்டி என்ற நையாண்டி செய்தீர்கள்.
  சென்ற முறை, திருமதி.பவளசங்கரி-யின் கதைக்கு,ஜால்ரா சத்தம் கேட்கிறது என்று இந்த முறை…அதையே வேறு விதமாக சொல்லி சந்தோஷப் பட்டுக் கொள்கிறீர்கள்.

  இதில் இருந்தே தங்களின் ஆணாதிக்கத்தை உணர முடிந்தது. திண்ணை என்ன உங்களுக்காக மேடையா? ஒரு கதையைப் படித்தபின்பு பாராட்டி எழுதினால் அதில் என்ன தேவையற்ற கலாச்சாரத்தைக்
  கண்டீர்கள்? திருமதி.பவளசங்கரி, அவர்கள் சிறந்த படைப்பாளி, இணையத்தில் ஒரு பத்திரிகையை சுயமாக நடத்தும் வல்லமை பெற்றவர். யாரும் தரம் அறியாமல் பின்னூட்டம் போடுவதில்லை. இங்கு, நான் யாருக்கும் ஜால்ரா போடா வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை.

  ஒரு ஆரோக்கியமான விஷயத்தை பெண்கள் செய்வதால் அதையே வியாதி எனக் குறிப்பிட்டு சொல்லி இருப்பது கண்டனத்துக்கு உரியது. நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு ஏன் கண்ணை உறுத்துகிறது.? நீங்கள் பத்தி பத்தியாக எழுதும் எந்தப் பின்னூட்டத்தையும் எவரேனும் இதுவரையில் தவறுதலாகச் சொல்கிறார்களா? திண்ணையில் எழுத்து சுதந்திரத்தை…அதுவும், ஒரு ஆரோக்கியமான விஷயத்த கிண்டலும், கேலியும் செய்து எங்கள் மீது அவதூறு பேசும் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? எல்லோரும் எப்போதும் ஊமையாக இருக்க மாட்டார்கள். பெண்ண எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன? இனிமேலும் சீண்டிப் பார்க்க வேண்டாம்..என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

  நன்று. “சுப்புடு இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டுசாவார்” என்று.”…நன்று….அவரும் உங்களைப் போன்றோரின் தரம் தெரியாமல் தாக்கும் பின்னூட்டத்தைப் படித்தால் , அவரே உங்கள் நண்பராக இருந்தால் அவமானம் தாங்காமல் கண்டிப்பாக அதைத் தான் செய்வார்.

  மறுபடியும் அழுத்தமாகச் சொல்கிறேன் பலதும் கற்று அறிந்த பெருமானான தங்களின் செய்கை அநாகரீகமானது.
  இனியாவது அடுத்தவர் தட்டைப் பார்க்காமல் இருப்பது நல்லது.

  அதீத கோபத்தோடு.
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 6. Avatar
  இளங்கோ says:

  திரு புனைபெயரில் எழுதியிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு நான் முன்பு பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில் MAS( Mutual Appreciation Society) என்று ஒரு சிலரை கேலி செய்வார்கள்.நான் உன்னைப் பாராட்டுவேன். நீ என்னைப் பாராட்டு என்று பேசிக் கொள்ளாமலே செயல்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போல இங்க நடக்கிறது என்று புனைபெயரில் எண்ணுகிறாரா? மனிதர்கள் குழுவாக ஒன்று கூடும் தளங்களில் பொதுவாக இது தவிர்க்க முடியாததுதான். மேலும் இதுவொன்றும் தவறானதும் அல்லவே. மேலும் பவளசங்கரி சொல்வது போல், பிடித்த படைப்புகளை பாராட்டுவதில் தவறொன்றுமில்லையே. எனக்குப் பிடித்தது உங்களுக்கும் பிடிக்க வேண்டுமென்பது இல்லையே அல்லவா? ஆனால், படைப்புகளின் குறைகளை விமர்சிக்காமல், பாராட்டிக் கொண்டிருப்பது மட்டுமே செய்தால், படைப்புகளின் தரமும், படைப்பாளியின் தரமும் உயராதென்பதும் உண்மைதான். பொதுவாக படைப்புகளை விமர்சித்தால் படைப்பாளி ஏற்றுக் கொள்வாரா அன்ற ஐயமும், நமக்கேன் வம்பு என்றெண்ணுவதும் கூட விமர்சனங்கள் குறைந்திருப்பதற்கான காரணம். இது மாற வேண்டும். தவறுகள் கண்ணியமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும். அங்ஙனம் சுட்டிக் காட்டப் படும் போது, அவற்றை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளும் பக்குவமும் படைப்பாளிகளுக்கு வர வேண்டும். அப்படி நடக்கும் போது, நிச்சயம் மிக நல்ல படைப்புகள் பெருகும்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   புனை பெயரில் ஒளிந்து கொண்டு பிறர் மீது கல்லை விட்டெறியும் பின்னோட்டவாதிக்குத் திண்ணை என்ன தண்டனை கொடுக்க வேண்டும் வேண்டும் நண்பர் இளங்கோ ?

   சி. ஜெயபாரதன்

   1. Avatar
    punai peyaril says:

    அப்படியெனில் உங்களின் படைப்புகள் எதுவும் விமர்சிக்கக் கூடாது எனும் எதேச்சிகார சிந்தனையா…? இது தான் இலக்கியமும் படைப்பும் உங்களுக்குச் சொல்லித் தந்ததா…? இது திண்ணை… உங்கள் வீட்டுக் கொல்லைப்புறமல்ல….

    1. Avatar
     ஆனந்தன் says:

     புனைப்பெயரில், படைப்புக்களை விமர்சிக்கக் கூடாதென்று ஜெயபாரதன் சொன்னாரா, இல்லையே? விமர்சனம் என்றதுமே தாக்கி எழுதுவதுதான் என்று தவறாகக் கருதிவிட்டீர்கள் போலிருக்கிறது.காவியா விமர்சனம் செய்திருக்கிறார். ஜெயபாரதன் உடனே அதற்கானப் பதிலை நயமிகு பாங்குடன் தெரிவித்திருக்கிறார். உங்கள் படைப்பைப் படித்து விட்டுத் தொலைதூரத்திலிருந்துகூட ஆட்கள் வருகிறார்கள் என்பதை அறிந்ததும், உங்கள் கூற்றுப்படி, கத்துக்குட்டியான எனக்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. அறியாமையிலிருக்கும் இன்பத்தை ஒருநாளாவது அனுபவித்துப் பாருங்கள் புனைப்பெயரில். அனுபூதி என்று சொல்வார்கள் அல்லவா? அது இதுதான். தன்னை முட்டாளென்று உணரும் இடத்திலிருந்துதான் அறிவில் ஊற்றுக்கண் சுரக்கும். அது எப்படி வேண்டுமானாலும் சுரந்து விட்டுப் போகட்டும். உண்மையிலேயே அறியாமை என்பது நீங்களெல்லாம் சொல்வீர்களே கடவுள் என்று. அந்த உச்ச நிலைக்கு ஒப்பான ஒன்று. தங்களது அந்தப் படைப்பைக் குறித்து தங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் சொல்லுங்களேன் புனைப்பெயரில். அப்புறம், தன்னுடைய புகைப்படத்துடன் உண்மையான பெயரில் எழுதுகிற ஜெயபாரதனுக்கு எவ்வளவு கவனமாக எழுத வேண்டும்; உங்களுக்கு இதுபோன்ற எந்தத் தொந்தரவுகளும் கிடையாது என்பதை பெயரே சொல்லி விட்டது. எவ்வளவு அபத்தமாக எழுதினாலும் போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் புனைப்பெயருக்கே இல்லையா? பாதுகாப்பான நிலையிலிருக்கும் மீப்பெரும் எழுத்தாளரான நீங்கள் உங்களுக்கான எல்லைகளை சற்று வரையறுத்து வைத்திருங்கள். திண்ணை என் வீட்டுக் கொல்லைப்புறமென்று ஜெயபாரதன் சொன்னாரா என்ன? செக்கும் சிவலிங்கமும் பற்றிய உதாரணத்திற்கான பதிலாக நீங்கள் செக்குமாட்டைப் பற்றியெல்லாம் சொல்லி உழைக்கும் வர்க்கத்தின் உயர்வுகளைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். இந்த ஒரு வார்த்தைக்காகவே உங்கள் பின்னூட்டம் மீதான அத்தனை கோபதாபங்களும் புல்லின்மேல் பனித்துளிபோலாகி விட்டது. வாழ்த்துக்கள். நான் உங்களை ஜெயபாரதன்போல் கனடாவுக்குச் செல்லவோ பொருளாதாரத்தில் மேம்படவோ சொல்லவில்லை. அவரைப்போல் தாகூரை மொழியாக்கம் செய்யலாமென்றுதான் சொன்னேன். நன்றி, புனைப்பெயரில்.

  2. Avatar
   punai peyaril says:

   MAS( Mutual Appreciation Society) — அருமையான குறீயீடு. வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், “ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்கய்யா… “ என்று. இது அரசியல் , சினிமாவில் சகஜமான ஒன்று. இலக்கியத்தில் இதை வர விடவே கூடாது. சோ, சுப்புடு போன்றவர்களின் அனுபவம் அடுத்த தலைமுறையிலும் விமர்சக நிலையில் தொடர வேண்டும். ஒரு முறை, சுப்புடு, மிகப் பெரிய தொழிலதிபர்/ செல்வந்தர் வீட்டுப் பெண் நாட்டிய அரங்கேற்றத்திற்கு வந்தார் – பெரும்பாலான நேரங்கள் போல் அழையா விருந்தாளியாக பார்வையாளனாக..- பின் விமர்சனம் எழுதினார், “அந்தப் பெண் எங்க ஆடுச்சு… நட்டுவாங்மில்ல… நட்டுவாக்காளி கடிச்சாப்புல ஆடிச்சு என்று… “ இந்த விமர்சனத்தில் காயப்பட்டாலோ அல்லது அழுதிருந்தாலோ அது சுப்புடு தாக்கினார் என்று அர்த்தமல்ல… அந்த பெண் நடனத்தின் தரம் அது தான்… ஒரு வேளை அதை சவாலாக கொண்டு பின் அந்தப் பெண் நாட்டிய தாரகையாக ஆகியிருக்கலாம்.. அல்லது அழுகைதாரா வாக ஆகியிருக்கலாம்… அது வேறு. ஆனால், சுப்புடு ஆஹோ ஓஹோ என்று எழுதியிருந்தால் டில்லியில் கடைசிகாலத்தில் பண்ணை வீட்டில் வாழ்ந்திருப்பார். நான் ஆணாதிக்கவாதியல்ல… என்னிடம் ஆலோசனை பெற்ற பல பெண்கள் வாழ்வின் உன்னத நிலையில் உலகின் பல பகுதிகளில் சிறப்பாக வாழ்கிறார்கள். ஆன்ம தேடல் என்று என்னிடம் வந்தவர்கள் உண்டு. என் படைப்பு ஒன்றைப் படித்து என்னை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று தொலைதூரத்தில் இருந்து ஒரு பெண் வந்திருக்கிறாள்.

 7. Avatar
  Kavya says:

  இரண்டாவது வரியில் “கொள்வேனா” அல்லது “கொள்ளேனா?”

  முதலிரண்டு பத்திகளும் சரி; இறுதிப்பத்தியில் சொல்லப்பட்டக் கருத்து ஒட்டாமல் வேறெதையோச் சொல்கிறதே!

  ஒரிஜனலைப்படித்தால் மட்டுமே ஜெயபாரதன் ஒட்டாமல் பண்ணினாரா அல்லது தாகூரா எனத்தெரியலாம். லிங்க் கொடுத்தா நல்லாயிருக்கும்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   +++++++++++++++++++++++++
   பாட்டு : 90 தாகூர் தன் 49 ஆம் வயதில் “ராஜா” என்னும் பாட்டு நாடகத்தில் ஒரு பாகமாக எழுதியது (டிசம்பர் 1910).
   +++++++++++++++++++++++++

   Source

   1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

   இந்த நூல் வலையில் ஏற்றப் பட்டுள்ளதா என்று தெரியாது. இதே வினாக்கள் எனக்குள்ளும் எழுந்தன. நாடகப் பாடலாய் இருப்பதால், இதன் முன்பகுதியும், பின்பகுதியும் நூலில் இல்லை.

   மூலமே அப்படி.
   சி. ஜெயபாரதன்

 8. Avatar
  Kavya says:

  முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமர்சனம் செயவதற்கு ஒரு தகுதி வேண்டும். அஃதில் ஒன்றுதான் காயதல் உவத்தல் இன்றி எழுதுவது. இது ஒரு முகந்தெரியா எழுத்தாளரின் படைப்பைச் செய்யும் போது சாத்தியம். தெரிந்தவரென்றால் இல்லை. பின்னர் படைப்புக்கள் வேறுபாட்டிற்கிணங்க விமர்சகர்களும் மாறுவர். நாட்டிய விமர்சகரான சுப்புடு இலக்கிய விமர்ச்கராக முடியாது. கதையையோ நாவலையோ விமர்சிப்பவர் கவிதையை நன்கு விமர்சிப்பாரென்று சொல்ல்முடியாது. ஏனெனில் இரண்டுக்கும் சில வேறுபாடுள்ள அணுகுமுறையும் திறனாய்வும் தேவை. கவிதை சிலவரிகளில் பெரும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் உள்ளடக்குவது. இதனால், அது சொலாமல் விட்டு நம்மைச்சொல்லவைக்கும் தரமுடையது. என்வேதான், கவிதையை இரசிப்பவர்கள் பலமுறைகளில் அவர்களுக்குத்தகுந்த மாதிரி செய்து கொள்ளலாம். வெளிப்படைக்கவிதை – அதாவது நேரடியாகச் சொல்லும் கவிதை – பிர்ச்சினையில்லை. உள்வைத்து எழுதப்படும் கவிதைகள்தான் கடினம். ஆங்கிலத்தில் எலியட்டின் வேஸ்ட் லேண்டு பெரும்பிரச்சினைகளை விமர்சகர்களுக்குத் தந்து கொண்டேயிருக்கிறது. பலரும் பல மாதிரி. அவரிடமே கேட்டதற்கு ‘சரி ஒரு விளக்க நோட்ஸ’ போடுகிறேன் என்று போட்டுவிட்டார். அந்த நோட்ஸ் மேலும் குழப்பங்களையேத் தந்தது. அககவிதை உலகப்புகழ் பெறக்காரணம் – கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! – அது நம்மில் எழுப்பும் புதிராபுதிர்களாலேயே.

  கிடக்கட்டும். திண்ணையில் வரும் கவிதைகளில் சில இந்தரகத்தைச்சேரந்தவை. அவை வரவேற்கப்படவேண்டும். ஜெயரதன் மொழிபெயர்ப்பை மட்டும் செய்கிறார். கவிதையின் தரத்துக்கு அவர் பொறுப்பன்று. தாகூரின் கடைசிப்பத்தி முதலிரண்டோடு அவ்வளவு ஒத்துப்போகவில்லை என்பது அக்கவிதையின் மீது வைக்கப்படும் விமர்சனமே. இதற்குப்பதில் சொல்ல ஜெயரதன், ஒரு கவிதை இரசனையாளர் என்ற முறையில் மட்டுமே பதில் சொல்லமுடியும்.

  இப்போது, பாராட்டுக்களுக்கு வருவோம். பாராட்டுக்கள் அவசியம் ஒரு எழுத்தாளர்களுக்கு. அஃதொரு டானிக் போல. அப்பாராட்டுக்கள் உண்மையாக எழுதப்பட்டால். போலிக்காக தெரிந்தவர் என்ற முறையில் இருப்பின், எழுத்தாளர் அதை எடுத்துக்கொள்ளமாட்டார்.

  ஜெயரதனின் மொழிபெயர்ப்பைத்தான் படிக்கிறோம். நன்றாகவே சொற்களைத்தேர்ந்தெடுக்கிறார். எனவே மொழிபெயர்ப்புக்கு பாராட்டுக்கள் என்றுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். மாறாக கவிதைகே பாராட்டு என்றால், தாகூர் வந்துதான் நன்றிகள் சொல்லவேண்டும்.

  My own motto in writing criticism is: THINK ONCE TO DENOUNCE; TWICE TO PRAISE.
  சிறுவர்களைத்தவிர, பெரியவர்கள் எவரையும் பாராட்டுவது அபூர்வமாகத்தான் இருக்கும். This is a personal principle, not for any one else.

 9. Avatar
  Kavya says:

  அதே சமயம், எவரும் எதைப்பற்றியும் தங்களுக்குத்தோன்றியதைச்சொல்லலாம். எ.கா நாட்டியம், இசை, ஓவியம். எவரும் நாட்டிய நிகழ்ச்சிக்குச்சென்று இரசிக்கலாம். பெண் மேடையைப்போட்டு உடைத்தால், ஒரு யானை குதித்தது போலிருந்தது என்றும், இசை பாடுகிறேன் என்று கூவியதை, கோட்டானைகேட்டது போலிருந்ததென்றும், ஒவியமா இது கோழி கிறுக்கல் போலிருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் இக்கருத்துக்களுக்கும் ஒரு தேர்ந்த திறனாயவாளரின் கருத்துக்களும் வேறானதாக இருக்கும் அல்லது இருக்கலாம். எ.கா பிகாசோவின் ஓவியம் பொதுவாக எல்லாருக்கும் கிறுக்கல்களே. ஓவியத்தின் திறனாய்வாளருக்கு அது ஒரு மாபெரும் உலகத்தரம் வாயந்த படைப்பன்றோ!

  பொதுமக்கள் தங்கள் இரசனை திறனாய்வாளரின் இரசனையுடனிருந்து மாறுபடும் என்பதை உணர்ந்து அத்திறனாய்வாளர்களைத் தனியே படைப்பாளிகளிடம் அவர்களிருவர் பாடு என்று விட்டு விடவேண்டும். பொதுமக்களின் இரசனை பல கூறுகளைக்கவனிக்காமல் விட்டுவிடும். அல்லது அவர்களால் கவனிக்க முடியாது.

  இல்லாவிட்டால் என்னவாகும்? எ.கா. ஒரு நடிகனை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். காட்டமான ஒன்றாக இருப்பின் அவர் இரசிகர் கூட்டம் என்னைக்கொன்றே போட்டு விடும். இல்லையா? அங்காவது அந்த இரசிகர்கள் தெருமக்கள். கல்லாதவர் பலர். ஆனால், திண்ணை போன்ற தளத்திலும், ஊடுறுவி அவருக்குப்பிடித்தவை விமர்ச்னம் பண்ணும்போது புகுந்து தாக்குவதை நாம் பார்க்கிறோமல்லவா?.

 10. Avatar
  இளங்கோ says:

  */புனை பெயரில் ஒளிந்து கொண்டு பிறர் மீது கல்லை விட்டெறியும் பின்னோட்டவாதி/* இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா!

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   நண்பர் இளங்கோ,

   மொட்டைக் கடிதம் போட்டுச் சீண்டுபவனும், தன்னை யாரென்று சொல்லாமல் போனில் அடிக்கடிப் பிறரை மிரட்டுபவனும், கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் பெண் சடையை இழுப்பவனும், புனை பெயரில் புழுதி அள்ளித் திண்ணைப் பின்னோட்டத்தில் பூசுபவனும் அநாகரீக வலைஞர் வரிசையில் வருபவர்கள்.
   சி. ஜெயபாரதன்.

 11. Avatar
  punai peyaril says:

  இனியாவது அடுத்தவர் தட்டைப் பார்க்காமல் இருப்பது நல்லது.–> வீட்டுக்குள்ள தட்டில எத வச்சிருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை…. தெருவில் வந்து காட்டினால், திண்ணையில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லத்தான் செய்வார்கள்… படைக்கப்பட்டபின் எழுத்து பாரதியே ஆனாலும் பொதுவன்றோ…

 12. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  மதிப்பிற்குரிய திரு புனைபெயரில் அவர்களுக்கு,
  எனது கதையில் குறைகளை, மாற்றத்தை, கருத்தாகக் கூறுங்கள்…தங்கள் மூலமாகத் எனது தவறை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையும். அதை மகிழ்வோடு வரவேற்கிறேன்.
  நான் படித்து, அறிந்து கொண்டு எழுதும் எனது கருத்தை ஜால்ரா என்று கிண்டல் செய்யாதீர்கள்.எனது பின்னூட்டம் நான் படித்த படைப்பிற்கு மட்டும் சம்பந்தப் பட்டது. அதைத்தான் சொன்னேன். “அடுத்தவர் தட்டு என்று”.
  தங்களின் பரந்த இலக்கிய அறிவையும், செறிந்த ஞானத்தையும் தங்களது பல விதமான பின்னூட்டங்களைப் படித்து
  வியந்திருக்கிறேன். தங்களிடம் தர்க்கம் செய்யும் தகுதியோ, ஞானமோ,விருப்பமோ எனக்கில்லை.
  தங்களின் எந்த கருத்தையும் ஏற்கிறேன். நன்றி.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 13. Avatar
  ஆனந்தன் says:

  ஜெய’ஸ்ரி’ ஷங்கர் (குறிப்பிட்ட எழுத்திற்கான விசை எது?)பரந்த இலக்கிய அறிவு; செறிந்த ஞானம்; உங்களுடைய வியப்பு… உண்மையாகவே நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? ஏனென்றால் அதை அங்கதமாக எடுத்துக்கொள்வதற்கான எந்த குறியீடுகளையும் நீங்கள் தரவில்லையே என்பதற்காகக் கேட்கிறேன்.

 14. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  மதிப்பிற்குரிய ஆனந்தன் அவர்களுக்கு,

  எகலப்பையில் – ஸ்ரீ (shree)
  சரி.இனி…உங்கள் சந்தேகம்.:அதற்கான பதில்.

  உண்மையாகவே அப்படித்தான் நினைக்கிறன்.
  என்னை ஏதோ சொல்கிறார் என்பதால், அவருக்கு இருக்கும்
  திறமைகளை என்னால் மறுத்து ஏற்காமல் தவிர்ப்பது சரியில்லையே.

  அங்கதமாகச் சொல்ல அவசியம் இல்லை என்று எண்ணினேன்…
  எனக்குப் புரிந்தது உங்களுக்கு ஏற்கனவே புரிந்திருக்கலாம்.அல்லது நீங்களும்
  படித்தால் புரியலாம்.

  எனக்கு நன்கு தெரியாததை என்னால் எதிர்க்க தைரியம் வராது.
  அரசியல்,சமூகம் போன்றவற்றில் அவரின் பின்னூட்ட பங்கீடுகளில்
  விவாதிக்கும் விதத்தைப் பார்த்து நான் புரிந்து கொண்டேன்..(முந்தைய
  பதிவுகள்) நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள்.

  அறிவின் செறிவு இருந்தால் தான் களத்தில் குதிக்க முடியும்.
  நீச்சல் தெரியாத எவரும் ஆழமான நீரில் குதிப்பார்களா?

  நன்றி.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

  1. Avatar
   punaipeyaril says:

   எது எப்படியோ நீங்கள் நல்மணம் கொண்டவர். நீங்கள் கூறும் அளவிற்கு எனக்கு இலக்கிய அறிவு கிடையாது. நான் பாரதியின் பாடலால் வளர்ப்பு பெற்ற ஒரு அக்னி குஞ்சு.. அது , சரி, இருக்கட்டும்… கதைகளுக்கு இனி பின்னூட்டம் இடுதல் தவிர்க்கிறேன். கதைகளுக்கு மட்டுமே :) நன்றி..

 15. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  அன்பின் திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு,

  மன்னிக்க வேண்டும்.தங்களின் மொழிபெயர்ப்புக் கவிதையைப்
  படித்து பின்னூட்டம் இட வந்துவிட்டு திசை
  மாறிப் போனது.

  வழக்கம் போலவே…தாகூர் இதிலும் தந்து காதல் முத்திரையை
  அவர் அவளுக்கு கழுத்தணியாக கவி அணி அனுப்பி உருகி இருக்கிறார்.
  நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதையும் வரிகளும் அற்புதம்.
  உங்கள் மூலமாகத் தாகூரின் எழுத்தின் சிறப்பை உணர முடிகிறது.
  மிக்க நன்றி
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *