ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …

author
2
0 minutes, 8 seconds Read
This entry is part 6 of 41 in the series 23 செப்டம்பர் 2012

புனைப்பெயரில்

——————-

எனக்கு பொருளாதார, இன்பெலெஷன் ரீதியாக பேசத் தெரியாது… ஆனால், சமூக ரீதியாக சில வினாக்கள்…

 

என்னைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்களும் இந்த இடைத் தரக பன்னாடைகளும் ஒன்றுதான்.

 

சில்லறை கடைக்காரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்..?

 

ஆனா, என் கேள்வி வேறு…

நீங்கள்  காய்கறி கடையோ, பலசரக்கு கடையோ திறப்பதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட ஜாதியினராக இருந்தால் தான் முடியும்…

அதனால், தான் நாடார் கடைகள் இருக்கும். அதை விட்டால் முஸ்லீம் கடைகள் இருக்கும்.. செட்டியார்கள் குறிப்பிட்ட சில கடைகளில் இருப்பார்.

அது மட்டுமல், சேட்டு சில வகையான கடைகள் வைத்திருப்பார்.

காருக்கு டயர் , போல்ட் தொழிலில் சிங்கும், வடக்கத்தியரும் அதிகமாக இருப்பர்.

நெட்வொர்க் வைத்து பிறர் நுழைய முடியாமல் வைத்திருப்பர்.

அதுமட்டுமல்ல.

டீக்கடை என்றவுடன் நாயர் தான் ஞாபகம் வருவார்.

முனியாண்டி விலாஸும் குறிப்பிட்ட தமிழ் தென்பகுதி ஊரில் இருந்து வந்த தெலுங்கர் தான் இருப்பர்.

 

அந்தக்காலத்து பிறாமணாள் கஃபே தாண்டி இப்போ எல்லா ஜாதியினரும் , ஜாதி அடையாளத்துடன் ஹோட்டல்கள்.

தேவர் மெஸ், கோனார் மெஸ் , செட்டியார் ஹோட்டல், என்று இன்றும் இருக்கிறது.

ஜாதி பெயரில் தெருவுக்கு பெயர் கூடாது என்று அதே தெருக்களில் ஜாதிய பெயருடன் உணவகம்.

 

அருந்ததியர் மெஸ், தலித் மெஸ் என்று காண முடிவதில்லை.

 

கடற்கரையோர மீன் கடைகளில்,  பரவர் மெஸ் கிடையாது.

 

அப்ப இது என்ன மனநிலை…?

 

அதே மாதிரி, சரவணா ஸ்டோர், சரவணபவன் கடைகளுக்கு கூட அண்ணாச்சி கடை என்று இன்னொரு புழக்கப் பெயர் இருக்கும்.

 

விஜிபி அண்ணாச்சியிடம் , 500 ரூபாய் கொடுத்து குமரிஅனந்தன் தனது தம்பி வசந்தகுமாரை வேலைக்குச் சேர்த்து விட்டாரம்.

அந்த விஜிபி அண்ணாச்சியிடம் எத்தனை பிற ஜாதியினர் வளர்ந்தனர்…?

 

எலெக்ட்ரானிக்ஸ் கடைகளில் ஒன்னு முஸ்லீம் இருபார் அல்லது வடக்கத்தியன்.

இறைவனின் “மெர்சியால்”, சில மெர்சி எலெக்ட்ரானிக்ஸ் என்றிருக்கும்.

 

இவனுங்க எல்லோருக்கும் இந்த ஒற்றுமை தாண்டி இன்னொரு ஒற்றுமையும் இருக்கும் –

பில் போட மாட்டானுங்க.

முன்பொருமுறை பெட்டிக் கடைகளுக்கு வருட குறைந்த பட்ச வரியாக ரூ.1500/- போடப்பட்ட போது , குய்யோ முறையோ என்று கத்தி, ஊர்வலம் போனாங்க…

 

ஆனா இவங்க நேர்மை எப்படி…

குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் ஓரத்தில் ஒரு காய்கறிகடையைப் போட்டு பல வருடம் பின் பணம் வாங்கிக் கொண்டு தான் காலி செய்வாங்க… அவ்வளவு யோக்கியர்கள்.

 

கோயம்பேடு, பொள்ளாச்சி சந்தை, எதுவானாலும் முதலிலிருந்து கடைசி வரை பில் கிடையாது.

 

உழவர் சந்தை அடுத்த ஆட்சியில் குட்பை சொன்ன போது, உழவர் சந்தை தோற்றத்துடன் அங்கங்கு கடைகள் வந்தன.. தொங்கும் சிலேட்டில் விலை, டோக்கன் சிஸ்டம், பில் என்று பல இருந்தன…

துக்கடாவாக இருந்தவர்கள் , குரூப்பானார்கள்…

 

பின் இந்த ரிலயன்ஸ் தொடர் கடைகள் வந்த போது அவை பல இடங்களில் தாக்கப்பட்டது…

ஏன்..?

இவர்கள் அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று…

ஆனால், என்ன நடந்தது…?

 

ஏசி வசதி, பில், டீல், ரிபேட், ஆஃபர் என பல வார்த்தகள் தமிழர்கள் சாமான்யரின் வாழ்வில் சாதாரணமாக புளங்கும் வார்த்தைகள் ஆயின…

அதற்கப்புறம், ஜாதி மத பேதமின்றி, அங்கங்கு, பழமுதிர் நிலையம், சோலை, பிரஷ் புரூட் & வெஜி என பல பல கடைகள் வந்தன…

முக்கியமாய் கணக்கு காண்பிக்கிறார்களோ இல்லையோ பில் போட்டார்கள்..

எல்லா ஜாதிக்கரனுக்கும் வேலை, டிரஸ் கோட் என்றானது. ஒரு நாள் சங்கம் இவர்களும் வைப்பார்கள்.. பி எஃப் என்று வரும்.

அது தவிர்க்க காண்ட்ராக்ட் முறையில் தற்போது வேலைக்கு ஆள்.

அதனால் தான் நெல்லை ஹோட்டலில் பீகாரி “ சாம்பார்.. வேண்ம்ம்மாஆ” என்கிறான்.

அதே சமயத்தில் தள்ளுவண்டி, டிஸ்பிளே என்று அமெரிக்கா போய் வருவர் சொல்லும் போது அன்னாந்து கேட்ட கதைகள் இன்று கடைசி குடிமகன் வரைக்கும் சுகமாய்…

 

அண்டாடம் காச்சி வழக்கம் போல் அன்னாந்து பார்த்துக் கொண்டு..

ஐ.டி யில் வேலைப் பார்ப்பவனும், ஐ.டி கட்டாதவனும் இந்த சொர்க்க உலகில், “எக்ஸ்க்யூஸ் மீ.. “என்று ஒரு பாட்டிலில் இன்கிரிடியண்ட்ஸ் பார்த்து சாப்பிட்டு விட்டு சாயங்காலமோ, காலையிலோ VLCC யில் பருத்து விட்ட இடை டயரை குறைக்கு காரில் டயர் தேய ஓடிக் கொண்டு ( ஓடுறது காருங்க… )

 

சி –னா த-னாவுக்கு தான் பொறுக்காதே… நிதியானவுடன் ஸ்டாக் மார்க்கெட் எகிற வைக்க வேண்டுமே அவர்… அப்ப தானே பொழப்பு நடக்கும்…

பிடிச்சான்யா  FDI  மேட்டர…

இடுப்பில ஒரு துணி உருண்டையுடன். ஒரு சேலைய போர்த்திக் கொண்டு விசுக் விசுக்குன்னு நடக்கும் மம்தா மட்டும் குதிக்குது…

ஏன்..?

அதுக்கு பிசினஸ் கிடையாது..

சரியோ தப்போ எல்லா சமூக மேட்டர் வேலை தான் அதுக்கு..

ஆனா, நம்ம எம்பிக்கள்..?

விஜய் மல்லையா- சாரயம் முதல் சாகச விமானம் வரை

ஜெகத்ரட்ரசனுக்கு கல்லூரி, பள்ளி, கிரானைட்…

நெப்போலியன், கம்யூட்டர் பிஸினஸ், ஃபார்ம் எக்ஸ்போர்ட்..

கனியக்கா – சொல்லவே வேண்டாம்

நிதின் கட்காரி –தொப்பையே சொல்லும் தொழில் அதிபர் என்று..

இது ஒரு சிறு சாம்பிள்…

பின்னூட்டமாக் உங்களுக்கு தெரிந்த எந்த எம்பி எந்த தொழில் என பட்டியலிடலாம்…

 

ஏதாவது வகையில் நாம் என்றும் அடிமை தான் , ஏன், காட்டிக் கொடுப்போரும் கூட்டிக் கொடுப்போரும் இங்கு அரசியலில் அதிகமாய்…

 

நானே சொன்னால் எப்படி.. பின்னூட்டத்தில் நீங்களும் சொல்லுங்கள்…

“இளிச்சவாயன் நாமே..”

 

Series Navigationகேட்பினும் பெரிது கேள்! – புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -44 (முற்றும்)
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  Nalliah Thayabharan says:

  அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

  கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது, இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

  உலகம்பூராகவும் அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட

  சமூகம் உருவாக்கப்படுகின்றது. மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

  – நல்லையா தயாபரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *