தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !

This entry is part 11 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஆழ்ந்த உறக்கத்தில்
மூழ்கி யுள்ள போதென்
அருகில் வந்தமர்ந்தான் அவன்,
ஆயினும்
நித்திரை யிலிருந்து நான்
விழித்தெழ வில்லை !
என்னே
எந்தன் சாபக் கேடானத் தூக்கம்?
அந்தோ
வருந்தி வருவோனே !
அருகில் அவன் வந்த
தருணம்,
நள்ளிரவு ஊன்றிய நேரம் !
கரங்களில்
யாழினை ஏந்தி அவனது,
கை விரல்கள் மீட்டிய
இன்னிசைக் கானங்களில் மனம்
ஒன்றிப் போய்ப்
பின்னிக் கிடந்தன
என் கனவுகள் !

விழித் தெழுந்தேன்
தென் திசைக் காற்று மூர்க்கமாய்
வீசி அளித்தது விடுதலை !
காற்றின் நறுமணம் திசை
மாறிடும் !
இருளில் அது நிரம்பி
என்னைச் சுற்றிக் கொண்டது !
அந்தோ !
என் இரவுகள் அனைத்தும்
ஏன் கடந்து போயின
எனக்கு ?
அவன் மூச்சு உறங்கிடும்
என்மேல் படும் போது
அவனது காட்சி
எனக்கு எப்போதும்
தவறிப் போகுது ஏன் ?

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 267 தாகூர் தன் 49 ஆம் வயதில் (ஏப்ரல் 1910) எழுதிப் பின்னால் கீதாஞ்சலித் தொகுப்புப் பாடலுக்கு ஆங்கிலத்தில் தானே 1912 இல் மொழிபெயர்த்தது
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 6, 2012

Series Navigationதமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012பாற்சிப்பிகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *