என்ன செய்வார்….இனி..!

This entry is part 27 of 37 in the series 2 செப்டம்பர் 2012

அருமை மகனின்
படுத்தும் சேட்டையால்
பக்கத்து வீட்டு பையன்
பங்காளி  ஆனான்
அவனுக்கு…!
அடுத்த வீட்டுக்காரியிடம்
அடுத்தடுத்து காபி பொடி, சர்க்கரை
கடன் வாங்க… அவளும்
உடன் பேச்சை நிறுத்தினாள்
அடுத்த வீட்டுக்காரரிடம்
நான் மட்டும்
நட்பை வளர்க்க
யார் கண் பட்டதோ
ஊர் கண் பட்டதோ
ஒதுங்கும் கழிவு நீரால்
அதிலும் ஓட்டை விழ…!
விரிசல் நட்பால்
பிரிந்தன வீடுகள்
பேச்சுகள் அற்று
நிசப்தமாய் இரு வீடுகள்..!
அனைத்தையும் வெட்டிய
அடுத்த வீட்டுக்காரர்
இருவரும் இணைந்தே – வீட்டின்
இடையே வளர்த்த
ஒட்டு மாங்கனி மரத்தை
வெட்டி விடுவாரோ
விட்டு வைப்பாரோ
என்ன செய்வார்….இனி..!
Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….
author

ரிஷ்வன்

Similar Posts

6 Comments

 1. Avatar
  இளங்கோ says:

  அந்த மாமரம் பாவமில்ல.. யார் சொந்தக்காரர், யார் அசல் என்று புரியாமல் பரிதவிக்கும் இனி மேல..

 2. Avatar
  punaipeyaril says:

  காப்பி பொடி கடன் வாங்குவதை நிறுத்தி, கழிவு நீருக்கு முன்னெடுத்து தீர்வு கண்டால், மாமரம் மட்டுமல்ல, மாமனிதராக இருவரும் வாழ்வீர்கள். கவிதை நன்று…

 3. Avatar
  Kavya says:

  “Something there is that doesn’t love a wall” begins the poem ‘Mending Wall” of Robert Frost, the American Poet. It is a famous poem: famous for provocation of thoughts.

  Rishvan’s poem provokes some thoughts. A poem should be provocative. If not, it is dull poetry encroaching the valuable but meager space in Thinnai.

  Our concept of living with our neighbours is different from the western concept where they erect clear fences because they believe Good Fences make Good Neighbours.

  We don’t believe it. So, we go all out to cultivate intimacy with our next door neighbour. Or at least we begin with that optimism of being intimate only to burn our fingers later and to feel sorry for our misadventure..

  Optimism is the tragedy with us in social relationship of living together. We don’t want to give spaces to neighbours. If our neighbour desires space and attempts to cultivate one, we become suspicious of him. We even attempt to tarnish his reputation in the neighbourhood. We don’t understand neighbor is different from neighbourhood. The former is an individual; the latter is a team. Individuals finally make up a team, no doubt; but remain individuals forever. In other words, the individuality doesn’t get lost in group. One can feel lonely in a crowd of thousands, cant one?

  Here, in this poem, it is wrong for the poet rishvan to hope for relationship of togetherness. Good neighborliness does not mean he should come to your house and u should go there. It does not mean your child and his should always play together with his amicably. It does not mean your wife’s pestering the neighbor for various trivia and, if denied, calling them names; or straining the relationship. It does not mean that you should be so uncivil enough to let the drainage overflow. It does not mean the tree you planted together should remain a symbol of your closeness forever.

  All wrong. A bad way of living rishavan. No wonder, the relationship will be strained leaving you asking sorrowfully: Why so? Is theren’t a way out to bridge the gap?

  The right way is to give space. Be civilized. To be civilized is to live as individuals first allowing your neighbour to live so for themselves.

  Good Fences make good neighbors. Fences are important. Your poem negates this universal truth.

 4. Avatar
  லெட்சுமணன் says:

  “Sun Rises in the East” இது போன்ற உண்மைகளைத்தான் “Universal Truths” என்று சொல்ல முடியும்.

  கலாச்சாரம் என்பது ஒரு நாட்டிற்குள், ஒரு ஊருக்குள், ஒரே வீட்டிற்குள் எப்படி எல்லாம் இருக்கும் என்பது தங்களுக்கு தெரியாத என்ன?

  “Cultural practices at one place r despicable in another place” – இது நான் சொல்லலை நீங்க சொன்னது.

  வாழும் வழிமுறைகளை எல்லாம் Universal Truth என்று சொல்லவே முடியாது. முதலில் உங்களால் அவற்றை வரையறுக்கவே முடியாது.

  இதை எல்லாம் காலம் தாங்க முடிவு செய்யும். சரி, தவறு, கலாச்சாரம் எல்லாம் காலத்தின் கையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *